/* */

குஜராத், மகாராஷ்டிராவில் ரூ.317 கோடி கள்ளநோட்டு பறிமுதல்

கொரியர் சர்வீஸ் நிறுவனம் மூலமாக, கள்ளநோட்டுகளை பட்டுவாடா செய்ய திட்டமிட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ரூ.317 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

குஜராத், மகாராஷ்டிராவில் ரூ.317 கோடி கள்ளநோட்டு பறிமுதல்
X

குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் கள்ளநோட்டுகள் பறிமுதல்

இந்தியாவில் சில மாநிலங்களில் கள்ளநோட்டு புழக்கம், பரவலாக உள்ளதாக, போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வருகிறது. உண்மையான கரன்ஸி தாள்களில் இருப்பதை போலவே, போலி ரூபாய் தாள்களிலும் அச்சிட்டு, கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதால், எளிதில் கண்டுபிடிக்க முடிவதில்லை. பணப்புழக்கம் அதிகமாக உள்ள இடங்களில், கள்ளநோட்டுகளையும் கலந்து விடுவதால், சில மணி நேரங்களில், போலி நோட்டுகளும் பல்வேறு பகுதிகளில், புழக்கத்தில் சென்றுவிடுகிறது. இதனால், கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்க, கள்ளநோட்டு அச்சிடுதல், புழக்கத்தில் விடும் கும்பல்களை பிடித்தால் மட்டுமே, இந்த குற்றச்செயல்களை தடுக்க முடியும் என்ற நிலை உள்ளது.

குஜராத் மாநிலத்தில், ரூபாய் கள்ள நோட்டுகளை மர்ம கும்பல் புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு, தகவல் கிடைத்தது. இதேபோல், மகாராஷ்டிராவிலும் கள்ள நோட்டுகள் புழக்கம் இருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பல்வேறு இடங்களில், அம்மாநில போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட குற்றவாளி விகாஸ் உள்ளிட்ட 6 பேரை போலீசார், கைது செய்தனர். போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 317 கோடி ரூபாய் மதிப்பிலான, போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அதிலும் முக்கியமாக, மகாராஷ்டிராவில் மட்டும் 227 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போலீசார் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளியான விகாஸ் குஜராத், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், டெல்லி என நான்கு மாநிலங்களில் கொரியர் சர்வீஸ் நிறுவனத்தை நடத்தியுள்ளார். வட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கள்ள நோட்டுகளை அச்சிட்டு, அதை தனது கொரியர் நிறுவனம் மூலம் மும்பைக்கு கொண்டு வந்துள்ளார். பின்னர் அதை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து புழக்கத்தில் விட முயற்சித்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட விகாஸ் உள்பட 6 பேரையும் போலீசார், சிறையில் அடைத்தனர்.

விழிப்புணர்வு அவசியம்:

கள்ளநோட்டுகளை அச்சிடும் கும்பல், அவற்றை புழக்கத்தில் விடுகின்றனர். உண்மையான ரூபாய் தாள்களுடன், கள்ளநோட்டுக்களையும் கலந்து விடுகின்றனர். பணப்புழக்கம் அதிகமாக உள்ள, மக்கள் கூட்டமாக வரும் இடங்களில், கடை வீதிகளில், வர்த்தக பகுதிகளில் பணத்தை செலவு செய்கின்றனர். வாடிக்கையாளர் கூட்டம் நிறைந்துள்ள போது, கள்ளநோட்டுகளை கவனித்து பார்த்து வாங்காமல், பலரும் பணத்தை வாங்கவோ, கொடுக்கவோ செய்கின்றனர். நாளடைவில், புழக்கத்தில் கள்ளநோட்டு, பழையதாகி கண்டுபிடிக்கப்படாமலேயே போய் விடுகிறது.

தமிழகத்தில், 2 ஆயிரம் ரூபாய் புழக்கத்தில் வந்த ஆரம்ப நாட்களில், அதே அளவு வெட்டப்பட்ட காகித தாளில், கலர் ஜெராக்ஸ் எடுத்து, 'டாஸ்மாக்' மதுபான கடைகளிலும், பெட்டிக்கடைகளிலும் புழக்கத்தில் விட்ட சிலர், போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, கள்ளநோட்டுகள் குறித்த விழிப்புணர்வை, மக்கள் மத்தியில் அதிகரிக்க செய்ய வேண்டும்.

Updated On: 5 Oct 2022 7:41 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?