காலையில் தாசில்தார்- மாலையில் முன்னாள் தாசில்தார்: இங்கல்ல கேரளாவில்...

கேரளாவில் காலையில் தாசில்தார் ஆக பதவி ஏற்றவர் மாலையில் முன்னாள் தாசில்தார் ஆன சம்பவம் நடந்து உள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
காலையில் தாசில்தார்- மாலையில் முன்னாள் தாசில்தார்: இங்கல்ல கேரளாவில்...
X

இவர் தான் தாசில்தார் ராஷ்மோன்.

கேரள மாநிலத்தில் ஒரு தாலுகா அலுவலகத்தில் காலையில் தாசில்தார் ஆக பதவி ஏற்றவர் மாலையில் முன்னாள் தாசில்தார் ஆன சம்பவம் நடந்து உள்ளது.

கேரள மாநிலம் கொச்சியை அடுத்த ஆலுவா தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வந்தவர் ராஷ்மோன். இவர் கடந்த ஆண்டு தாசில்தாராக பதவி உயர்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் இவரது பதவி உயர்வு தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் இவருக்கு நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு அரசிடம் இருந்து ஒரு உத்தரவு வந்தது. அதில் அவரை அங்கமாலி அலுவலக நிலமெடுப்பு தாசில்தாராக நியமித்து இருப்பதாகவும், உடனே அந்த பதவியை ஏற்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த உத்தரவு கிடைத்ததும் ராஷ்மோனுக்கு ஒருபக்கம் மகிழ்ச்சி என்றாலும் இன்னொரு புறம் வருத்தமும் ஏற்பட்டது. இதற்கு காரணம், அவரது பணிக்காலம் நேற்றுடன் முடிய இருந்தது. என்றாலும் தனக்கு கிடைத்த பதவி உயர்வை உடனே ஏற்றுக்கொள்ள முடிவு செய்த ராஷ்மோன், நேற்று முன்தினம் இரவே அங்கமாலி சென்றார். நேற்று காலை தாலுகா அலுவலகத்திற்கு சென்ற ராஷ்மோன், அங்கு தாசில்தாராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவர், தாசில்தார் இருக்கையில் அமர்ந்த சில மணி நேரத்தில் அவருக்கு இன்னொரு உத்தரவு வந்தது. அதில் அன்று மாலையே அவர் பணி ஓய்வு பெறுவதாக கூறப்பட்டிருந்தது.

இதனை அறிந்த அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்றாலும் புதிய தாசில்தாருக்கு வாழ்த்து தெரிவித்த அவர்கள் அன்று மாலை வழியனுப்பு விழா நடத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். காலையில் தாசில்தார் பொறுப்பேற்று, மாலையில் ஓய்வு பெற்ற ராஷ்மோன் கூறும்போது, ஒரே நேரத்தில் இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவித்த நபர் நான்தான், என்றார்

Updated On: 1 Jun 2023 4:27 PM GMT

Related News

Latest News

 1. ஈரோடு மாநகரம்
  அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
 3. மணப்பாறை
  திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
 4. காஞ்சிபுரம்
  மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
 5. பெருந்துறை
  மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
 6. ஈரோடு மாநகரம்
  ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
 7. ஈரோடு மாநகரம்
  ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
 8. கோவில்பட்டி
  காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
 9. கோவில்பட்டி
  தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
 10. வாசுதேவநல்லூர்
  தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா