/* */

இந்தியாவின் ஆபத்தான இடத்திற்கு போகலாம் வார்றீகளா?....வாங்க.....

Rowdyism in India-சாதாரண சமதள ரோட்டில் யார் வேண்டுமானாலும் வாகனத்தினை ஓட்டலாம்-ஆனால் சவாலான ரோடுகளில் பயணம் செய்வது ஆபத்தானதும் கூட...வாங்க அந்த ஆபத்தினைப் பார்ப்போம்.

HIGHLIGHTS

Rowdyism in India
X

Rowdyism in India

owdyism in India

இந்தியாவில் மனிதர்கள் நடமாடும் பகுதியிலேயே ரவுடிகள் சேட்டை செய்யும்போது ஆள் அரவம் இல்லாத பகுதிகளில் மனித நடமாட்டம் இருந்தால் சும்மா விடுவார்களா? அதுபோல் இந்தியாவைப் பொறுத்தவரை 15 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு நாம் எத்தனை பேராக சென்றாலும் ஆபத்து ஆபத்துதான்...ஒருபுறம் இயற்கை, தட்பவெப்பநிலை, மலை ரோடுகள் என பயமுறுத்தினாலும்., மனித நடமாட்டமே இல்லாதபகுதிகளாக இருப்பதால் இப்பகுதியில் தீவிரவாதிகள் முதல் ரவுடிகள் வரை அட்டகாசம் செய்ய அருமையான வாய்ப்புள்ள இடம் ... சரி... சரி .. பயப்படாதீங்க.. .வாங்க என்னான்னு போய் பார்த்துடுவோம்...

இந்தியாவைப் பொறுத்தவரை பல இடங்களில் இயற்கை காட்சிகள், தட்ப வெப்பநிலை மாறுபாடு, காடுகள், மலைப்பாதைகள், பசுமை புல்வெளிகள் என அழகு கொட்டிக்கிடந்தாலும் உங்களுடைய முதுகெலும்பினையே சில்லிடச்செய்யும் குளுமையான இடங்களும் இந்தியாவில் உண்டு. உங்களுக்கு தெரியுமா? மேலும் இப்பகுதிகளில் நீங்கள் பயணம் செய்தால்ஒரு த்ரில்லிங்கான அனுபவம் கிடைப்பது உறுதி. பொழுது போக்கான இடமாக இருந்தாலும் இப்பகுதிகளில் மென்மையான இதயம் கொண்டவர்கள் எவரும் பயணம்செய்வது என்பது கடினமானதாகவே இருக்கும். அந்த அளவிற்கு இந்த இடங்கள் நம்மை வரவேற்று பயமுறுத்தக்கூடியவைகள்தான் . சரி பார்ப்போம் வாங்க..

Rowdyism in India

Rowdyism in India

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள டிராஸ் பகுதி படம் (கோப்பு படம்)

1. டிராஸ், ஜம்மு , காஷ்மீர்

இந்தியாவில் மிகவும் ஆபத்தான இடம் என்றால் இந்த டிராஸ்தான்னா பார்த்துக்கங்களேன். இந்த இடத்தினை கேட்வே ஆஃப் லடாக் என்றும் சொல்வர். இந்த இடத்தினுடைய உயரமானது நிலப்பரப்பிலிருந்து 10,597 அடியாகும். எப்போதும் குளிர்ந்த சீதோஷ்ணம் என்பதால் குளிர்க்காற்றுதான். இந்த பகுதியில் மைனஸ் 45 டிகிரிக்கும் கீழ்தான் வெப்பநிலையே இருக்கும் ஒரு சில நேரங்களில் மைனஸ் 60 டிகிரிக்கும் கீழ் சென்று சாதனை படைத்த வரலாறும் உண்டு.1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் நம் வசமான பகுதியாகவும் இந்த ஜம்முகாஷ்மீர் பகுதி திகழ்கிறது. தற்போது இப்பகுதியானது இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த டிராஸ் பள்ளத்தாக்கிற்கு வந்தவர்கள் இந்த இடத்தினை விட்டு அகல சற்றே தயக்கம் காட்டுவார்கள் அந்த அளவிற்கு கொள்ளை அழகு நிறைந்த குளிர்ச்சியான பகுதியாக திகழ்கிறது. படத்தில் பாருங்களேன்...உங்களுக்கே புரியும்.

