வரதட்சனை கேட்டு மணப்பெண் அதிரடி.. மணமகன் வீட்டார் அதிர்ச்சி

தெலங்கானாவில் வரதட்சனை கொடுக்காததால் தன்னுடைய திருமணத்தையே பழங்குடியின மணப்பெண் நிறுத்தியுள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வரதட்சனை கேட்டு மணப்பெண் அதிரடி.. மணமகன் வீட்டார் அதிர்ச்சி
X

பைல் படம்.

தெலங்கானாவில் வரதட்சனை கொடுக்காததால் தன்னுடைய திருமணத்தையே பழங்குடியின மணப்பெண் நிறுத்தியுள்ளார்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரின் புறநகர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமணம் ஒன்றில் வரதட்சணை குறைவாக இருந்ததால், கடைசி நிமிடத்தில் மணப்பெண் திருமணத்தை ரத்து செய்துள்ளார்.

பழங்குடியின வழக்கத்தின் படி, "தலைகீழ் வரதட்சணை" என்பது வருங்கால மணப்பெண்களுக்கு வழங்கப்படும். அதன்படி திருமணத்திற்கு முன் மணமகனின் குடும்பத்தினரால் ரூ.2 லட்சம் பணத்தை மணமகளுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை மணமகள் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் கொடுக்க மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் கடந்த வியாழன் அன்று காட்கேசரில் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் பத்ராத்ரி கொத்தகுடேமில் உள்ள அஸ்வராவ்பேட்டை கிராமத்தில் இருந்து செல்ல இருந்த மணப்பெண், திருமண உறுதிமொழி எடுக்க மறுத்துவிட்டார். இவர்களது திருமணம் நடக்கவிருந்த மண்டபமும் அலங்கரிக்கப்பட்டு பரபரப்பாக இருந்தது. மேலும் அந்த மண்டபத்தில் காத்திருந்த உறவினர்களும் மணமகளின் முடிவைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மணமகள் திருமண இடத்திற்கு வராததால், மணமகன் வீட்டார் அவரது குடும்பத்தினர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விரைந்து வந்து விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது மணப்பெண் வரதட்சணை கேட்டதாகவும், கொடுத்தால் தான் திருமணம் நடைபெறும் என தெரிவித்ததால் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, மணமகன் திருமண மண்டபத்தை விட்டு வெளியேற, அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் மணப்பெண் வீட்டாரை வரவழைத்து, இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து இரண்டு குடும்பத்தினரும் தங்களுக்குள் இந்த விஷயத்தை சுமூகமாகத் தீர்த்துக்கொண்டதால், போலீசார் தரப்பில் புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. பின்னர் மணமகள் திருமணத்தில் ஆர்வம் காட்டததால் திருமணம் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், மணப்பெண்ணின் குடும்பத்தினர், மணமகனிடம் இருந்து ரூ.2 லட்சம் வரதட்சணையாக பெற்றதாகவும், ஆனால் மணமகள் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், பணம் திருப்பி கொடுக்கப்பட்டு இரு வீட்டாரும் தங்கள் வழியில் சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்கள் உள்ளிட்ட இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

ஆனால், கடந்த மார்ச் 7ம் தேதி, அதே தெலங்கானா மாநிலத்தில் திருமணமாகி 12 வருடங்கள் கழித்து மாமியாரிடம் வரதட்சனை கேட்டு மின்கம்பத்தில் ஏறி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவமும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Updated On: 11 March 2023 7:39 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  சாதி, மதம் இல்லா முதல் சான்றிதழ்: சினேகாவை பாராட்டிய நடிகை குஷ்பு
 2. கரூர்
  கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; மக்கள் அவதி
 3. கல்வி
  employment training workshop-JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் மற்றும்...
 4. கரூர்
  பள்ளிக் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்துக்கு ரூ. 1 கோடி...
 5. தூத்துக்குடி
  அண்ணன் பாணியில் தங்கை: சாலையோர கடையில் தேநீர் அருந்தினார் கனிமொழி...
 6. கரூர்
  கரூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
 7. லைஃப்ஸ்டைல்
  வாழை இலையில ரசம் செஞ்சு இருக்கீங்களா...... அட அட ஊரே மணக்கும்
 8. கல்வி
  students conference -JKKN பொறியியல் கல்லூரியில் மாணவர் தலைமையிலான...
 9. பேராவூரணி
  பேராவூரணி அருகே கடை வைத்து 5 ரூபாய்க்கு தேனீர் விற்கும் முன்னாள்...
 10. சினிமா
  வந்தியத்தேவனாக கமல், குந்தவையாக ஸ்ரீதேவி - முன்னாள் முதல்வரின் ஆசை