/* */

Kudiyarasu Dhinam Tamil Speech-குடியரசு தின நாளில் சகோதரம் பேணுவோம்..! குடியரசு தின பேச்சு..!

Kudiyarasu Dhinam Tamil Speech-நம்மை நாமே ஆட்சி செய்துகொள்வதற்கான அரசியல் அமைப்புச் சட்டத்தை நாம் வடிவமைத்துக்கொண்ட நாள், குடியரசு தினம்.

HIGHLIGHTS

Kudiyarasu Dhinam Tamil Speech
X

Kudiyarasu Dhinam Tamil Speech

குடியரசு தினவிழா கொண்டாட்டம்

Kudiyarasu Dhinam Tamil Speech

ஜனவரி 26ம் தேதி இந்தியா தனது 74வது குடியரசு தின விழாவினைக் கொண்டாட உள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு மிக பிரம்மாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறவுள்ளன. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். பிரம்மாண்டமாக நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் முப்படைகளின் கம்பீரமான அணிவகுப்பும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் பல்வேறு மாநிலங்களின் ஊர்திகளும் வழக்கமாக நடைபெறுவதுபோல இடம்பெறவுள்ளது.

குடியரசு தின நாளில் பள்ளிகள், அலுவலகங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். குடியரசு தினத்தையொட்டி ஒவ்வொரு பள்ளி, கல்லூரி அல்லது பிற நிறுவனங்களில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்படும். அன்றைய தினத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் குடியரசு தினத்தின் சிறப்புகளைப் பற்றி பேசுவார்கள்.

மாண்புமிகு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு

குடியரசு தினம் என்பது அனைத்து இந்தியர்களும் ஒன்று கூடி, நமது நாட்டை சிறந்ததாக, எல்லா வகையிலும் வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்தோடு இணைந்து கொண்டாட வேண்டிய ஒரு தேசிய விழாவாகும்.

நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் மற்றும் போராட்டங்களை நினைவு கூர்வதற்கும், சிறந்த, வளமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேசத்தை உருவாக்குவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலிமைப்படுத்துவதற்கும் இது சரியான நேரம்.

Kudiyarasu Dhinam Tamil Speech

குடியரசு தின பேச்சு

இந்தியக் குடியரசு என்றால் என்ன?

இந்தியா 2023ம் ஆண்டின் ஜனவரி மாதம் 26ம் தேதி தனது 74வது குடியரசு நாளை (Republic Day) கொண்டாடுகிறது. இந்த நாளில் நாம் குடியரசு என்றால் என்ன என்பதைப் பற்றி முதலில் தெரிந்து கொள்வது அவசியம். குடியரசு என்பதன் பொருள், மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி என்பதை வலியுறுத்துவதாகும்.

குடியரசு என்பது மக்களே தங்களுக்கான அரசாங்கத்தையும் அதனுடைய சட்ட திட்டங்களையும் உரிமைகளையும், கடமைகளையும் உருவாக்கி நாட்டை கட்டமைத்துக்கொண்டு அதன் வழியில் முன்னேற்றுவதற்கு உண்டான அனைத்து வநோக்கங்களையும் அனைத்து மக்களுக்கான சமூக நீதியையும் உருவாக்குவதுதான் ஆகும்.

குடியரசு தின வரலாறு

1950ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. அன்றைய தினத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்திய அரசியலமைப்பு 1949 நவம்பர் 26ம் தேதி கன்ஸ்டிட்யூட் அசெம்பிளி ஆப் இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், இது இந்திய அரசு சட்டம் 1935-இல் இருந்து பின்பற்றப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியை தூக்கி எறிந்து விட்டு இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கொண்ட ஒரு குடியரசு உருவாவதற்காக வழிவகை செய்தது.