Rowdyism in India

குஜராத் மாநிலத்திலுள்ள டூமாஸ் பீச் அதாவது கருப்பு மணல் கொண்டது (கோப்பு படம்)

Rowdyism in India

2.டூமாஸ் பீச், குஜராத்

இந்தியாவில் அடுத்த அபாயகட்டமான இடம் எது தெரியுமா? குஜராத் மாநிலத்திலுள்ள டூமாஸ் கடற்கரைப்பகுதியைத்தான் சொல்லவேண்டும். இந்த கடற்கரைப்பகுதியானது மிகவும் அழகாக காணப்படும். கறுப்பு தங்கத்தினை அதாவது கறுப்பு மணலினைக் காணலாம் இந்த பீச்சில். அரபிக்கடலோர பகுதியாக திகழும் இந்த பீச் பகுதிக்கருகே முன்பு இந்துக்களின் புதை மயானம் இருந்ததால் இங்குள்ள மணல் அனைத்தும் கருப்பு கலராக மாறிப்போனது. இறந்தவர்களின் சடலங்களை எரிக்கும்போது அந்த சாம்பல்கள் மணலுடன் கலந்து கருப்பு கலராகவே மாறிப்போனதுங்க.ஆனால் ஒண்ணுங்க... பகல் நேரத்தில நீங்க எவ்வளவு நேரம் வேணும்னாலும் இங்க இருக்க அனுமதி உண்டு. சூரியன் அஸ்தமனத்திற்கு பிறகு இப்பகுதிகளில் வர அந்த மாநில அரசே தடைவி்தித்துள்ளது அப்படின்னா எவ்வளவு டேஞ்சரான இடம்னு பார்த்துக்குங்க...கடலைப்பார்த்தா அழகாத்தான் தெரியும்.. ஆனா கடற்கரையைப்பார்த்தாதான் பயமா இருக்கும்னா பார்த்துக்குங்களேன்...

Rowdyism in India

இமாச்சல பிரதேச மாநிலத்திலுள்ள ரோடங் பாஸ் எனும் இடத்தின் ஆபத்தான பனிரோடு (கோப்பு படம்)

Rowdyism in India

3.ரோடங்பாஸ்,இமாச்சலபிரதேசம்

இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள ரோடங்பாஸ் என்ற மிக உயரமான மலை ஆபத்தான பகுதிங்கோ. கடற்மட்டத்திலிருந்து 13,054 அடி உயரத்தில் உள்ள மலையாக திகழ்கிறது இந்த ரோடங்பாஸ். இந்த மலைப்பகுதியானது குல்லு,லாகுல், ஸ்பீ்ட்டி மற்றும் லே பகுதிகளை இணைக்கிறது. எனவே இந்த மலையானது நாட்டின் முக்கிய பகுதியாக கருதப்படுகிறது.உயரமான மலைப்பகுதிக்கு செல்லக்கூடிய ஆபத்தான ரோடுகள், வளைவுகள், திடீர் திடீர் பனித்துளிகள், குறுகலான வளைவான ரோடுகள், திடீர் இறக்கமான ரோடு என வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் இடமாக இது திகழ்கிறது.

ரோடங்பாஸ்க்கு செல்லஇந்திய அரசாங்கமானது மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரைதான் இந்த பகுதியானது போக்குவரத்திற்காக திறக்கப்படுகிறது. திடீரென நினைத்தால் நாம் இந்த பகுதிக்கு சென்று விட முடியாது என்பதை நினைச்சுக்கோங்க...

