/* */

world coffee rate hike உலக அளவில் 2 ஆண்டுகளில் உயர்ந்த காபி விலை ஏறுமுகத்தால் ....காபி பிரியர்கள் அதிர்ச்சி.....

world coffee rate hike காபி விளைச்சல் அதிகரித்தாலும் உலக அளவில் காபியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விலையும் உயர்ந்துள்ளது. அதாவது ரொபாஸ்டோ வகை காபியானது கிலோவுக்கு ரூ. 90 வரை உயர்ந்துள்ளதால் அன்றாடம் வாங்கி பயன்படுத்தும் நுகர்வோரின் சில்லரை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது

HIGHLIGHTS

world coffee rate hike  உலக அளவில் 2 ஆண்டுகளில் உயர்ந்த காபி விலை   ஏறுமுகத்தால் ....காபி பிரியர்கள் அதிர்ச்சி.....
X

world coffee rate hike

கடந்த இரண்டுஆண்டுகளில் மட்டும் அதாவது விளையக்கூடிய காபியின் விலையானது உயர்ந்துகொண்டே வருவதால் அதன் தயாரிப்பாளர்கள் திடீரென காபிதுாளின் விலையை உயர்த்திவிடுவதால் காபி பிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

காபி இது ஒரு உற்சாக பானம். காலை எழுந்தவுடன் ஒரு சிலருக்கு இதனைக் குடிக்காவிட்டால் வேலையே ஓடாது என்ற நிலையே இன்று உலக அளவில் பிரசித்தம்.உலக அளவில் ரொபாஸ்டா என்ற காபி வகையில் விலை காபி மற்றும் சிக்கரி விலை அதிகரிப்பால் நுகர்வோர் அன்றாடம் வாங்கி பயன்படுத்தும் காப்பி துாளின் விலையும் உயர்ந்துள்ளது.இதனால் நடுத்தர குடும்பத்தினர் உட்பட காபியை பயன்படுத்துவோர் அனைவருமே கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

world coffee rate hike


world coffee rate hike

உலகிலேயே அதிகமாக விற்று-வாங்கக்கூடிய, நிலத்தின் விளைபொருளாக உள்ளவற்றுள், பெட்ரோலியத்திற்கு அடுத்ததாக உள்ள இரண்டாவது பொருள் காப்பிதான். மொத்தமாக கடைவிலை மதிப்பில் (retail value) ஆண்டுக்கு 70 பில்லியன் ஐக்கிய அமெரிக்க நாடுகள் டாலர் ஆகும். காப்பி, உலகில் 50 க்கும் அதிகமான நாடுகளில் சற்றேறக்குறைய 10 மில்லியன் ஹெக்டேர்களில் பயிரிடப்படுகின்றது. இன்று ஏறத்தாழ 100 மில்லியன் மக்களின் வாழ்க்கை ஊதியம் காப்பிப் பயிரை ஒட்டி நடக்கின்றது

காப்பிச் செடியின் பேரினத்தில் 100 க்கும் அதிகமான இன வகைகள் உள்ளன. ஆனால் அவற்றுள் இரண்டே இரண்டு இனங்கள் மட்டுமே பயிரிடப்பட்டு, நீர்ம உணவுக்குப் பயன் படும் காப்பியாக உள்ளன. இவ்விரு இனங்களின் அறிவியல் வகைப்பாட்டுப் பெயர்கள் காப்பியா அராபிக்கா காப்பியா கன்னெஃவோரா காப்பியா ரொபஸ்ட்டா என்றும் இதற்கு மற்றொரு பெயர் உண்டு. காப்பிச் செடிப் பேரினம் ருபியாசியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் 600 பேரினங்களும் 13, 500 இனச்செடிவகைகளும் உள்ளன.இவ்வளவு வகைகள் இருந்தாலும் ரொபாஸ்டோ என்ற வகை காபியின் விலைதான் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் தான் இந்த விலையேற்றத்தினை நாம் சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

world coffee rate hike


world coffee rate hike

தமிழகத்தினைப் பொறுத்தவரை 88ஆயிரம் ஏக்கரில் காபி பயிரிடப்படுகிறது.அராபிகா என்ற வகையானது 72 ஆயிரம் ஏக்கரும், ரொபாஸ்டோ வகைய காப்பியானது 16 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது.நாட்டின் காபி உற்பத்தியில் கர்நாடக மாநிலத்தில்தான் 53 சதவீதம் உற்பத்தியாகிறது. தமிழகத்தில் 7.6 சதவீதம் மட்டுமே உற்பத்தியாகிறது.

