வறுமையின் கொடுமையால் சோகம்: பெண் குழந்தை 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை..!

ஒடிசா மாநிலம், ஜாஜ்பூர் மாவட்டத்தில் வறுமை காரணமாக 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வறுமையின் கொடுமையால் சோகம்: பெண் குழந்தை 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை..!
X

(கோப்பு படம்)

ஒடிசா மாநிலம், ஜாஜ்பூர் மாவட்டம் தசரத்பூர் பிளாக் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்தாஸ். இவரது மனைவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை பிறந்த சில நாட்களே நிலையில் வெறும் 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின்பேரில் காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் விற்கப்பட்ட குழந்தை இருக்கும் சம்பேபால் கிராமத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கிராமத்திற்கு சென்ற காவல்துறையினர் குழந்தையை மீட்டு குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனர். ஆனால் குழந்தையின் பெற்றோர்கள் கூறுகையில், தங்கள் உறவினர் ஒருவருக்கு குழந்தையை வளர்க்க கொடுத்ததாகவும், குழந்தையை விற்கவில்லை என்றும் மேற்கண்ட குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளனர்.

ஆனாலும் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி அப்பகுதி கிராம மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும் வறட்சியும், வேலையின்மை திண்டாட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வடமாநிலங்களில் இதுபோல குழந்தைகளை விற்பதும், இளம்வயது பெண் திருமணங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருவது வழக்கமாகி வருகிறது என்பது வேதனைக்குரியது.

Updated On: 2022-07-04T16:36:04+05:30

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் தாமதம்; கோட்டையை முற்றுகையிட பாஜக...
 2. ஆன்மீகம்
  வசியப்பொருத்தம் இருந்தால்தான் கணவன்-மனைவி காதல் மிளிரும்..! எப்டீன்னு...
 3. சினிமா
  பொன்னியின் செல்வன் படத்திற்காக இணையும் ரஜினி, கமல்: சும்மா அதிருமுல்ல
 4. சினிமா
  சகோதரியுடன் ரக்‌ஷாபந்தன் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்த நடிகர் யாஷ்
 5. தமிழ்நாடு
  கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடக்கம்
 6. சினிமா
  அதிதியை திட்டாதீங்க பிளீஸ்: பாடகி ராஜலக்ஷ்மி
 7. கல்வி
  பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம்: முதல்வர் ஆலோசனை
 8. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
 9. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 10. காஞ்சிபுரம்
  மின்தடையை சீர்செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு