திருமலை பிரம்மோற்சவத்திற்கு வரும் பக்தர்களுக்கு மாஸ்க் கட்டாயம்

Please Wear Mask - திருமலையில் அடுத்த மாதம் நடக்கவுள்ள பிரம்மோற்சவ விழாவிற்கு இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கலந்து கொள்ள வருபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருமலை பிரம்மோற்சவத்திற்கு வரும் பக்தர்களுக்கு மாஸ்க் கட்டாயம்
X

திருப்பதி


Please Wear Mask - திருமலையில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழாவானது வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்தஇரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக பக்தர்களுக்குஅனுமதிக்குதடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால் இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி அளிப்பதோடு கலந்துகொள்ள வரும்பக்தர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவஸ்தானம் சார்பில் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் நடக்க உள்ள பிரம்மோற்சவத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும். திருமலையில் உள்ள ஏழுமலையானுக்கு அடுத்த மாதம் செப்டம்பர் 27 ந்தேதி முதல் அக்டோபர் 5 ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மலையப்ப சுவாமி திருவீதி உலாவானது நான்கு மாட வீதிகளில் நடக்க இருப்பதால் கூட்டம் அதிகம் காணப்படும். இந்நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்களுக்கு திருமலை மற்றும் அலிபிரியில் தற்காலிக தங்கும் வசதிகள் செய்யப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருட சேவை நாள், அதற்கு மறுநாள் மதியம் 12:00 மணி வரை, திருமலை- - திருப்பதி இடையே மலைப்பாதையில் இரு சக்கர வாகன போக்குவரத்துக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமரா

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பரவலானது கட்டுக்குள் இருப்பதால் இந்தஆண்டு பிரம்மோறசவத்தில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொள்வார்கள். இவர்களுடைய பாதுகாப்பினை கருதி 24 மணிநேரகட்டுப்பாட்டு அறை மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் அனைத்து இடங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டம் அதிகம் வரும் என்தால் தினமும் ஒன்பது லட்சம் லட்டுகள் நிலுவையில் வைக்கப்படும். திருமலைக்கு வரும் வாகனங்கள் அனைத்தையும் வெளிவட்ட பகுதிகளில் நிறுத்தசொல்லப்பட்டு பின்னர் அவர்கலவச பஸ்கள் மூலம் பல பகுதிகளுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாகனசேவைகள் அனைத்தும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 7மணி முதல் இரவு 9 மணி வரையில் நடக்க உள்ளது. பக்தர்களின் இலவச தரிசனத்திற்குதான் முன்னுரிமையானது அளிக்கப்படும். ஆர்ஜித சேவைகள், ஸ்ரீவாணி, விஐபி, பிரேக் தரிசனங்கள் , ரூ. 300 விரைவு தரிசனம், சீனியர் சிட்டிசன், மாற்றுதிறனாளிகள், கைக்குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கான சலுகை தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2Updated On: 2022-08-08T14:35:51+05:30

Related News