இந்த ஆண்டில் காபி விளைச்சல் அதிகரித்தாலும் உலக அளவில் காபியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விலையும் உயர்ந்துள்ளது. அதாவது ரொபாஸ்டோ வகை காபியானது கிலோவுக்கு ரூ. 90 வரை உயர்ந்துள்ளதால் அன்றாடம் வாங்கி பயன்படுத்தும் நுகர்வோரின் சில்லரை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் காபி பிரியர்கள் எதிர்பாராத விலையேற்றத்தினை சந்தித்து வருவதோடு கடும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.

world coffee rate hike


world coffee rate hike

இதுகுறித்து காபித்துாள் நிறுவன உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கும்போது, காபியைப் பொறுத்தவரை இரண்டு வகைகள் உள்ளன. அராபிகா இது சுவையானது சற்று விலை அதிகமானது. சில்லரை விற்பனை விலையைக் குறைவாக கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் காபியின் தரத்திற்காக ரொபாஸ்டா வகை யினை 20 சதவீத்தில் இருந்து 50 சதவீதம் வரை சேர்த்து பயன்படுத்தி வருகிறோம்.

இரு ஆண்டுகளாக தொடர்ந்து காபி விலையானது உயர்ந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரொபாஸ்டோ வகை காபியானது கிலோ ஒன்றுக்கு ரூ. 136 என இருந்தது தற்போது ரூ- 185 ஆகவும், நடப்பாண்டில் ரூ. 275 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் ரொபாஸ்டோ வகை காபிக்கு வரும் நவம்பர் மாதத்தில் தட்டுப்பாடு நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

world coffee rate hike


world coffee rate hike

அதேபோல் சிக்கரி விலை கிலோவுக்குரூ. 10 முதல் ரூ. 12 வரை உயர்ந்துள்ளதால் சில்லரை விற்பனையில் சிக்கரி கிலோ ஒன்றுக்கு ரூ. 40 முதல் ரூ. 60 வரை அதிகரித்துள்ளது. இதனால் சிக்கரி , ப்யூர் காபி விலையும் கடுமையாக உயர்த்தும் நிலைக்கு சில்லரைவிற்பனையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

காபி பிரியர்கள் அதிர்ச்சி

உலக அளவில் காபியின் விலை இரண்டு ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சில்லரைவிற்பனையின் விலையும் உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் காபியிலிருந்து பின்வாங்கி செல்வதால் விற்பனை சற்று குறைந்துள்ளது.

ஒருசிலருக்கு காபி குடித்தால்தான் புத்துணர்ச்சியே வரும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சாப்பாடே வேண்டாம் காபிஇருந்தால் போதும் என வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டி வருவோர் நிலை என்ன ஆகும்? அந்த அளவிற்கு காபி பிரியர்கள் அனைவருக்கும் இந்த விலையேற்றமானது அதிர்ச்சியை அளித்து வருகிறது.

world coffee rate hike


world coffee rate hike

திடீர் திடீரென காபித்துாளின் விலையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உயர்த்தி வருவதால் காரணமின்றி அதிக விலை கொடுத்துவாங்குவதாக நம்புகின்றனர் காபி பிரியர்கள் . இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விலையை ஏற்றினால் செய்தித்தாளின் மூலமாக இதற்கான அறிவிப்பினை அவ்வப்போது அறிவித்தால் நுகர்வோர்களும் எந்த பிரச்னை இன்றி புரிந்துகொண்டு மனதை தேற்றிக்கொண்டு பொருட்களை வாங்கி செல்லஏதுவாக இருக்கும். இதனை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு விலையேற்றத்தினை உரிய முறையில் அறிவிக்குமா? என்ற எதிர்பார்ப்பில் காபிபிரியர்கள் உள்ளனர்.

Updated On: 30 Jun 2023 7:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...