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள அழகிய இயற்கை சூழல்மிகுந்த குரெஸ் பள்ளத்தாக்கு (கோப்பு படம்)

Rowdyism in India

4.குரெஸ் பள்ளத்தாக்கு- ஜம்மு, காஷ்மீர்.

பேரிலேயே பள்ளத்தாக்கு உள்ளதால் பயமாகத்தான் இருக்கும்போல. இதுவும் ஒரு அபாயகரமான இடமாக கருதப்படுகிறது. இது ஸ்ரீ நகரிலிருந்து 130 கி.மீ.தொலைவில் உள்ளது. இந்த பள்ளத்தாக்கானது ஆறுகள், புல்வெளிகள் படர்ந்த நிலப்பரப்புகள், மலைப்பகுதிகளைக் கொண்ட இடமாகும். பாகிஸ்தானின் எல்லைப்பகுதியினை ஒட்டி வருகிறபகுதியாக திகழ்வதால் இது மிகவும் ஆபத்தான பகுதியாக திகழ்ந்து வருகிறது. பல கண்ணி வெடிகள் இங்கு வெடிப்பது வாடிக்கையான நிகழ்வாகி வருகிறது. ஏராளமான பொதுமக்கள் மற்றும் படைவீரர்கள் இங்கு இறந்ததாக சான்றுகள் தெரிவிக்கிறது. 3 நாட்களில் 80 கண்ணிவெடி வெடித்த வரலாறும் உண்டு இப்பகுதியில். இவ்வளவு கொடுமையான ஆபத்தான பகுதியாக இருந்தாலும் இந்த பகுதியின் அழகைக் கண்டால் நாம் நம் மனதையே பறிகொடுத்துவிடுவோம்... அவ்வளவு இயற்கை அழகு...என்ன செய்ய?,,,போக முடியாது பயத்தினால்...

Rowdyism in India

ராஜஸ்தான் மாநிலத்தில் முற்காலத்தில் பாலிவால் என்ற பிராமண சமூகத்தினர் வாழ்ந்த கிராமம் (கோப்பு படம்)

Rowdyism in India

5. குல்தாரா, ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள குல்தாரா பகுதியானது மிகவும் ஆபத்தான பகுதியாக கருதப்படுகிறது. முற்காலத்தில் பாலிவால் என்ற பிராமண சமூகத்தினர் இங்கு வசித்ததற்காக வரலாறு தெரிவிக்கிறது. ஆனால் ஒரே ஒரு இரவில் இக்கிராமத்தில் வசித்த அனைவரையுமே வெள்ளம் வந்து இழுத்துச் சென்றதாகவும் தகவல். அவர்களில் ஒரு சிலரதுவீடுகளும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதால் அவர்கள் யாரும் திரும்ப இங்கு வரவே இல்லை. இன்று வரை யாருமே இந்த கிராமத்திற்கு திரும்பியதாக தகவல்கள் இல்லை. நொடிந்த இந்த கிராமத்தில் இனியும் யாரும் வந்து இருக்கப் போவதுமில்லை. ஒரு சில வீடுகள் மட்டும் காணப்பட்டாலும் அதில் வசிக்கத்தான் யாருமே இல்லை. கிராமமே வெறிச்சோடிக்காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்லக்கூடிய இடமாக பகலில் காணப்பட்டாலும் இந்திய தொல்பொருள் துறையின் பராமரிப்பில் இந்த வரலாற்று கிராமம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதுவும் ஒரு ஆபத்தான இடந்தான் போங்க....

