/* */

மக்களே! உஷார்: 16 நாட்களில் 81 பேரிடம் ரூ 1 கோடி மோசடி

Google Pay அல்லது PhonePe கேட்வேயைப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் வேண்டுமென்றே பணம் அனுப்பும் புதிய வகையான ஆன்லைன் மோசடி வெளிவந்துள்ளது .

HIGHLIGHTS

மக்களே! உஷார்: 16 நாட்களில் 81 பேரிடம்  ரூ 1 கோடி மோசடி
X

கூகுள் பே இல்லாத கடைகளே இல்லை எனும் அளவிற்கு அனைத்து இடங்களிலும் கூகுள் பே ஆக்கிரமித்துள்ளது. 10 ரூபாய் டீயாக இருந்தாலும் 10 ஆயிரம் ரூபாய் பொருளாக இருந்தாலும் அதனை கூகுள் பே வழியாக பணம் செலுத்தி வாங்குவதையே இன்றைய இளம் தலைமுறையினர் விரும்புகின்றனர்.

லட்சக்கணக்கானோர் தினந்தோறும் கூகுள் பே வாயிலாக பரிவர்த்தனைகள் மேற்கொண்டு வரும் நிலையில், கூகுள் பே மூலம் புதிய மோசடி ஒன்றை ஒரு கும்பல் அரங்கேற்றத் தொடங்கி உள்ளது. யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் வங்கிக் கணக்கு அல்லது கூகு பே கணக்கிற்கு பணத்தை அனுப்புவார். மேலும் உங்கள் கணக்கில் தவறுதலாக பணம் அனுப்பப்பட்டதாக உங்களை அழைத்து கூறி, பணத்தை அவர்களின் எண்ணுக்கு திருப்பி அனுப்புமாறு கோருவார்கள்

நீங்கள் ஒரு நல்ல எண்ணத்தில் அந்த தொகையை கூகுள் பே அல்லது ஃபோன்பே எண்ணுக்கு உடனடியாக திருப்பிச் செலுத்தியவுடன் உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும்.


இதுபோன்ற ஆன்லைன் மோசடிகள் கூகுள் பே மற்றும் போன்-பே பயன்படுத்துபவர்களை குறிவைத்து நடத்தப்படுகிறது கூகுள் பே அல்லது போன்-பே மூலம் பணத்தைத் திருப்பிச் செலுத்தும்போது, வங்கி மற்றும் பான், ஆதார் போன்ற பிற ஆவணங்கள் உட்பட உங்களின் முழுத் தகவல்களும் மோசடி செய்பவருக்குக் கிடைக்கும், மேலும். வங்கி கணக்கை ஹேக் செய்ய இந்த ஆவணங்கள் போதுமானது.

இது போன்ற மோசடியால், 16 நாட்களில் மும்பையை சேர்ந்த 81 பேரிடம் ரூ 1 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.

எனவே உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் தவறுதலாக வந்துள்ள கூறினால், இந்த விஷயத்தைக் கவனிக்குமாறு உங்கள் வங்கியைக் கேட்டுக் கொண்டு, அத்தகைய அழைப்புகளுக்குப் பதிலளிப்பது நல்லது. மேலும், பணத்தை திருப்பிக் கொடுப்பதற்குப் பதிலாக, அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணத்தைப் பெறுமாறு சொல்லுங்கள்.

மேலும் யாருக்காவது பணத்தை செலுத்துகிறீர்கள் என்றால் அவரின் பெயரை சரிபார்த்து பின்னர் அனுப்பவும். பெயரை உறுதி செய்யாமல் மற்றவருக்கு பணம் அனுப்புவது ஆபத்தானது.

தெரியாத அல்லது அறிமுகம் இல்லாத நபர் கேட்கும்போது நம்முடைய UPI ஐ ஷேர் செய்வது அல்லது தேவையற்ற ஆப்களை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏதேனும் ஆப்களை இன்ஸ்டால் செய்யுமாறு நமது போனுக்கு எதாவது sms வந்தால் அதனை தவிர்க்க வேண்டும்

Updated On: 18 March 2023 7:32 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்