/* */

திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்து மதிப்பு ரூ. 4 லட்சம் கோடி?

திருப்பதி ஏழுமலையானின் சொத்து மதிப்பு, 4 லட்சம் கோடியை தாண்டும் என்று பல்வேறு தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

HIGHLIGHTS

திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்து மதிப்பு ரூ. 4 லட்சம் கோடி?
X

திருப்பதி ஏழுமலையான் கோவில்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, தினமும் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்கும் திருமலை - திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், ஏழுமலையான் கோவில் தவிர, பல்வேறு கோவில்களையும் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள், தினமும் ஏழுமலையானுக்கு 4 கோடி ரூபாய் வரை, காணிக்கையாக செலுத்துகின்றனர்.

இதுதவிர பிரசாத விற்பனை, தங்கும் அறை வாடகை, நன்கொடைகள், தலைமுடி விற்பனை ஆகிய வகைகளில் தினமும் தேவஸ்தான நிர்வாகத்திற்கு சுமார் 10 கோடி ரூபாய்க்கும் அதிக தொகை வருமானமாக கிடைக்கிறது. தன்னுடைய வருமானத்தில் சுமார் 1000 கோடி ரூபாயை தேவஸ்தான நிர்வாகம் ஊழியர்களின் ஊதியத்திற்காக பயன்படுத்துகிறது. செலவு போக மீதி இருக்கும் தொகை பல்வேறு வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியாக போடப்பட்டுள்ளது.


இதுதவிர, தேவஸ்தானத்திற்கு பக்தர்கள் காணிக்கையாகவும், நன்கொடையாகவும் வழங்கும் ஆபரணங்கள், தங்க நகைகள், தங்க கட்டிகள் ஆகியவற்றில் சுவாமியின் அலங்கரிப்பு பணிக்கு பயன்படாதவற்றை தேவஸ்தான நிர்வாகம், மும்பையில் உள்ள மிண்டுக்கு அனுப்பி தங்க கட்டிகளாக மாற்றி, அவற்றை பல்வேறு வங்கிகளின் தங்க முதலீட்டு திட்டங்களில், 'டெபாசிட்' செய்துள்ளது. அந்த வகையில், 10.25 டன் வரை தங்கம், பல்வேறு வங்கிகளின் தங்க முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டு தேவஸ்தானத்திற்கு வட்டி வருவாயை ஈட்டி தருகிறது.


தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு வங்கிகளில், 15,000 கோடி ரூபாய்க்கு அதிக தொகையை நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தி வைத்துள்ளது. மேலும், தேவஸ்தானத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில், 963 இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இவற்றில் திருமண மண்டபங்கள், கோவில்கள் ஆகியவையும் அடங்கும்.

இதுப்போன்ற வகைகளில், ஒட்டுமொத்தமாக தேவஸ்தானத்தின் சொத்து மதிப்பு 2.5 லட்சம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மார்க்கெட் மதிப்பின்படி பார்த்தால், இந்த தொகை 4 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கருதப்படுகிறது.


இவற்றில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், ஏழுமலையான் குடி கொண்டிருக்கும் திருப்பதி மலைக்கு யாராலும் விலை மதிப்பீடு செய்ய இயலாது என்பதே ஆகும். இதுதவிர, தேவஸ்தானத்திடம் இரண்டரை டன் அளவிற்கு மிகவும் புராதனமான தங்க ஆபரணங்கள் உள்ளன. அவற்றில் மிகப் பழங்காலத்து வைர, வைடூரியங்கள் பதிக்கப்பட்டுள்ளன. அந்த பழமையான ஆபரணங்களில் உள்ள தங்கத்தின் மதிப்பு, இன்றைய விலையில் தங்கத்திற்கு இருக்கும் மார்க்கெட் விலையை விட பல நூறு மடங்கு அதிகமாக இருக்கும்.

அதேபோல், தேவஸ்தானத்திடம் இருக்கும் மிக பழமையான வைரம், வைடூரியம், மரகதம் மாணிக்கம் ஆகிய நவரத்தினங்களின் மதிப்பும் மார்க்கெட் மதிப்பை விட மிகவும் அதிகம். எனவே, தேவஸ்தானத்தின் சொத்து மதிப்பு இவ்வளவுதான் இருக்கும் என்று உறுதியாக கூறுவது மிகவும் கடினமானது.

Updated On: 12 Nov 2022 7:22 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்