/* */

இது தான் சரியான தகவல்: ரூ. 3 லட்சம் வரை தான் வருமான வரி விலக்கு

ரூ. 3 லட்சம் வரை தான் வருமான வரி விலக்கு இது தான் சரியான தகவல். இது எப்படி என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

HIGHLIGHTS

இது தான் சரியான தகவல்: ரூ. 3 லட்சம் வரை தான் வருமான வரி விலக்கு
X

புதிய வருமான வரி விதிப்பை காட்டும் வழிகாட்டி வரைபடம்.

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 7 லட்சம் என அறிவிக்கப்பட்டாலும் உண்மையான வரிவிலக்கு என்பது ரூ.3 லட்சம் வரை தான் என்பதே சரியான தகவல் ஆகும்.

மத்திய பட்ஜெட்

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பா.ஜ.க. அரசின் 2023 -24 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பா.ஜ.க. அரசை பொறுத்தவரை இது அவர்கள் தாக்கல் செய்யும் இறுதி பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் முழு அளவிலான பட்ஜெட்டை அடுத்த ஆண்டு தாக்கல் செய்ய முடியாது. இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். நிர்மலா சீதாராமன் நிதி மந்திரியாக பதவி ஏற்ற பின் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் என்ற சிறப்பும் இதற்கு உண்டு.

மோடியின் ஆசை நிராசை

நாடாளுமன்றத்தின் 2023- 24 ஆம் ஆண்டிற்கான இந்த பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில் தான் தாக்கல் செய்ய வேண்டும் என பா.ஜ.க.அரசு திட்டமிட்டு இருந்தது. பிரதமர் மோடி இதில் தீவிர ஆர்வம் காட்டி வந்தார்.ஆனால் கட்டுமான பணிகள் இன்னும் நிறைவடையாததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. மோடி ஆசையும் நிராசையாக போய்விட்டது. அந்த வகையில் நேற்று குடியரசுத் தலைவரின் உரையும் தற்போது உள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலேயே நடைபெற்றது. இன்று பட்ஜெட்டும் இந்த கட்டிடத்தில் தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு

இந்த பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் சம்பளதாரர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த ஒன்று தனி நபர் வருமான உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட் உரை உரையாற்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை வெளிப்படையாக பேசினார். நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற தனிநபர் வருமான வரி உற்சாகப் பற்றி இப்பொழுது அறிவிக்க போகிறேன் என்றார்.

ரூ.7 லட்சம் வரை...

அதன் பின்னர் அவர் இது தொடர்பாக பேசுகையில் ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் வரை வருமான வரி செலுத்துபவர்களுக்கு இனி வருமான வரி கிடையாது. தனிநபர் வருமான உச்ச வரம்பு ரூ.7 லட்சம் ஆக உயர்த்துப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த உச்ச வரம்பானது ரூ. 2 1/2 லட்சத்திலிருந்து ரூ. 7 லட்சம் ஆக உயர்த்தப்பட்டதாக நிபுணர்களால் உடனடியாக கணித்து கூறப்பட்டது. ஆனால் இது சரியான கணிப்பு அல்ல என்பதே சரியான தகவல் ஆகும்.

புதிய வருமான வரி அடுக்கு முறை

மேலும் இந்த வருமான வரி உச்சவரம்பு தொடர்பாக ஐந்து முக்கிய அறிவிப்புகளையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதன்படி ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு முற்றிலுமாக வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் அந்த தொகைக்கு 5 சதவீதம் வருமான வரி கட்ட வேண்டும். ரூ.6 லட்சத்திலிருந்து ரூ. 9 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்கள் 10சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். ஆண்டுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் 15சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். ரூ.௧௨ லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்கள் இனி 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ஆண்டுக்கு 15 லட்சம் மேல் வருமானம் ஈட்டுபவர்கள் 30% வருமான வரி செலுத்த வேண்டும் என்பதே இந்த புதிய வரி அடுக்கு முறையாகும்.

இது தான் சரியான தகவல்

வருமான வரியை பொறுத்தவரை ஏற்கனவே கடந்த பட்ஜெட்டில் அறிவித்த போது ரூ. இரண்டரை லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியது இல்லை என்ற அறிவிப்பு இப்போது வரை நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் பார்த்தால் முழுமையான வரி விலக்கு என்பது கூடுதலாக ரூ. 50,000 சேர்த்து ரூ.3 லட்சம் வரை தான் முழுமையான வருமான வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதான் உண்மையான தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 1 Feb 2023 12:23 PM GMT

Related News