/* */

அந்தியூர் வட்டத்தில், கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அந்தியூர் வட்டத்தில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு, இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ‌‌.

HIGHLIGHTS

அந்தியூர் வட்டத்தில், கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
X

அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் (கோப்பு படம்)

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தியூர் வட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் 8 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அந்தியூர் வட்டாட்சியர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் 11. அந்தியூர் அ, 12. நகலூர், 18. வேம்பத்தி ஆ, 11, அந்தியூர் ஆ, 06. வெள்ளிதிருப்பூர், 01. பர்கூர் அ, 18, வேம்பத்தி அ, 02. கொமராயனூர் ஆகிய எட்டு கிராமங்களுக்கான, கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இப்பணியிடங்களுக்கு இன சுழற்சி அடிப்படையில்,‌ 8 கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பொதுப்பிரிவு, அட்டவணை வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிக பட்சம், 37 வயதுக்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவுக்கு, 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணியிடம் காலியாக உள்ள கிராமத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் அல்லது அருகாமையில் உள்ள கிராமம், அந்தியூர் வட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு தமிழக அரசின் https:// www.tn.gov.in. வருவாய் நிர்வாகத் துறையின் https://cra.tn.gov.in, ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் https://erode.nic.in ஆகிய இணையதளங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விண்ணப்பதாரர்கள் தேர்வு முறை மற்றும் இதர விபரங்களை ஈரோடு மாவட்ட https://erode.nic.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

இணையதள வழியில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசிநாள்: 07.11.2022,

வாசித்தல் மற்றும் எழுதுதல் திறனறித் தேர்வு நாள்: 30.11.2022,

நேர்முகத் தேர்வு நாள்: 15.12.2022 மற்றும் 16.12.2022,

ஊதிய விகிதம் சிறப்புகால முறை ஊதியம் - ரூ.11,100-35,100.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறை:- https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-171 என்ற இணையதளத்திற்கு செல்லவும். விண்ணப்பதாரரின் பெயர், பாலினம், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் தங்களது புகைப்படம்,கையொப்பம், கல்வித் தகுதிச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமச் சான்றிதழ், சாதிச் சான்றிதழைப் பதிவேற்றவம் செய்ய வேண்டும். சான்றிதழ்கள் அனைத்தும் pdf-ல் 256 kb-க்குள் இருக்க வேண்டும்.

இதற்காக பெறப்படும் விண்ணப்பங்களை நவம்பர் 14-ம் தேதி பரிசீலித்து, முறையான நேர்காணல் நடத்தி டிசம்பர் 19-ம் தேதிக்குள் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும், தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை டிசம்பர் 19-ம் தேதி வெளியிட்டு, அன்றே பணி ஆணைகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்புச் சலுகை :

முன்னாள் இராவணுவத்தினர் தெரிவு நடத்தப்படும் ஆண்டின் ஜூலை முதல் நாள் அன்று 53 வயதிற்கு குறைந்த ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியினர்), பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) ஆகியோர் 48 வயதிற்கு குறைந்த "ஏனையோர்".

மாற்றுத்திறனாளிகள் மாற்றுத் திறனாளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பத்தாண்டு வரை வாயது வரம்புச் சலுகை பெற தகுதியுடையவராவர்கள். ஆனால், அவர் தேர்வு செய்யப்பட்டுள்ள பதவியினை திறமையுடன் செய்து முடிப்பதற்கு அவருடைய குறைபாடு தடையாக இல்லாமல் இருக்கிற தென்றால் தகுதியுடையவராவார்.

கல்வித்தகுதி:-

1. குறைந்தபட்ச கல்வித்தகுதி : 5-ஆம் வகுப்பு தேர்ச்சி, 2. தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இதர தகுதிகள்:

வண்டி ஓட்டுதல்/இயக்குதல் திறன் (Riding Driving Skill) , பணி நியமனம் செய்யப்படுவதற்கு அவருடைய ஒழுக்கமும் முன்வரலாறும் அவரைத்தகுதிப்படுத்துவனவாக இருக்க வேண்டும், ஆண் விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் உடையவராக இருத்தல் கூடாது. விண்ணப்பதாரர் அந்தியூர் வட்டத்தைச் சேர்ந்தவராகவும், அந்தியூர் வட்ட எல்லைக்குள் நிரந்தரமாக வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.

