/* */

டாடா-ஏர் இந்தியாவிற்கு அபராதம் விதித்த அமெரிக்கா

டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை 121.5 மில்லியன் டாலர் பணத்தைத் திரும்ப அளிக்கவும் 1.4 மில்லியன் டாலர் அபராதமாகவும் செலுத்துமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

டாடா-ஏர் இந்தியாவிற்கு அபராதம் விதித்த அமெரிக்கா
X

தொற்றுநோய்களின் போது விமானங்களை ரத்து செய்தல் அல்லது மாற்றியமைத்தல் காரணமாக 121.5 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்தவும், பயணிகளுக்கு பணத்தைத் திரும்பப் பெறுவதில் தீவிர தாமதம் ஏற்பட்டதற்காக அபராதமாக 1.4 மில்லியன் டாலர்கள் செலுத்துமாறு டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மொத்தம் 600 மில்லியன் டாலர்களை திரும்ப அளிக்க ஒப்புக்கொண்ட ஆறு விமான நிறுவனங்களில் ஏர் இந்தியாவும் ஒன்று என்று அமெரிக்க போக்குவரத்துத் துறை திங்களன்று தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியாவின் "கோரிக்கையின் பேரில் பணத்தைத் திரும்ப அளித்தல் " என்ற கொள்கையானது அமெரிக்க போக்குவரத்துத் துறைக் கொள்கைக்கு முரணானது. விமான சேவை நிறுவனங்களை ரத்து செய்தாலோ அல்லது விமானத்தில் மாற்றம் செய்தாலோ பணத்தை சட்டப்பூர்வமாகத் திரும்ப அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏர் இந்தியா பணத்தைத் திருப்பிச் செலுத்துமாறு கேட்டு, அபராதம் செலுத்த ஒப்புக்கொண்ட வழக்குகள் தேசிய விமான நிறுவனம் டாடாக்களால் கையகப்படுத்துவதற்கு முன்பு இருந்தன.

விசாரணையின்படி, ஏர் இந்தியா ரத்துசெய்த அல்லது கணிசமாக மாறிய விமானங்களுக்கு பணத்தை திரும்ப அளிக்கும் நடைமுறையை செயல்படுத்த ஏர் இந்தியா 100 நாட்களுக்கு மேல் எடுத்ததாக 1,900 க்கும் மேற்பட்ட புகார்கள் ப் போக்குவரத்துத் துறையிடம் தாக்கல் செய்யப்பட்டது.

ஏர் இந்தியா நிறுவனத்திடம் புகார்களைப் பதிவுசெய்து, நேரடியாகப் பணத்தைத் திரும்பக் கோரும் பயணிகளுக்கு பணத்தைத் திரும்பப்பெற எடுத்துக்கொண்ட நேரம் குறித்த தகவலை ஏஜென்சிக்கு வழங்க முடியவில்லை.

"ஏர் இந்தியாவின் கூறப்பட்ட பணத்தைத் திரும்பப்பெறும் கொள்கையைப் பொருட்படுத்தாமல், நடைமுறையில் ஏர் இந்தியா சரியான நேரத்தில் பணத்தைத் திரும்ப அளிக்கவில்லை. இதன் விளைவாக, வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதில் ஏற்பட்ட தீவிர தாமதத்தால் குறிப்பிடத்தக்க பாதிப்பை அனுபவித்தனர்," என்று அமெரிக்க போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியாவைத் தவிர, Frontier, TAP Portugal, Aero Mexico, EI AI மற்றும் Avianca ஆகியவை அபராதம் விதிக்கப்பட்ட பிற விமான நிறுவனங்களில் அடங்கும்.

ஏர் இந்தியா தனது பயணிகளுக்கு 121.5 மில்லியன் டாலர்களை திருப்பி செலுத்தவும், அபராதமாக 1.4 மில்லியன் டாலர் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

ஃபிரான்டியருக்கு 222 மில்லியன் டாலரை திருப்பி அளித்தும் 2.2 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது. TAP போர்ச்சுகல் $126.5 மில்லியன் டாலரை திருப்பி செலுத்துவது மட்டுமல்லாமல் 1.1 மில்லியன் டாலர்அபராதம் செலுத்தும்; Avianca (76.8 மில்லியன் டாலர், 750,000 டாலர்அபராதம்), EI AI (61.9 மில்லியன் டாலர், 900,000 டாலர் அபராதம்) மற்றும் Aero Mexico (13.6 மில்லியன் டாலர் மற்றும் 900,00 டாலர்அபராதம்).

விமான நிறுவனங்கள் செலுத்திய 600 மில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தைத் திரும்ப அளிப்பதற்கு கூடுதலாக, போக்குவரத்துத் துறையானது பணத்தைத் திரும்பப் பெறுவதில் மிகவும் தாமதமானதற்காக இந்த ஆறு விமான நிறுவனங்களுக்கு எதிராக 7.25 மில்லியன் டாலருக்கும் அதிகமான சிவில் அபராதங்களை விதிப்பதாக அறிவித்தது.

அமெரிக்கச் சட்டத்தின்படி, விமான நிறுவனம், அமெரிக்காவிலிருந்து மற்றும் அமெரிக்காவிற்குள்ளேயே விமானத்தை ரத்து செய்தாலோ அல்லது கணிசமாக மாற்றியிருந்தாலோ அதனை பயணிகள் விரும்பாத அல்லது ஏற்காத பட்சத்தில் நுகர்வோருக்குப் பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான சட்டப்பூர்வ கடமையை விமான நிறுவனங்கள் மற்றும் டிக்கெட் முகவர்கள் கொண்டுள்ளனர்,

ஒரு விமான நிறுவனம் பணத்தைத் திரும்பப்பெற மறுப்பதும், அதற்குப் பதிலாக அத்தகைய நுகர்வோருக்கு வவுச்சர்களை வழங்குவதும் சட்டவிரோதமானது என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

"விமானம் ரத்து செய்யப்பட்டால், பணத்தைத் திரும்பப் பெறும் பயணிகளுக்கு உடனடியாகத் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். அது நடக்காத போதெல்லாம், அமெரிக்க பயணிகளின் சார்பாக விமான நிறுவனங்களை பொறுப்பேற்கச் செய்து, பயணிகளின் பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுப்போம். அமெரிக்க போக்குவரத்து செயலாளர் பீட் புட்டிகீக் கூறினார்.

"விமானத்தை ரத்து செய்வதே போதுமான வெறுப்பை தந்திருக்கும். மேலும் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு நீங்கள் பேரம் பேசவோ அல்லது மாதங்கள் காத்திருக்கவோ கூடாது," என்று அவர் கூறினார்.

Updated On: 15 Nov 2022 9:34 AM GMT

Related News