Kudiyarasu Dhinam Tamil Speech

ஜனவரி 26, 1950 -இன் முக்கியத்துவம்

இந்திய அரசியலமைப்பு என்பது இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் கட்டமைப்பையும் செயல்பாட்டையும் வரையறுக்கிறது. மேலும் இது குடிமக்களுக்கான உரிமைகளையும் கடமைகளையும் உள்ளடக்கிய ஒரு முக்கிய ஆவணம் ஆகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் (த கான்ஸ்டிடியூஷன் ஆஃப் இந்தியா) இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கான சமத்துவத்தையும், பேச்சுரிமையும், தனி மனித சுதந்திரத்தையும், பத்திரிகை சுதந்திரத்தையும் உத்தரவாதம் செய்கிறது. மதம், ஜாதி, அல்லது ஆண், பெண் போன்ற எதனையும் பொருட்படுத்தாமல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு கீழே அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்தியா, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற ஜனநாயக குடியரசாக மாறியது. இதில் இந்திய குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராகவும் பிரதமர் அரசாங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் சிறப்பு

குடியரசு தின கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வான அணிவகுப்பு புது தில்லி, ராஜ்பாத்தில் நடைபெறுகிறது. இந்த அணிவகுப்பில் உலகெங்கிலும் இருந்து முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான மக்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த அணிவகுப்பில் இந்தியாவின் கலாச்சார மற்றும் இராணுவ வலிமையை பறைசாற்றுவதற்கான காட்சிகள் நடைபெறும். பல்வேறு மாநிலங்கள் மற்றும் கலாச்சார குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்குபெறும். அணிவகுப்புக்கு முன் இந்தியக் குடியரசுத் தலைவர் "நாட்டு மக்களுக்கு உரை" நிகழ்த்துவார். அணிவகுப்பைத் தொடர்ந்து கொடியேற்றம், 21 துப்பாக்கி முழங்குவதுடன் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

குடியரசு தினக்கொண்டாட்டம், ஜனநாயகம் மற்றும் தனிநபர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நாட்டின் உறுதிப்பாட்டை நினைவூட்டுகிறது. இது இந்திய அரசியலமைப்பை மதிக்கும் மற்றும் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடும் நாளாகும்.

Kudiyarasu Dhinam Tamil Speech

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

இந்திய அரசமைப்பு சட்டத்தை எளிதாக விளங்குவதற்காக நாம் அதை மூன்று பிரிவின் கீழ் கொண்டு வரலாம். அதாவது அரசாங்கத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு, குடிமக்களின் உரிமைகள், கடமைகள், சமத்துவம் மற்றும் சுதந்திரம். இந்த மூன்று தலைப்புகளைப் பற்றி கீழே சுருக்கமாக பார்ப்பதன் மூலம் நாம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றிய புரிதலுக்கு வரலாம்.

அரசாங்கத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு

இந்திய நாட்டின் அரசாங்க அமைப்பு என்பது ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற ஜனநாயக குடியரசாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய அரசாங்கத்திற்கான கட்டமைப்பு மற்றும் செயல்பாடு அதன் கடமைகள் மற்றும் உரிமைகளை வரையறை செய்கிறது. அந்த நெறிமுறைகளின் அடிப்படையில் அரசு ஆட்சி செய்கிறது.

குடிமக்களின் கடமைகள் மற்றும் உரிமைகள்

இந்திய குடிமக்கள் அனைவரும் இந்தியக் குடியரசு அமைப்புச் சட்டத்தை மதித்து நடப்பது அவர்களது கடமையாகும். மேலும் இந்திய அரசியலமைப்பு இந்திய நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் மதம், ஜாதி, பாலின பேதமின்றி சமத்துவத்தை உறுதிப்படுத்துகிறது.

இந்திய குடிமக்களுக்கு ஆறு அடிப்படை உரிமைகளை அரசியலமைப்பு பின்வருமாறு உத்தரவாதம் அளிக்கிறது.

  • சமத்துவத்திற்கான உரிமை
  • சுதந்திரத்திற்கான உரிமை
  • சுரண்டலுக்கு எதிரான உரிமை
  • மத சுதந்திரத்திற்கான உரிமை
  • கலாச்சார மற்றும் கல்வி உரிமைகள்
  • அரசியலமைப்பு தீர்வுகளுக்கான உரிமை

சமத்துவம் மற்றும் சுதந்திரத்திற்கான முக்கியத்துவம்

மக்களாட்சி மற்றும் தனிநபர் உரிமைகளை பாதுகாக்கும் கொள்கைகளை முன்வைக்கும் ஒரு முக்கியமான ஆவணமே இந்திய அரசியலமைப்பு ஆவணம் ஆகும்

Kudiyarasu Dhinam Tamil Speech

கூட்டாட்சி நாடாளுமன்ற ஜனநாயகக் குடியரசு

ரிபப்ளிக் ஆஃப் இந்தியா ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற ஜனநாயக குடியரசு ஆகும். இது கீழ்க்காணும் தலைப்புகளில் அரசின் கொள்கைகளையும், கட்டமைப்புகளையும், அரசாங்கத்தின் தலைவர்களின் பங்களிப்பையும், மாநிலங்களின் பிரிவுகளைப் பற்றியும் கூறுகிறது.

