/* */

யார் இந்த அஃப்ரீன் பாத்திமா? ட்ரெண்டிங் ஆன #ISTandWithAfreenFatima

#ISTandWithAfreenFatima -யார் இந்த அஃப்ரின் பாத்திமா? சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆன இவர் ஒரு மாணவ ஆர்வலர். பல போராட்டங்களை நடத்தியவர்.

HIGHLIGHTS

யார் இந்த அஃப்ரீன் பாத்திமா? ட்ரெண்டிங் ஆன #ISTandWithAfreenFatima
X

அஃப்ரீன் பாத்திமா.

#ISTandWithAfreenFatima-கடந்த வெள்ளிக்கிழமை (10ம் தேதி) உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஆர்வலர் அஃப்ரீன் பாத்திமா மற்றும் அவரது தந்தை ஜாவேத் முகமது ஆகியோரின் வீடு இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ட்விட்டரில் #ISTandWithAfreenFatima என்ற ஹேஷ்டேக்குடன் இணையத்தில் அவருக்கு சமூக ஆர்வலர்களின் ஆதரவு குவிந்து வருகிறது.

முஹம்மது நபி பற்றி முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவின் கருத்துக்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களை எரித்ததோடு, போலீஸ் வாகனத்தையும் தீ வைத்து எரிக்க முயன்றனர். அந்த வன்முறைக்கு மூளையாக செயல்பட்டதாக பாத்திமாவின் தந்தை ஜாவேத் குற்றம் சாட்டப்பட்டார்.

இடிக்கப்பட்ட வீடு

தற்போது நடத்தப்பட்டுள்ள வீடு இடிப்புக்கு கடந்த மாதமே இடிப்புக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினாலும் கூட சமூக ஊடகங்களில் இது நியாயமற்றது என்று கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன. உ.பி.யின் பிரயாக்ராஜில் ஜாவேத் முகமதுவின் குடியிருப்பு இடிக்கும் பணி தொடங்கியபோது காவல்துறையின் கூற்றுப்படி, ஜூன் 10ம் தேதி அன்று நகரத்தில் நடந்த வன்முறையின் முக்கிய சதிகாரர்களில் இவரும் ஒருவர். ஜாவேத், வெல்ஃபேரி ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்புடையவர். மேலும் அவர் மனைவி மற்றும் அவர்களது மகள்களில் ஒருவருடன் அவர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

அஃப்ரீன் பாத்திமா யார்?

அஃப்ரீன் பாத்திமா ஒரு மாணவ ஆர்வலர். அவர் டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவி. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மகளிர் கல்லூரியின் முன்னாள் தலைவர். 2019-2020ல் டெல்லியின் ஷாஹீன் பாக்கில் CAA/NRC எதிர்ப்பு போராட்டங்களின்போது பாத்திமா தீவிரமாக இருந்தார். அவர் முஸ்லீம் பெண்களை ஒருங்கிணைத்து ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளார். மேலும் ஹிஜாப் மீதான தடைகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்.

கடந்த அக்டோபரில், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற தனது தங்கை சுமையா பாத்திமாவுடன் 'முஸ்லிமா அலகாபாத்' என்ற ஆய்வு வட்டத்தை உருவாக்கினார். இந்த ஆய்வு வட்டத்தில் தற்போது 70 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் பல்வேறு தலைப்புகளில் அமர்வுகளை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. துணிச்சலான ஹிஜாப் தடை மற்றும் அரசின் அடக்குமுறை மற்றும் நம்பிக்கையுடன் அரசியல் அடையாளம் காணுதல் போன்றவைகளை முஸ்லீம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி முன்னோக்கி நகர்த்திச் செல்லல் ஆகியவை அடங்கும். ஹிஜாப் தடைக்கு எதிராக அவர் 300 பெண்களுடன் போராட்டம் நடத்தினார்.

https://twitter.com/mehartweets/status/1535897003854417920?s=20

தற்போது என்னென்ன குற்றச்சாட்டுகள்?

#ISTandWithAfreenFatima-பிரயாக்ராஜில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த வன்முறைக்கு மூளையாக செயல்பட்டவர் பாத்திமாவின் தந்தை ஜாவேத் என்று கூறப்படுகிறது. ஜாவேத் ஒரு 'பந்த்'க்கு அழைப்பு விடுத்ததாகக் கூறப்பட்டு, வாட்ஸ்அப் செய்திகள் மூலம் மக்களை சம்பவ இடத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜாவேத் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி மற்றும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்று தெரிய வந்துள்ளது. அவரது தந்தை திட்டமிட்டதாகக் கூறப்படும் வன்முறையில் பாத்திமாவுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமர் உஜாலா தெரிவித்துள்ளார். வன்முறையில் அவருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மூத்த போலீஸ் சூப்பிரண்டு அஜய் குமார் கூறியதாகவும் தெரிகிறது.

அஃப்ரீன் பாத்திமாவுக்கு ஆதரவு :

பிரபலமானவர்கள் மற்றும் பொதுவான சமூக வலைதள பயனர்கள் பாத்திமாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான குர்மெஹர் கவுர், பாத்திமாவின் வீடு இடிக்கப்பட்டதை "தனது சொந்தக் குடிமகன் மீதே அரசு நடத்திய தாக்குதல்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 13 Jun 2022 7:43 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...