/* */

குழந்தைக்கு 6 மாதம் ஆயாச்சா..? அப்ப.. இந்த உணவுகளை கொடுக்கலாம்..!

6 Month Baby Food Recipes in Tamil Language-ஒவ்வொரு காலகட்டத்திலும் குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளவேண்டியது தாயின் அவசிய கடமைகளில் ஒன்றாகும்.

HIGHLIGHTS

குழந்தைக்கு 6 மாதம் ஆயாச்சா..? அப்ப.. இந்த உணவுகளை கொடுக்கலாம்..!
X

6 Month Baby Food Recipes in Tamil Language-குட்டிக்குழந்தைக்கு தாயாகிய சின்ன அம்மாக்களே.. உங்கள் குழந்தைக்கு இப்போது 6 வது மாதம் ஆகிவிட்டது. அதாவது குட்டிக்குழந்தை இப்போது திட உணவுகளை சாப்பிடத் தயாராகிவிட்டார்கள் என்று அர்த்தம். 6 மாதம் கடந்துவிட்டால் நீங்கள் உங்கள் குழந்தைக்கு திட உணவை கொடுக்கத் தொடங்கிவிடலாம். ஆனால் ஒரு முக்கியமான விஷயம் நீங்கள் 3 நாள் விதியை பின்பற்றுவது அவசியம்.



திட உணவை கொடுக்கும் போது அது அவர்களுக்கு கூடுதல் உணவாகத் தான் இருக்க வேண்டுமே தவிர அதுவே முழுமையான உணவாகிவிடக்கூடாது. தாய்ப்பால் தான் குழந்தைக்கு பிரதான உணவு என்பதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

குழந்தைக்கு உணவு கொடுக்க பயன்படுத்தும் பாத்திரங்களை வெந்நீரில் நன்றாக கழுவிய பின் பயன்படுத்துவது குழந்தைக்கு பாதுகாப்பு.

குழந்தைக்கு ஒருமுறை கொடுக்கும்போது சுமார் 90 மில்லி உணவை மட்டுமே கொடுக்க வேண்டும். அதுவும் ஒரு நாளைக்கு 2 முறை மட்டுமே கொடுக்க வேண்டும்.

6 மாத குழந்தைக்கு என்னென்ன உணவுகளை கொடுக்க வேண்டும் என்ற விபரம் கீழே தரப்பட்டுள்ளது. அதை பின்பற்றி உணவினை கொடுங்கள்.

முதல் வாரம் :

திங்கள் :

நாளொன்றுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் வீதம்( முதன்முதலில் கொடுக்க வேக வைத்து மசித்த ஆப்பிள் ஏற்றது) இத்துடன் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்து தரலாம்.

செவ்வாய்

வேகவைத்து மசித்த ஆப்பிளை 2 டேபிள் ஸ்பூன் வீதம் 2 முறை கொடுக்க வேண்டும்.

புதன்

வேகவைத்து மசித்த ஆப்பிளை 3 டேபிள் ஸ்பூன் வீதம் 2 முறை கொடுக்க வேண்டும்.

வியாழன்

ஆப்பிளுக்கு பிறகு நீங்கள் காய்கறிகளை கொடுக்க ஆரம்பிக்கலாம். அதில் கேரட் குழந்தைக்கு ஏற்ற உணவு. கேரட்டை வேக வைத்து மசித்தோ அல்லது ஜூஸாகவோ ஒரு டேபிள் ஸ்பூன் என ஒருவேளை தரலாம்.

வெள்ளி

வேகவைத்து மசித்த கேரட் அல்லது ஜூஸை 2 டேபிள் ஸ்பூன் வீதம் 2 முறை தரவும்

சனி

வேகவைத்து மசித்த கேரட் அல்லது ஜூஸை 3 டேபிள் ஸ்பூன் என 2 வேளை தரவும்.

ஞாயிறு

காலையில் வேகவைத்து மசித்த ஆப்பிள்… மாலையில் வேகவைத்து மசித்த கேரட் அல்லது ஜூஸ்.


2வது வாரம்:

குழந்தைக்கு உணவு கொடுக்கும் நேரத்தை உங்கள் வசதிக்கேற்ற படி அமைத்துக் கொள்ளலாம்…

பொதுவாக காலை 11 மணிக்கும், பிற்பகல் 3 மணிக்கும் உணவு கொடுப்பது நல்லது..

