/* */

சுவாமி நாதன் ஜானகிராமன் ரிசர்வ் பேங்க் துணைக் கவர்னராக நியமனம்

reserve bank deputy governor appointed ரிசர்வ் பேங்க் துணைக் கவர்னராக எஸ்பிஐ யின் நிர்வாக இயக்குனரான சுவாமிநாதன் ஜானகிராமனை நியமித்து மத்திய அரசானது உத்தரவிட்டுள்ளது.எஸ்பியின் நிர்வாக இயக்குனர் சுவாமிநாதன் ஜானகிராமன் ரிசர்வ் வங்கியின் துணைக் கவர்னராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

சுவாமி நாதன் ஜானகிராமன் ரிசர்வ் பேங்க்  துணைக் கவர்னராக நியமனம்
X

ரிசர்வ் பேங்க் துணைக்கவர்னர் சுவாமிநாதன் ஜானகிராமன்.(கோப்புபடம்)

reserve bank deputy governor appointed

ரிசர்வ் பேங்க் துணைக் கவர்னராக எஸ்பிஐ யின் நிர்வாக இயக்குனரான சுவாமிநாதன் ஜானகிராமனை நியமித்து மத்திய அரசானது உத்தரவிட்டுள்ளது.எஸ்பியின் நிர்வாக இயக்குனர் சுவாமிநாதன் ஜானகிராமன் ரிசர்வ் வங்கியின் துணைக் கவர்னராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவர் இப்பதிவியில் சேர்ந்த நாள் முதல் மூன்று ஆண்டுகள் வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை பதவியில்நீடிப்பார் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் துணைக்கவர்னராக இருந்த எம்.கே. ஜெயினின் பதவிக்காலம் முடிவடைந்ததால் அந்த பதவிக்கு சுவாமிநாதன் ஜானகிராமன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 34 ஆண்டுக்கும் மேலாக கார்ப்பரேட் மற்றும் சர்வதேச வங்கி, சில்லரைவணிகம் மற்றும் டிஜிட்டல் வங்கி நிதி மற்றும் உத்தரவாத செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்தான் சுவாமிநாதன் ஜானகிராமன் ஆவார். மேலும் இவர் முதன் முதலாக பெங்களூரில் உள்ள எஸ்பிஐ பேங்கில் தனது பணியைத்துவக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலுள்ள கும்பகோணத்தினைச் சேர்ந்த இவர் கடந்த 1981ல் மேல்நிலைப்பள்ளி படிப்பையும், 1984ம் ஆண்டு கும்பகோணம் கல்லுாரியில் படித்தார். மேலும் மும்பையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் அண்டு பைனான்ஸ் கல்வி நிறுவனத்தில் வணிக வங்கி மற்றும் நிதிப்பாடங்களில் சான்றிதழ் படிப்பைமுடித்தார்.

பின்னர் லண்டனில் உள்ள ஐஎப்எஸ் ஸ்கூல் ஆப் காமர்ஸ் ஆவணக் கடன் நிபுணர்களுக்கான சான்றிதழ் படிப்பையும் 2015ம் ஆண்டு தேசிய வணிக மேலாண்மை கல்வியத்தில் எம்பிஏ பட்டப்படிப்பையும் முடித்துள்ளார் .

தமிழகத்தினைச் சேர்ந்தவரான இவர் ரிசர்வ் பேங்கின் உயரிய பதவிக்கு தேர்வானது தமிழகத்திற்கே கிடைத்த பெருமையாகும்.

Updated On: 22 Jun 2023 4:52 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  2. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  3. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  9. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  10. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...