/* */

rail ac fare discount announcement ஏ.சி. வகுப்புகளுக்கான கட்டணத்தினை 25 சதவீதம் குறைக்க ரயில்வே துறை முடிவு

rail ac fare discount announcement இந்தியாவில் பயணிக்கும் ரயில்களில் ஒரு சில நேரத்தில் போதிய பயணிகள் இல்லாத நிலை உருவாகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில் ஏசி பெட்டியில் பயணிப்போருக்கான கட்டணத்தில் தள்ளுபடியை ரயில்வே துறை அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

rail ac fare discount announcement  ஏ.சி. வகுப்புகளுக்கான கட்டணத்தினை  25 சதவீதம் குறைக்க ரயில்வே துறை முடிவு
X

ரயில்களில் காணப்படும் ஏ.சி வகுப்புகளுக்கான பெட்டி  (கோப்பு படம்)

rail ac fare discount announcement

ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 50 சதவீதத்துக்கும் குறைவாக பயணிகள் வரும் ரயில்களில் மட்டும் உள்ள ஏசி வகுப்புகளுக்கான கட்டணத்தில் 25 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கும் திட்டத்தினை ரயில்வே துறையானது அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வந்தே பாரத் ரயில்களுக்கும் பொருந்தும்.

பஸ்களைவிட இந்தியாவில் பலரும் ரயில்களில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர். தொலை துார பயணத்திற்கு ரயில் பயணமே பெரும் பயனளிக்கிறது. துாங்கும் வசதி கொண்ட ஆம்னி பஸ்கள் அதிகரித்திருந்தாலும் வயதானவர்கள் பயணம் செய்ய ஏற்றதாக ரயில் பயணம் உள்ளதால் பெரும்பான்மையான குடும்பத்தினர் ரயில்களி்ல் பயணம் செய்வதையே விரும்புகின்றனர். அந்த வகையி்ல் ஒரு சில நேரங்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்த அளவில் ஒரு சில ரயில்கள் இயங்கி வருவதால் அதனை மாற்றும் வகையில் ரயில்வே அமைச்சகமானது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



வந்தே பாரத் ரயில்கள் தற்போது இரு வண்ணங்களில் (கோப்பு படம்)

rail ac fare discount announcement

ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளதாவது, ரயில்களில் பயணம் செய்யும் பயணியர்களின் எண்ணிக்கையினையும் பயன்பாட்டையும் அதிகரிக்கும் நோக்கத்தில் ஏசி இருக்கை வசதி உள்ள ரயில்களில் கட்டணத் தள்ளுபடி அளிக்கும் திட்டமானது அறிமுகம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக ரயில்வே மண்டல முதன்மை தலைமை வர்த்தக மேலாளர்கள் இது தொடர்பாக முடிவு எடுக்க அதிகாரம் அளிக்கப்படுகிறது. 50 சதவீதத்திற்கும் குறைவான பயணிகள் வருகை தரக்கூடிய ரயில்கள், மார்க்கங்கள், ரயில் பெட்டி வகுப்புகளுக்கு ஏற்றவாறு இந்த தள்ளுபடியை அறிவிக்கலாம். இந்த அறிவிப்பானது உடனடியாக நடைமுறைக்கு அமலுக்கு வருகிறது.அடிப்படை ரயில்வே கட்டணத்தில் 25 சதவீதம் உரை தள்ளுபடி வழங்கலாம். மேலும் முன்பதிவு கட்டணம், அதிவிரைவு கட்டணம், ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவைக் கட்டணத்தில் எந்த மாற்றமும் கிடையாது. மற்ற போக்குவரத்து முறைகளுடனான விலைகளின் அடிப்படையில் இந்த தள்ளுபடியை அறிவிக்கலாம்.

ஏசி சார் கார் எனப்படும் அமரும் வசதி உள்ள வகுப்புகள் எக்சிகியூடிவ் வகுப்புகளில் இந்த சலுகையினை அளிக்கலாம். வந்தே பாரத் ரயில்கள் அனுபூதி மற்றும் விஸ்டாடோம் பெட்டிகள் உள்ளிட்ட ரயில்கள் உட்பட அனைத்து ரயில்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படும். ஒரு குறிப்பிட்ட ரயிலில் அது பயணம் துவங்கும் இடத்திலிருந்து இறுதி வரை அல்லது இடையில் உள்ள ரயில் நிலையங்களுக்கு ஏற்ப தள்ளுபடி வழங்கப்படும்.

ஏற்கனவே ரிசர்வேஷன் செய்தவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது. அதேபோல் விடுமுறை கால ரயில்கள் மற்றும் ரயில்வே துறையால் விடப்படும் சிறப்பு ரயில்களுக்கும் இந்த சலுகையானது கிடையாது என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 July 2023 7:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!