திங்கள்

11 மணிக்கு வேகவைத்து மசித்த கேரட் 3 மணிக்கு அரிசி கஞ்சி

செவ்வாய்

11 மணிக்கு ரவை கீர் 3 மணிக்கு வேகவைத்து மசித்த ஆப்பிள்

புதன்

11 மணிக்கு வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு 3 மணிக்கு பார்லி கஞ்சி

வியாழன்

11 மணிக்கு வேகவைத்து மசித்த பருப்பு 3 மணிக்கு வேகவைத்து மசித்த பேரிக்காய்

வெள்ளி

11 மணிக்கு சப்போட்டா கூழ் 3 மணிக்கு கேரட் பீட்ரூட் சூப்

சனி

11 மணிக்கு கேரட் ஜூஸ் 3 மணிக்கு வேகவைத்து மசித்த கேரட்பேரிக்காய்

ஞாயிறு

11 மணிக்கு வேகவைத்து மசித்த பரங்கிக்காய் 3 மணிக்கு திராட்சை ஜூஸ்


3வது வாரம்:

திங்கள்

11 மணிக்கு அரிசி கஞ்சி 3 மணிக்கு ஆப்பிள் கூழ்

செவ்வாய்

11 மணிக்கு பார்லி வேகவைத்த நீர் 3 மணிக்கு வேகவைத்து மசித்த சுரைக்காய்

புதன்

11 மணிக்கு கேரட் ஜூஸ் 3 மணிக்கு வேகவைத்து மசித்த பீட்ரூட்

வியாழன்

11 மணிக்கு உருளைக்கிழங்கு சூப் 3 மணிக்கு ஏதேனும் தானிய வகை

வெள்ளி

11 மணிக்கு சர்க்கரைவள்ளி கிழங்கு மசித்தது 3 மணிக்கு ஓட்ஸ் கஞ்சி

சனி

11 மணிக்கு ஆரஞ்ச் ஜூஸ் 3 மணிக்கு வேகவைத்து மசித்த புடலங்காய்

ஞாயிறு

11 மணிக்கு மசித்த வாழைப்பழம் 3 மணிக்கு அரிசி கஞ்சி


4வது வாரம்:

திங்கள்

11 மணிக்கு துவரம்பருப்பு பூண்டு மசியல் 3 மணிக்கு பீட்ரூட் உருளைக்கிழங்கு மசித்தது

செவ்வாய்

11 மணிக்கு மசித்த அரிசி சாதம் 3 மணிக்கு வேகவைத்து மசித்த சுரைக்காய்

புதன்

11 மணிக்கு ஓட்ஸ் கீர் 3 மணிக்கு வேகவைத்து மசித்த பேரிக்காய்

வியாழன்

11 மணிக்கு வேகவை-த்து மசித்த கேரட் உருளை 3 மணிக்கு கோதுமை கஞ்சி

வெள்ளி

11 மணிக்கு வேகவைத்து மசித்த காய்கறிகள் 3 மணிக்கு திராட்சை ஜூஸ்

சனி

11 மணிக்கு பார்லி கஞ்சி வேகவைத்து 3 மணிக்கு மசித்த புடலங்காய்

ஞாயிறு

11 மணிக்கு கேரட் ஜூஸ் 3 மணிக்கு ரவை கீர்

ஆலோசனை

6 மாத குழந்தைக்கு என்னென்ன உணவு வகைகளை கொடுக்கலாம் என்பதற்கான மாதிரி அட்டவணை தான்

இது. இந்த பட்டியலை முழுமையாக நீங்கள் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை…

இந்த உணவு வகைகள் எல்லாம் உங்கள் குழந்தைக்கு ஒத்துக் கொள்கிறதா? என்பதை முதலில் பரிசோதிக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் உணவை எல்லாம் குழந்தை சாப்பிட வேண்டும் என நீங்கள் நினைப்பதுக் கூடாது. இதில் பொறுமை ரொம்பவே முக்கியம். குழந்தை தனக்கு ஏற்ற உணவை முழுமையாக சாப்பிட கூடுதலாக 2 மாதங்கள் கூட ஆகலாம் என்பதை மறந்துவிடக்கூடாது.


குழந்தைக்கு உணவு ஒத்துக் கொள்ளவில்லை என்பதை எப்படி கண்டறிவது?

நீங்கள் கொடுக்கும் உணவு குழந்தைக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் கீழ்கண்ட உபாதைகள் வரலாம் :

  • வயிற்றுப்போக்கு
  • மலச்சிக்கல்
  • வாந்தி
  • தோல் தடித்தல்
  • இடைவிடாத அழுகை(வயிற்று வலியின் காரணமாக)

உணவால் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

குறிப்பிட்ட ஒரு உணவின் மூலம் குழந்தைக்கு அலர்ஜி ஏற்பட்டால் உடனடியாக அந்த உணவை நிறுத்தி விட வேண்டும். 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதே உணவை கொடுக்கலாம். அப்போதும் நீங்கள் 3 நாள் சோதனையை பின்பற்றுவது அவசியம்.

மேலும் முழுமையான உணவுப்படியலை பெற உங்கள் குழந்தைநல மருத்துவரிடமும் ஆலோசனை பெறலாம்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Feb 2024 5:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  10. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!