/* */

கர்நாடக சட்டமன்றத்தின் முதல் இஸ்லாமிய சபாநாயகர் யு.டி.காதர்

கர்நாடக சட்டமன்றத்தின் சபாநாயகராக யு.டி.காதர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

கர்நாடக சட்டமன்றத்தின் முதல் இஸ்லாமிய சபாநாயகர் யு.டி.காதர்
X

யு.டி. காதர். (பைல் படம்)

கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஏறத்தாழ 4 நாட்கள் முதலமைச்சர் தேர்வு செய்யும் பணி கடும் இழுபறியில் நீடித்த நிலையில், ஏற்கனவே கர்நாடக முதலமைச்சராக இருந்த சித்தரமையாவை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது.

இதையடுத்து சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த 20ம் தேதி பதவியேற்றது. துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் பதவியேற்றார். மேலும், பரமேஷ்வரா, முனியப்பா , கே.ஜி.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல் , சதீஷ் ஜார்கோலி, பிரியங்க் கார்கே , ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இதனைத் தொடர்ந்து சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும், 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த யு.டி.காதர், முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில் சபாநாயகர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், கர்நாடக சட்டமன்றத்தின் சபாநாயகராக யு.டி.காதர் இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதன்மூலம் யு.டி.காதர் கர்நாடக சட்டமன்றத்தின் முதல் இஸ்லாமிய சபாநாயகர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதே போல் கர்நாடக சட்டமன்றத்தின் இளம் சபாநாயகராகவும் யு.டி.காதர் கருதப்படுகிறார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற மங்களூர் தொகுதி இடைத்தேர்தலின்போது அரசியலில் அறிமுகமான யு.டி.காதர், அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில், அதே தொகுதியில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலிலும் மங்களூர் தொகுதியில் போட்டியிட்ட காதர், வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2013 முதல் 2018 வரை கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சராகவும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சராகவும் காதர் பதவி வகித்துள்ளார். 2018 முதல் 2019 வரை நடைபெற்ற ஜேடிஎஸ் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார் யு.டி.காதர். எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் இவர் பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 24 May 2023 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?