Rowdyism in India

யப்பா...யப்பா...ஆபத்தான வளைவுகளைக்கொண்ட கொல்லி மலை மலைப்பாதையின் தோற்றம் (கோப்பு படம்)

Rowdyism in India

6. கொல்லிமலை ரோடு, தமிழ்நாடு

கொல்லிமலைக் காட்டுக்குள்ளே...டும்...டும்..டும்...என்று ஓர் சினிமா பாட்டு நடிகர் மோகன் நடித்த சரணாலயம் படத்தில் வரும். அதுபோல் இந்த மலைப்பகுதியானது டும்..டும்.. என்றுதான் பயணம் செய்யணும் போல .இந்த மலையை நிலப்பரப்பில் இருந்து அடைய வேண்டுமாயின் 46.7 கி.மீ. துாரத்தினை 70 ஹேர்பின் பெண்டுகள் உள்ள பாதையில் பயணம் செய்ய வேண்டும். வாகன டிரைவர்கள் மிகவும் உஷாராக வாகனத்தினை இயக்கிச்செல்லவேண்டிய பகுதி இது. அதுவும் நகை நட்டோடு பயணித்தால் அவ்வளவுதான் இடையில் வழி மறித்து கொள்ளையடிப்பதோடு கொன்று போடுவதும் நடக்கிறது. ஒரு சில பெண்டுகளைக் கடக்கும்போது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியின் அழகான தோற்றத்தையும், சிவனுடைய ஆலயத்தினையும்காண முடிகிறது.

Rowdyism in India

ஆபத்தான ஜந்துகள் வாழும் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள தார் பாலைவன மணல் திட்டுகள் (கோப்பு படம்)

7. தார் பாலைவனம், ராஜஸ்தான்.

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள தார் பாலைவனமானது இந்தியாவில் மோசமான ஆபத்தான பகுதியாக கருதப்படுகிறது. வாழ்க்கையில் இதுபோன்ற பாலைவனங்களில் பயணம் செய்வது ஆபத்தானது என்றாலும் ரம்மியமான மணற்படுகையைக் கண்டு ரசிக்கலாம். ஆனால் இந்த பாலைவனத்தில் பயணம் செய்கையில் நம் உயிருக்கு உத்தரவாதமில்லை. இந்த பாலைவனத்தில் 20 க்கும் மேற்பட்ட ஜந்துக்கள் உள்ளதால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. கருநாகம், இருதலை மணியன், அறுக்கப்பட்ட விரியன், ரேட்சினேக் உள்ளிட்ட பல விதமான ஜந்துகளைக் காணலாம். நல்ல தட்பவெப்பநிலை என நாம் பாலைவனத்துக்குள் சென்றாலும் இந்த ஜந்துகளின் ஆபத்திலிருந்து தப்பிக்க முடியாது.

Rowdyism in India

சட்டீஸ்கர் மாநிலத்தில் அடர்ந்த காடுகளுக்கு நடுவே ஆபத்தான ரோட்டில் வாகனம் செல்லும் நிலை (கோப்பு படம்)

8.பாஷ்டர், சட்டீஸ்கர்.

சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள இந்த பாஸ்டர் மிகவும் மோசமான இடமாகும். அருமையான இயற்கை பேரழகை இந்த இடம் கொண்டிருந்தாலும் ஆபத்தான பகுதியும்கூட. பச்சை மலைப்பகுதியானது மாவோயிஸ்ட்களின் புகழிடமாக திகழ்ந்து வருகிறது. இந்த இடத்தில் மாவோயிஸ்ட்களுக்கும், நமது பாதுகாப்பு படைக்கும் நடந்த கொரில்லாப் போரில் ஏராளமானோர் இறந்துள்ளனர். இதனால் இந்த பகுதியானது மிகவும் ஆபத்தான பகுதி என இந்திய அரசு நிர்ணயித்துள்ளது. இந்த பகுதியைச் சுற்றிலும் 5000மாவோயிஸ்ட்கள்இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய மலைவாழ்பிரதேசமாக இந்த இடம் கருதப்பட்டாலும் மாவோயிஸ்ட்களால் இதன் புகழை தக்க வைக்க முடியவில்லை.

