/* */

இத்தனை ஆயிரம் கோடியா...? பணத்தை வாரிக்குவிக்குது டோல்கேட்கள்

இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகளில் டோல்கேட்டில் பாஸ்ட்டேக் முறையில் சுங்கக்கட்டணம் செலுத்தும் முறை நடைமுறையில் உள்ளது.

HIGHLIGHTS

இத்தனை ஆயிரம் கோடியா...?  பணத்தை வாரிக்குவிக்குது டோல்கேட்கள்
X

டோல்கேட் (கோப்பு படம்).

நான்கு வழிச்சாலைகளில், டோல்கேட் பணம் வசூலிக்கப்படும் போதே மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அரசு அதனை பொருட்படுத்தவில்லை. குறைந்த அளவில் தொடங்கிய கட்டணம், இன்று நாடு முழுவதும் பரவலாகி விட்டதோடு, மிகவும் அதிகரித்தும் விட்டது. இதனால் ஒவ்வொரு வாகனத்திற்கும் பணம் வசூலித்து பாக்கி சில்லரை பணம் தர தாமதம் ஏற்படுகிறது. கையில் பணம் வாங்கும் போது, கட்டணம் எவ்வளவு என கேட்டு வாகன ஓட்டிகள் தகராறு செய்ய தொடங்கினர். இது போன்ற பிரச்னைகளுக்கு முடிவு கட்ட வாகனங்களில் பாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டது.

தற்போது ஆண்டுதோறும் பாஸ்ட்டேக் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் டோல்கேட்களில் வசூல் பிரச்னையும் குறைந்தது. வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 2021யை ஒப்பிடும்போது 2022ல் பாஸ்ட்டேக் முறையில் சுங்கக்கட்டணம் செலுத்துவது என்பது 46 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

ஒரே ஆண்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் வசூல் கிடுகிடுவென உயர்ந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. ஆண்டுதோறும் பாஸ்ட்டேக் மின்னணு சுங்கச்சாவடி வசூல் என்பது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டில் பாஸ்ட்டேக் மூலம் மொத்தமாக ரூ.50 ஆயிரத்து 855 கோடி சுங்கக்கட்டணமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டை ஒப்பிடும்போது 46 சதவீதம் வரை அதிகமாகும். ஏனென்றால், 2021ல் பாஸ்டேக் மூலம் ரூ.34 ஆயிரத்து 778 கோடி மட்டுமே சுங்கக்கட்டணமாக வசூலாகி இருந்தது. இந்த ஆண்டு டோல்கேட் கட்டண வசூல் இன்னும் 25 சதவீதம் வரை அதிகரிக்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Updated On: 29 Jan 2023 7:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!