/* */

திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்: ஆன்லைனில் நாளை வெளியீடு

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான டிக்கெட் ஆன்லைனில் நாளை வெளியிடப்படும் என, திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்: ஆன்லைனில் நாளை வெளியீடு
X

உலகின் பணக்கார கடவுள் திருப்பதி வெங்கடாஜலபதி.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான தரிசிக்க செப்டம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் நாளை (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகின்றன. கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை டிக்கெட்டுகளில் பக்தர்கள் நாளை முதல் 29-ந்தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

மேலும் சுப்ர பாத சேவை, தோமால சேவை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாராதனை சேவை போன்றவற்றுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் எலக்ட்ரானிக் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும். இந்த டிக்கெட்டுகளும் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன. அதில் பக்தர்கள் நாளை முதல் 29-ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம். டிக்கெட் பெறும் பக்தர்கள் டிக்கெட் கட்டணத்தை 2 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Updated On: 26 Jun 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  3. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  4. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  5. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  6. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  8. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்