ராஜஸ்தான் மாநிலத்தில் குன்றுகளுக்கு நடுவே அமைக்கப்பட்ட ஆபத்தான பங்கார் கோட்டை (கோப்பு படம்)

9. பங்கார், ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பங்கார் இந்தியாவின் ஒரு ஆபத்தான இடமாக உள்ளது. இது ராஜஸ்தான்மாநிலத்திலுள்ள ஆல்வார் மாவட்டத்தில் உள்ளது. மேலும் இந்த கோட்டையின்அருகே உள்ள கிராமங்களில் உள்ளோருக்கு இந்த இடம் பழகிப்போன ஒன்று. கோட்டையினுள் ஏதோ ஒன்று நடக்கிறது தன்னார்வலர்கள் பலர் கோட்டையில் இரவு நேரத்தில் தங்க விருப்பம் தெரிவித்தவர்கள் மறு நாள் திரும்பியதில்லை. இருந்தாலும் இது ஒரு சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டாலும் ராஜஸ்தான் அரசானது சூரியனின் மறைவிற்கு பிறகு இக்கோட்டைக்கு செல்ல யாரையும் அனுமதிப்பதில்லை. முகப்பு மெயின் கேட் மாலை நேரத்தில் மூடிவிட்டால் மறுநாள் காலைதான் திறக்கப்படுகிறது.

மறைந்த கொள்ளைக்காரி பூலான்தேவி, பண்டிட்குயின் ஆகியோர் அடைக்கலம்இருந்த சம்பல் பள்ளத்தாக்கு(கோப்புபடம்)

Rowdyism in India

10.சம்பல் பள்ளத்தாக்கு , மத்தியஇந்தியா.

இந்தியாவில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கானது மற்றொரு ஆபத்தான பகுதியாக திகழ்கிறது. மத்திய இந்தியா பகுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை ஒன்றிணைக்கும் பகுதியாக இந்த சம்பல் பள்ளத்தாக்கானதுஉள்ளது. இந்த பகுதியில்தான் பண்டிட் குயின், பூலான்தேவி ஆகியோர் தங்களுடைய செயல்பாட்டினை செய்தனர். இந்தப் பள்ளத்தாக்கு பகுதியில் ஏராளமான குகைகளும், புல்படர்ந்த காட்டுப்பகுதிகளும், ஆறு,மற்றும் செங்குத்தான பாறைப்படிமங்களும், உள்ளதால் பயங்கரவாத கும்பல்கள் தங்கும் புகலிடமாக இருந்து வந்துள்ளது. பயங்கரவாத கும்பல்தங்கும் பகுதியாக ஒரு புறம் இருந்தாலும் வனவிலங்குபிரதேசமாக வரலாற்றில் இன்றளவில் இது இடம்பெற்றிருப்பது இதன் சிறப்பை உணர்த்துகிறது.

Rowdyism in India

இந்தியாவில் உள்ள ஆபத்தான ரோடுகளில் வாகனங்கள் பயணம் செய்யும் நிலை கில்லர் கிஷ்வார் ரோடு (கோப்புபடம்)

11.கில்லர் -கிஷ்வார் ரோடு, ஜம்மு, காஷ்மீர்

இந்தியாவில் உள்ள ஆபத்தான ரோடுகளில் இதுவும் ஒன்றாகும். இந்த ரோடானது 114 கி.மீ. நீளம் கொண்டது.மேலும் இது தேசியச்சாலை 26 ன் ஒரு பகுதியான தனி ரோடாகவும், செனாப் ஆறு ஓடும் இடமாகவும் உள்ளது.ஒரே ஒரு வாகனம் மட்டுமே பயணிக்கும் வகையில் அமைந்த ரோடாக உள்ளது. இந்தரோட்டின் கடைசி 50 கி.மீ ரோடானது மிகவும் ஆபத்தான ரோடு பகுதியாக உள்ளது.

