/* */

11 புள்ளி வைத்து எத்தனை வகை கோலம் போடலாம்..? பாருங்க..!

Flower Pulli Kolam-கோலமா..? அதெல்லாம் எனக்கு போடத்தெரியாது என்று கூறுவதில் பல இளம்பெண்கள் பெருமை கொள்கின்றனர். ஆனால் அவ்வாறு கூறுவது, நம் பண்பாட்டுக்கான சிறுமை.

HIGHLIGHTS

Flower Pulli Kolam
X

Flower Pulli Kolam

Flower Pulli Kolam-கோலமிடுதல் என்ற ஒரு பழக்கம் சிறு உயிரினங்களுக்கு உணவு அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு முறையாகும். தமிழர்கள் கோலத்தை அரிசி மாவில்தான் போடுவார்கள். காரணம், அரிசி மாவினை எறும்பு போன்ற சிறு ஊர்வனங்கள் உணவாக எடுத்துச் செல்லும்.

இந்த உயரிய பண்பே கோலமிட தூண்டுதலாக இருந்தது. காலப்போக்கில் அது வெண்மை நிற கற்களை மாவாக்கி கோலம்போடும் முறை வந்துவிட்டது. ஆனால் இன்றும் கிராமங்களில் அரிசி மாவில் கோலமிடும் பழக்கம் உள்ளது.

அதிகாலை கோலம்

சூரியன் உதிப்பதற்கும் முன்னபே வாசல் பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போடுவது நமது கலை மற்றும் பண்பாடு ஆகும். வாசலில் கோலம் போடுவதால் வீட்டிற்கு ஓர் அழகு சேர்கிறது. பெண்கள் கோலம் போடுவதால் அவர்களின் பண்பு அதில் தெரிகிறது. பொறுப்பு மற்றும் பொறுமை வெளிப்படுகிறது.

வீட்டிற்கு வந்தவர்களுக்கு விருந்தோம்பல் அளித்து அவர்களை நன்கு கவனித்துக்கொள்வதால் அவளின் பண்பு வெளிப்படுகிறது. எத்தனை பொறுமை கொண்டவள் என்பது வெளிப்படுகிறது. அதைப்போலவே வாசலில் கோலம் போடுவதால் ஒரு பெண்ணின் திறமை வெளிப்படுகிறது. கோலம் போதுதான் ஒரு கலை.

கோலம் போட்ட வீட்டை பார்த்தாலே தனி ஒரு ஈர்ப்பு உண்டாகிறது. மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி வந்து சேர்கிறது. அரிசி மாவில் கோலம் போடுவதால் அது எறும்புகளுக்கு உணவாக மாறுகிறது. பண்டிகை நாட்களில் பலமணிநேரம் எடுத்து அழகாக வண்ண கோலங்கள் போடுவர். இந்த வண்ணக்கோலங்களை காண்பதைக் காரணம் காட்டி இளைஞர்கள் கோலமிடும் வண்ணமயில்களை கண்ணாறக்காண்பார்கள்.

பயிற்சி

மேலும் கோலம் போடுவதால் பெண்களுக்கு நல்ல உடல் பயிற்சி ஏற்படுகிறது. குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவதால் நரம்பு பலம் பெறுகிறது. இடுப்பு எலும்பு நல்ல வலிமை பெறுகிறது. மேலும் கோலம் போடுவது ஞாபகச் சக்திக்கு ஒரு பாடமாகிறது.

அழகான கோலம் போட்ட வீடு ஆலயத்துக்குச் சமமாக நினைப்பார்கள். அதனால் வீட்டிற்கு நன்மை சேரும், மங்களம் உண்டாகும், வீட்டிற்கு லட்சுமி தேவி வருவாள் என்று நம் வீட்டு பெரியவர்கள் கூறுவார்கள்.

வீட்டில் மங்களகரமான நிகழ்வு நடக்கையில் கோலத்தை வைத்தே விருந்தினரை அசத்தி விடுவார்கள். மேலும் கோலத்தின் நடுவில் மஞ்சள் அல்லது சாணம் பிடித்து அதன் மேல் பூசணி பூ வைப்பதால் கோலத்திற்கு இன்னும் அழகு சேரும்.

மறைந்துவரும் பாரம்பரியம்

பாரம்பரியமான நமது கோலம் போடும் கலையை பல பெண்கள் இன்று மறந்து நாகரிக மங்கையராக வலம் வருகின்றனர். நாகரிகம் என்பது வெறும் ஆடைகளிலும் பழக்கவழக்கங்களில் மட்டுமல்ல. நமது பண்பாட்டு கலாசாரங்களை காப்பாற்றுவதும்தான் என்பதை இக்கால இளம்பெண்கள் உணரவேண்டும்.

ஸ்டிக்கர் கோலம்

இன்று அடுக்கு மாடிகளில் வசிக்கும் பல பெண்கள் வாசலில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டி வைக்கிறார்கள். மேலும் விழா நாட்களில் கோலம் போட பல அச்சுகள் கொண்டு வாசலை அலங்கரித்து கொள்கிறார்கள்.

இன்று நம் பெண்கள் பலவிதமான பாரம்பரிய கலைகளை மறந்து வருகிறார்கள். கோலம் நமது பண்டைய கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஒரு மங்களகரமான நிகழ்வு. வீட்டில் நன்மை பெறுக வாசலில் அழகான கோலம் இடுவது மிகச்சிறந்தது. மேலும் அந்த வீட்டின் பெண்ணின் குடும்பத்திறனையும் வெளிப்படுத்துகிறது.

இந்த பண்பாட்டு கலாசாரத்தை மறக்காமல் இருப்பதற்காகவே இன்னும் கிராமங்களில் பொங்கல் தினத்தில் கோலப்போட்டிகள் நடத்துகின்றனர்.

இங்கு உங்களுக்காக 11 புள்ளிகளில் போடும் சில கோலங்கள் தரப்பட்டுள்ளன. வரைந்து பழகி, வாசலில் கோலமிடுங்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 30 March 2024 4:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  3. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  5. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  6. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  7. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  8. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  9. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்