/* */

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட்

புவி கண்காணிப்புக்கான இஒஎஸ்-04 (ரிசாட்-1ஏ) செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

HIGHLIGHTS

வெற்றிகரமாக  விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட்
X

பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 5.59 மணிக்கு பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் செலுத்தப்பட்டது. முன்னதாக, அதற்கான 25 மணி நேர கவுண்ட் டவுன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இஸ்ரோ தலைவராக சோமநாத் பொறுப்பேற்ற பிறகு செலுத்தப்படும் முதல் ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் தாங்கிச் செல்லும் இஒஎஸ்-04 செயற்கைக்கோள் 1,710 கிலோ எடையுடையது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகளாகும்.

பூமியில் இருந்து 529 கிலோ மீட்டா் உயரத்தில் சூரிய வட்ட சுற்றுப்பாதையில் அது நிலைநிறுத்தப்பட உள்ளது. புவிக் கண்காணிப்பு, வேளாண், வனம் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இது பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த செயற்கைக்கோள் அனைத்து பருவநிலைகளிலும் துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டது. இதனுடன் ஆய்வுத் திட்டத்தின்கீழ் மாணவா்களால் வடிவமைக்கப்பட்ட 2 சிறிய வகை செயற்கைக்கோள்களும் ஏவப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து 10-க்கும் மேற்பட்ட ராக்கெட் திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது

Updated On: 14 Feb 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  5. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  6. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  7. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...