படிப்பு மற்றும் எழுதுதல் திறனறி தேர்வு:

படித்தல்: தமிழ் மற்றும் ஆங்கிலம் - 10 மதிப்பெண்

எழுதுதல்: தமிழ் மற்றும் ஆங்கிலம் - 30 மதிப்பெண்

மொத்தம் - 40 மதிப்பெண்.

தேர்வு செய்யும் முறை:-

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பெறப்படும் பட்டியல் மற்றும் நாளேடுகளில் வெளியிடப்படும் அறிவிக்கை மூலம் இணையதளம் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்களிலிருந்து இனசுழற்சி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் வினண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, திறனறிதல் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நியமன இட ஒதுக்கீட்டு விதியைப் பின்பற்றி தெரிவு செய்யப்படுவர்.

அறிவுரை:-

1. அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானதாகும். தெரிவு நடைபெறுவதற்கு முன்பு வரை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டதாகும்.

2. விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதுவதற்கும், சான்றிதழ் சரிபார்ப்புக்கும் மற்றும் நேர்காணல் தேர்விற்கும் தங்களது சொந்த செலவில் வரவேண்டும்.

3. இப்பதவியில் பணியமர்த்தப்படும் ஒவ்வொருவரும், பதவிப் பொறுப்பிலிருக்கும் கிராமத்தில்அப்பதவிப்பொறுப்பில் இருக்கும் காலம் வரை தொடர்ந்து வசிக்க வேண்டும்.

4. மத்திய அல்லது மாநில அரசின் கீழ் உள்ள நிறுவனங்கள் உள்ளாட்சி மன்றங்கள், பொதுத்துறை நிறுவளங்கள், சட்டத்தின் வாயிலாக நிறுவப்பட்ட நிறுவனங்கள், அரசுத் துறை கழகங்கள், பல்கலைக் கழகங்கள் முதலியவற்றில் முறையாகவோ /தற்காலிகமாகவோ பணிபுரிந்து வருவது/பணிபுரிந்தது தொடர்பான ஆவனங்களை கோரும்போது விண்ணப்பதாரர் சமர்ப்பிக்க வேண்டும்.

5. விண்ணப்பதாரர் பெயரில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருத்தல், கைதுசெய்யப்பட்டிருத்தல், குற்றத் தீர்ப்பு வழங்கப்பட்டிருத்தல், வேலைக்கு ஆட்கள் தெரிவுசெய்யும் ஏதேனும் ஒரு முகமையினால் தடை/தகுதியின்மை செய்யப்பட்டிருத்தல், ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருத்தல், கிளர்ச்சி அல்லது ஏதேனும் அரசியல் அமைப்பில் பங்கேற்பு, பாராளுமன்ற/சட்டமன்ற தேர்தலில் பங்கேற்றல் ஆகியவை குறித்த சரியான மற்றும் உண்மையான தகவல்களை விண்ணப்பதாரர் தெரிவிக்க வேண்டும்.தொடர்புடைய ஆவணங்களை சான்றிதழ் சரிபார்ப்பின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

6. இட ஒதுக்கீடு, வயது, கல்வித் தகுதி மற்றும் இதர அடிப்படைத் தகுதிகள் குறித்து விண்ணப்பதாரர் அளித்த விபரங்கள் தவறு எனத் தெரியவரும் பட்சத்தில், அத்தகைய விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதுடன், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 Oct 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  2. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  3. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  4. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  6. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  7. திருவள்ளூர்
    திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் மனு அளிக்க வந்த...
  8. வீடியோ
    Desperate ஆன SRH ஓனர் | பயந்து துள்ளி குதித்த Sakshi | #csk #srh...
  9. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  10. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்