மேகாலயா மாநிலத்திலுள்ள ஆபத்தான 4 கி.மீ. துாரம் கொண்ட சுண்ணாம்புக்கல் குகை (கோப்பு படம்)

12.சிஜீ குகை- மேகாலயா

இந்த குகை மேகாலயா மாநிலத்தில் அமைந்துள்ளது. இதனை பேட் கேவ் என்றும்அழைப்பர். இதனை குத்துாசிப்பாறை, தொங்கூசிப்பாறை எனவும் அழைப்பர். 4 கி.மீ. துாரத்திற்கு சுண்ணாம்புக்கல்லால் ஆன குகை உள்ளது. மேலும் சுமார் 7 கி.மீ. துாரத்திற்கு ஆராயப்படாத குகையைக் கொண்டதாக இந்த சிஜீ குகை உள்ளது. ஆபத்தானஇருண்ட பகுதியாக உள்ளது.

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் மலை உச்சிப் பகுதியில் அமைந்துள்ள புக்தல் மடாலயம் (கோப்பு படம்)

13.புக்தல் மடாலயம், ஜம்மு, காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள மற்றொருஆபத்தான பகுதிதான் புக்தல்மடாலயம் ஆகும். இந்த குகையானது துறவிகள் தியானம் செய்யக்கூடிய இடமாக அமைந்தாலும் சற்று ஆபத்தானதாக கருதப்படுகிறது. இந்த பகுதிக்கு மலையேறும் பயிற்சி உள்ளவர்கள் மட்டுமே சென்று வர முடியும். இந்த மலைக்கு நடந்தோ அல்லது குதிரை , கழுதையின் மேல் அமர்ந்தோ பயணம் செய்து வரலாம். நிலப்பரப்பிலிருந்து இங்கு வர 6 முதல் 8 மணி நேரம் வரை ஆகலாம். இந்த இடத்திற்கு வரவேண்டும் என்றால் சற்று மனதினை தைரியப்படுத்திக்கொண்டு மனதிடம் உள்ளவர்கள் மட்டுமே வரலாம். அவ்வளவு ஆபத்தான பயணம்கொண்டது.

தமிழகத்தில் கடல் மேல் அமைக்கப்பட்ட 100ஆண்டுகள் பழமை வாய்ந்த பாம்பன் பாலம் (கோப்பு படம்)

14. பாம்பன் பாலம், தமிழ்நாடு

இந்தியாவின் முதன் முதலான கடலில் 2.065 கி.மீ. துாரம் அமைக்கப்பட்ட பாலமாக இது கருதப்படுகிறது. இது மிகவும் 100வருடங்களுக்கு மேலான பழமை வாய்ந்த பாலமாக உள்ளது. கப்பல்கள் செல்லும்போது இது திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஆபத்தான பாலமாகும்.

Rowdyism in India

லடாக் பகுதியில் சாய்வான மலைப்பகுதியில்குடைந்து போடப்பட்ட ரோட்டில் பயணம் செய்யும் வாகனங்கள் (கோப்பு படம்)

15. கர்துங் லா , லடாக்

உலகத்திலேயே உயரமான வாகனம் செல்லும் ரோடுகளில் இதுவும் ஒன்று. இங்கு சென்றால் உங்களுடைய உடல் ஆரோக்யம் மற்றும் மனவலிமைக்கு ஒரு சவாலாக இது உள்ளது. காரணம் என்னவெனில் பனிப்பாதையில் சறுக்கும் தன்மை கொண்ட இடமாக உள்ளது. இங்கு சராசரியான வெப்பநிலை என்ன தெரியுமா? மைனஸ் 40 டிகிரி செல்சியஸ்தான் சராசரி வெப்பநிலையே. எதிர்பாராத பனிப்புயல் அடிக்கடி நடக்கும் பகுதியாக இது காணப்படுகிறது. இந்த பகுதியில் வாகனத்தினை ஓட்டுவது என்பது வித்தியாசமான அனுபவமாகும். சாதனையை நிகழ்த்திக்காட்ட தைரியம் உள்ளோர் இப்பகுதிக்கு வந்து பயணம் செய்யலாம். ஆனால் மனோதிடம், உடல் ஆரோக்யம் என்பது ரொம்ப ரொம்ப முக்கியமானதாகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 Feb 2024 10:53 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  2. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  3. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  7. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  8. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  9. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  10. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை