/* */

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு வழியனுப்பு விழா :பிரதமர் மோடி பாராட்டு

இந்தியாவின் துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் 10ந்தேதியோடு முடிவடைகிறது. இதனையொட்டி இன்று ராஜ்யசபாவில் நடந்த வழியனுப்பு விழாவில் பிரதமர்மோடி பாராட்டி பேசினார்.

HIGHLIGHTS

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு  வழியனுப்பு விழா :பிரதமர் மோடி பாராட்டு
X

ராஜ்யசபாவில் நடந்த துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு வழியனுப்பு விழாவில் 

பிரதமர் நரேந்திர மோடிபேசினார். 


புதுடில்லி:

இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் முடிவடைந்ததால்தேர்தலின்மூலம் புதிய துணை ஜனாதிபதியாக ஜக்தீப் தங்கர் தேர்வுசெய்யப்பட்டார்.இதனையொட்டி நேற்று ராஜ்யசபாவில் நடந்த வெங்கையா நாயுடுவின் வழியனுப்பு விழாவில் விடாமுயற்சி,கடும் உழைப்புகளுடன் சிறப்பாக செயல்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுதெரிவித்தார்.

இம்மாதம் 10 ந்தேதியோடு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியாக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட மே. வங்க முன்னாள் கவர்னர் ஜக்தீப் தங்கர் இம்மாதம் 11 ந்தேதியன்று பதவியேற்க உள்ளார்.இன்று ராஜ்யசபாவில் வெங்கையா நாயுடுவுக்கு நடந்த வழியனுப்புவிழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசும்போது,

பார்லிமென்ட்டின் ராஜ்ய சபாவுக்கு இது உணர்ச்சியான தருணம். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவடைவதால் அவருக்கு நன்றி தெரிவிக்க நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். எப்போதும் இளைஞர்களுக்காக உழைக்கும் தலைவராக வெங்கையா நாயுடு திகழ்கிறார். பலமுறை அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக சொன்னீர்கள் ஆனால் பொதுவாழ்வில் இ ருப்பவர்கள் நீங்கள் நினைத்தாலும் அவ்வளவு எளிதில் ஓய்வு பெற இயலாது. இவரது தலைமைக்காலத்தில் ராஜ்யசபாவில் நேர்த்தியான வழிகாட்டியாக திகழ்ந்தார். இவரது காலம் ராஜ்யசபாவின் வரலாற்று தருணங்களாகும்.

உங்களுடன் நான் சில சமயம் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. துணை ஜனாதிபதியாக நீங்கள் சிறப்பாக செயல்பட்டீர்கள். தங்களின் பங்களிப்பு தற்போது நிறைவு பெற்றாலும் உங்களின்பொது வாழ்வு மூலம் நம் நாடு பலன்பெறும் என்பது உறுதி. மேலும் தங்களின் அனைத்து பொறுப்புகளையும் நீங்கள் சிறப்பாக கையாண்டீர்கள்.

கட்சி பணியில் சிறப்பு

தாங்கள் கட்சி பணிகளில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டதை நான் பார்த்திருக்கிறேன். எம்எல்ஏவாக உங்கள் வேலை, எம்பியாக உங்களின் செயல்பாடு ஆகியவைகளில் நீங்கள் காட்டிய ஈடுபாடு, எந்த வேலையையும் சுமை என்று கருதாமல் ஆர்வத்தோடு பணியாற்றியது உள்ளிட்டவைகளில் நீங்கள் புதிய வாழ்க்கையினையே சுவாசித்தீர்கள். உங்களது ஒவ்வொரு வார்த்தையையும் கட்சியில் மதிக்கப்பட்டது கேட்கப்பட்டது. எந்த ஒரு சூழ்ந்லையிலும் எதிர்க்கப்படவில்லை என மோடி பாராட்டினார்.

காங்கிரஸ் கார்கே

காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜ்யசபா தலைவர் மல்லிகார்ஜீன கார்கே பேசினார். அவர் பேசும்போது நாம் கொள்கை அளவில் வேறுபட்டாலும் , நீங்கள் அவையினை நல்ல நிலையில் சிறப்பாக கொண்டு சென்றுள்ளிர்கள். உங்களின்இந்த செயல் பாராட்டுக்கு உரியது. .கர்நாடகா, ஐதராபாத் தொடர்பான 371 ஜே நிறைவேற்ற தங்களின் ஒத்துழைப்பு போற்றுதலுக்குரியது என்றார்.

Updated On: 8 Aug 2022 1:11 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?
  2. வீடியோ
    CBI Raid-க்கு தேதி குறித்து கொடுத்த திமுக !#annamalai #annamalaibjp...
  3. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  5. வீடியோ
    மத்தியில் கூட்டணி ஆட்சி ! பேரம் பேசிய திமுகவினர் !#annamalai...
  6. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  7. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  8. வீடியோ
    🔴LIVE: கன்னியாகுமரியில் சீமான் தேர்தல் பிரச்சாரம் #seeman #live
  9. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  10. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?