/* */

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்: அறிகுறிகள் இவைதான்!

குழந்தைகளை தாக்கும் புதிய வகையான தக்காளி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்: அறிகுறிகள் இவைதான்!
X

கொரோனா பெருந்தொற்றின் தாக்கமே இன்னமும் முழுமையாக குறையவில்லை. இந்தியாவில் கொரோனா 4வது அலை பரவுமோ என்ற கவலை உள்ளது. இந்த சூழலில், தக்காளி காய்ச்சல் என்ற புதுவகை காய்ச்சல் அச்சுறுத்தத் தொடங்கி இருக்கிறது.

குழந்தைகளுக்கு பாதிப்பு

அண்டை மாநிலமான கேரளாவில்தான் இதன் பாதிப்பு அதிகளவில் உள்ளது. கேரளா மாநிலத்தில், 5 வயதிற்கும் குறைவான குழந்தைகள் பலருக்கு, திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உடல்வலி, கைகால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் ஏராளமான குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை பரிசோதித்ததில், தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் ஆகிய பகுதிகளில் கேரள சுகாதாரத் துறை அதிகாரிகள் நிலைமை குறித்து கண்காணித்து வருகிறார்கள்.

கொல்லம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 85 குழந்தைகளுக்கு தக்காளி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை கூறியுள்ளது.

அறிகுறிகள் என்ன?

தக்காளி காய்ச்சல் என்பதால், தக்காளி மூலம் பரவுகிறதோ என்ற பயப்பட வேண்டாம். தக்காளிக்கும், இந்த காய்ச்சலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இக்காய்ச்சலின் அறிகுறிகளாக, உடலில் அதிக காய்ச்சல் ஏற்படுவதுடன் மிக சோர்வாக இருக்கும். கை, கால்கள் வெளுத்து காணப்படுதல், உடலில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள் உண்டாவது உள்ளிட்டவை, தக்காளி காய்ச்சலில் அறிகுறிகள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த காய்ச்சலானது, கொசுக்கள் மூலம் பரவும் சிக்கன்குன்யாவின் பின்விளைவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் மருத்துவர்கள், இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இல்லை என்ற ஆறுதலான தகவலையும் கூறியுள்ளனர்.

தக்காளியால் ஆபத்தா?

அண்டை மாநிலத்தில் தக்காளி காய்ச்சல் பரவியுள்ள நிலையில், தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது. தக்காளி வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனைகளுக்கு யாரேனும் வருகின்றனரா என்று, தமிழக சுகாதாரத்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று கூறுகையில், தக்காளி வைரஸ் தொடர்பாக தமிழக மக்கள் அச்சம் அடைய வேண்டாம். உடலில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றி, தக்காளி போல சிவந்திருப்பதால் தக்காளி வைரஸ் என்று பெயரிடப்பட்டது; தக்காளிக்கும் இந்த வைரஸுக்கும் தொடர்பு எதுவும் இல்லை. இந்த புதுவகை காய்ச்சலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராகவே உள்ளது என்று தெரிவித்தார்.

Updated On: 8 May 2022 4:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி