Begin typing your search above and press return to search.
கோவை பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பிரதமர் மோடி
107 வயது இயற்கை விவசாயியான கோவை பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியிடம் காலில் விழுந்து பிரதமர் மோடி ஆசீர்வாதம் பெற்றார்.
HIGHLIGHTS

கோவை பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி.
டெல்லியில் உலக சிறுதானிய மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023க்கான அதிகாரப்பூர்வ நாணயம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட கோவை மாவட்டம், தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 107 வயது இயற்கை விவசாயியான பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், உலக சிறுதானியங்கள் மாநாட்டில் பங்கேற்ற கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 107 வயது இயற்கை விவசாயியான பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்றார் நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். எனது பிரதமர், எனது பெருமை!’ என பதிவிட்டுள்ளார்.