அரசாங்கக் கட்டமைப்பின் விளக்கம்

கூட்டாட்சி நாடாளுமன்ற ஜனநாயக குடியரசு என்பது ஒரு மத்திய அரசு மற்றும் மாநில , யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கியதாகும். இந்திய குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராகவும், பிரதமர் அரசாங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் பங்கு

இந்திய குடியரசுத் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் மூலம் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுபவர்.

இந்திய பிரதமர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதாவது நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையைப் பெற்றவரே பிரதமராகிறார். இந்திய குடியரசு தலைவரால் பிரதமர் நியமிக்கப்படுகிறார். இவரின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்

இந்தியா 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டாட்சி நாடாகும். மாநிலங்கள் மேலும் மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் வட்டங்களாகவும், சிறிய நிர்வாகப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

Kudiyarasu Dhinam Tamil Speech

பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார பாரம்பரியம்

இந்தியாவில் வாழும் மக்கள் பல்வேறு மொழிகளை பேசுபவர்கள் ஆகவும், பல்வேறு கலாச்சாரங்களை உடையவர்களாகவும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையில் வாழ்பவர்கள். இந்திய நாடு என்பது பல்வேறு இனக்குழுக்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட ஒரு அரசாங்க அமைப்பாகும். மொழி,இன, மத அடையாளங்களைக் கடந்து சகோதரர்களாக வாழ்பவர்கள்.

இந்தியாவின் பன்முகத்தன்மை பற்றிய விளக்கம்

இந்தியாவில் பல்வேறு மொழிகள் மதங்கள் மற்றும் கலாரச்சாரங்களை உள்ளடக்கிய ஒரு தொன்மையான நாடாகும். தேசிய மொழி என்று இந்தியாவிற்கு எதுவும் கிடையாது.

அதற்கு பதிலாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் 22 பிராந்திய மொழிகளை அட்டவணைப்படுத்துகிறது. மாநிலங்கள் தங்களுக்கான அலுவலக மொழிகளை தாங்களே சட்டம் இயற்றி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இந்தியப் பண்பாட்டு மரபு

இலக்கியம், கலை, இசை மற்றும் உணவு உள்ளிட்ட வளமான கலாச்சார பாரம்பரியத்திற்கு இந்தியா பெயர் பெற்றது.

கணிதம், அறிவியல் மற்றும் மருத்துவத்தில் இந்தியாவின் பங்களிப்புகள்

கணிதம் அறிவியல் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளிலும் இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.

இந்தியக் குடிமக்களின் கடமை

இந்திய குடியரசு ஒரு நீண்ட மற்றும் பெருமைமிக்க வரலாற்றை கொண்டுள்ளது. இந்த திருநாட்டின் மதிப்புகளையும் கொள்கைகளையும் நிலை நிறுத்துவது குடிமக்களாகிய நமது கடமையாகும்.

இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் குடிமக்களின் பங்கு

  • உலகிற்கு முன்மாதிரியாக இருக்கும் வலுவான மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
  • இந்தியா அதன் மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு உண்மையாக இருப்பதை உறுதி செய்வது எதிர்கால குடிமக்களின் பொறுப்பு.
  • இந்தியாவின் குடிமக்கள் என்ற முறையில் நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நம் பங்கை மேற்கொள்ளுவதும், அதன் கொள்கைகளுக்கு உண்மையாக இருப்பதையும் உறுதி செய்வதும் நமது பொறுப்பாகும்.
  • மேலும் இந்தியாவில் உள்ள பல்வேறு கலாச்சார இனங்களையும், மொழிகளையும் நாம் மதிப்பதும், சகோதரத்துவத்துடன் இருப்பதும் நமது முக்கிய பொறுப்பாகும்.
  • அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Updated On: 19 March 2024 6:52 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  2. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  3. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  5. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  6. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  8. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  9. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  10. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...