/* */

கொச்சியில், ரூ. 747 கோடியில் வாட்டர் மெட்ரோ போக்குவரத்து திட்டம்; வரும் 25ல் துவக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

water metro transport project will be launched in Kochi- கேரள மாநிலம், கொச்சியில் வரும் 25ம் தேதி வாட்டர் மெட்ரோ போக்குவரத்து திட்டத்தை, பாரத பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைக்கிறார்.

HIGHLIGHTS

கொச்சியில், ரூ. 747 கோடியில் வாட்டர் மெட்ரோ போக்குவரத்து திட்டம்; வரும் 25ல் துவக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
X

water metro transport project will be launched in Kochi- கொச்சியில், வாட்டர் மெட்ரோ போக்குவரத்து திட்டத்தை, வரும் 25ல் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். (கோப்பு படம்)

water metro transport project will be launched in Kochi- நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ போக்குவரத்து திட்டத்தை, கேரளாவில் பிரதமர் மோடி வரும் 25ம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்திய நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள கேரள மாநிலம் இயற்கை வளங்களை கொண்டது. நீர்நிலைகளும் அதிகம் நிறைந்தது.


(கோப்பு படம்)

இந்நிலையில், கொச்சி நகருக்கு அதிக பயனளிக்கும் வகையில், வாட்டர் மெட்ரோ போக்குவரத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நீர் வழியேயான இந்த மெட்ரோ பயண திட்டம், சவுகரியம், வசதி, பாதுகாப்பு, நேரந்தவறாமை, நம்பக தன்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தன்மை உள்ளிட்ட பிற மெட்ரோ பயண திட்டங்களில் உள்ளது போன்ற விஷயங்களை கொண்டது. அதே அனுபவம் அளிக்க கூடியது. பயணம் செய்வதும் எளிதாகிறது.

நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், தெற்காசியாவின் முதல் நீர் வழி மெட்ரோ சேவையை, பிரதமர் நரேந்திர மோடி, கேரளாவின் கொச்சியில், வரும் 25-ம் தேதி கொடியசைத்து துவக்கி வைக்கிறார். உயர் நீதிமன்ற சந்திப்பு மற்றும் வைபின் இடையே நீர்வழி மெட்ரோவின் முதல் வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.


இந்திய பிரதமர் நரேந்திர மோடி (கோப்பு படம்)

நீர்வழி மெட்ரோ என்பது கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த படகு போக்குவரத்து திட்டமாகும். இந்த மெட்ரோ படகுகள் கொச்சியின் 10 தீவு கிராமங்கள், 78 மின்கலத்தால் இயக்கப்படும் மின்சார கலப்பின படகுகளுடன் இணைக்கப்பட்டு, 38 துறைமுகங்கள் மற்றும் 16 வழித்தடங்களில் மொத்தம் 76 கிலோ மீட்டர்கள் பயணிக்கும்.

இந்த திட்டத்திற்காக, ஏர் கண்டிஷனிங் மற்றும் வைபை கொண்ட நவீனமயமாக்கப்பட்ட பயணிகள் படகுகளின் இரண்டு மாறுபாடுகள் முன்மொழியப்பட்டன. மின்சார மோட்டார் படகுகளில் 50 முதல் 100 பயணிகள் பயணிக்க முடியும்.. இந்த நீர் வழி மெட்ரோ படகுகள் அதிகபட்சமாக மணிக்கு 22 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். அவை 15 கிமீ வேகத்தில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. புதிய பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் படகுகளில் நிறுவப்பட்டுள்ளது.


மேலும், நெரிசல் மிகுந்த பாதைகளில், சிறிய பேட்டரி மூலம் இயக்கப்படும் படகுகள் இயக்கப்படுகின்றன. வாட்டர் மெட்ரோ திட்டத்தின் மொத்த செலவு ரூ.747 கோடி ஆகும்.

அரபிக் கடல் மூன்று பக்கங்களிலும் கொச்சியின் எல்லையாகவும், மறுபுறம் உப்பங்கழியும் உள்ளது. வில்லிங்டன், கும்பளம் வைபீன், எடகொச்சி, நெட்டூர், வைட்டிலா, ஏலூர், காக்கநாடு மற்றும் முளவுகாடு ஆகிய தீவுகளில் வசிப்பவர்களின் போக்குவரத்துத் தேவைகளை நிவர்த்தி செய்ய வாட்டர் மெட்ரோ திட்டம் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதே போல் கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் மோடி, ஏப்ரல் 25ம் தேதி, திருவனந்தபுரத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.


பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 7 நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார். இதன்படி அவரது சுற்றுப்பயணம் டெல்லியில் நாளை தொடங்குகிறது. முதலில், மத்திய இந்திய பகுதியான மத்திய பிரதேசத்திற்கு அவர் செல்கிறார். ரேவா நகரில் தேசிய பஞ்சாயத்து ராஜ் திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதன்பின்பு, ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அவர் அர்ப்பணிக்கிறார்.


பின்னர், தென்னிந்திய பகுதியான கேரளாவுக்கு அடுத்த நாள் காலை (25-ம் தேதி) 10.30 மணியளவில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். அவர் இந்த பயணத்தில், 11 மாவட்டங்களை இணைக்க கூடிய வகையிலான, திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடு இடையேயான கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார். அதன்பின் காலை 11 மணியளவில், திருவனந்தபுரம் நகரில் ரூ.3,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு அவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.


இதனை தொடர்ந்து, குஜராத்தின் சூரத் நகர் வழியாக அவர் சில்வாசா நகரத்திற்கு செல்கிறார். அந்த நகரில், ரூ.4,850 கோடிக்கும் கூடுதலான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். அதன்பின்பு மேற்கு பகுதியில் அமைந்த டாமனுக்கும் சென்று விட்டு, இறுதியாக டெல்லிக்கு திரும்ப இருக்கிறார். அவருடைய இந்த பயணத்தில், 7 வெவ்வேறு நகரங்களுக்கு சென்று 8 நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டு உள்ளார். 36 மணி நேரத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5,300 கி.மீ. தொலைவுக்கு அவர் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

Updated On: 23 April 2023 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்