/* */

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைப்பு

Vande Bharat Express Train -காந்திநகர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

HIGHLIGHTS

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைப்பு
X

காந்திநகர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

Vande Bharat Express Train -குஜராத் மாநிலம், காந்திநகர் ரயில் நிலையத்தில் காந்திநகர்- மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்து, அங்கிருந்து கலுபூர் ரயில் நிலையத்திற்கு இன்று ரயிலில் பயணம் செய்தார்.

காந்திநகர் ரயில் நிலையத்துக்கு பிரதமர் வந்தபோது, ​​அவருடன் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்வ்ரத், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் உடன் இருந்தனர். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.0-வின் ரயில் பெட்டிகளை ஆய்வு செய்த பிரதமர், அதன் வசதிகளை பார்வையிட்டார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.0-ன் இன்ஜின் கட்டுப்பாட்டு மையத்தையும் மோடி ஆய்வு செய்தார்.

பின்னர் காந்திநகர் மற்றும் மும்பை இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரசின் புதிய & மேம்படுத்தப்பட்ட ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்து, அங்கிருந்து கலுபூர் ரயில் நிலையத்திற்கு ரயிலில் பயணம் செய்தார். ரயில்வே ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள், பெண் தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், இளைஞர்கள் உட்பட தனது சக பயணிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார். வந்தே பாரத் ரயில்களை வெற்றிபெறச் செய்ய உழைத்த தொழிலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுடனும் அவர் உரையாடினார்.

காந்திநகர் மற்றும் மும்பை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.0 பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் இரண்டு வணிக மையங்களுக்கிடையேயான இணைப்பை அது அதிகரிக்கும். இது குஜராத்தில் இருந்து வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மும்பைக்கு பயணிக்க உதவும், மேலும் விமானத்தில் கிடைக்கும் வசதிகளைப் போல குறைந்த செலவில் மும்பைக்கு பயணிக்க இது உதவும். காந்திநகரில் இருந்து மும்பைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.0 இன் ஒருவழிப்பயண நேரம் சுமார் 6-7 மணிநேரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.0 எண்ணற்ற சிறந்த, விமானப்பயணம் போன்ற பயண அனுபவங்களை வழங்குகிறது. இது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ரயில் ஆகும். மோதல் தவிர்ப்பு அமைப்பு - கவாச் உள்ளிட்ட மேம்பட்ட அதிநவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

வந்தே பாரத் 2.0 ரயில், 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 52 வினாடிகளில் எட்டுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்வது போன்ற மேம்பட்ட அம்சங்களை கொண்டது, இதன் எடை 430 டன்களுடன் ஒப்பிடும் போது 392 டன் எடை கொண்டதாக இருக்கும். இது தேவைக்கேற்ப Wi-Fi உள்ளடக்க வசதியையும் கொண்டிருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 32" திரைகள் பொருத்தப்பட்டுள்ளன, இது முந்தைய பதிப்பில் இருந்த 24" உடன் ஒப்பிடும்போது பயணிகளுக்கு தகவல் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் வழங்கும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும், ஏனெனில் ஏசிகள் 15 சதவீதம் அதிக ஆற்றல் திறன் கொண்டதாக இருக்கும். இழுவை மோட்டாரின் தூசி இல்லாத சுத்தமான காற்று குளிர்ச்சியுடன், பயணம் மிகவும் வசதியாக இருக்கும். முன்பு எக்சிகியூட்டிவ் வகுப்பு பயணிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்த பக்கவாட்டு சாய்வு இருக்கை வசதி இப்போது அனைத்து வகுப்புகளுக்கும் கிடைக்கும். எக்ஸிகியூட்டிவ் கோச்சுகளில் 180 டிகிரி சுழலும் இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன

வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் புதிய வடிவமைப்பில், காற்றைச் சுத்திகரிப்பதற்காக கூரை-மவுண்டட் பேக்கேஜ் யூனிட்டில் புகைப்பட-வினையூக்கி புற ஊதா காற்று சுத்திகரிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. சண்டிகரில் உள்ள மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு பரிந்துரைத்தபடி, இந்த அமைப்பு ஆர்எம்பியூ-வின் இரு முனைகளிலும் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டு, கிருமிகள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும். மேலும் காற்றை வடிகட்டி சுத்தம் செய்கிறது.

5ஜி சேவைகளை பிரதமர் நாளை தொடங்கிவைப்பு

புதிய தொழில்நுட்ப சகாப்தத்தை பயன்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை அக்டோபர் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடங்கி வைக்கிறார். 5ஜி தொழில்நுட்பம் தடையற்ற சேவை, உயர் தரவு விகிதம், விரைவான செயல்பாடு ஆகியவற்றுடன் மிகவும் நம்பகமான தகவல்தொடர்புகளை வழங்கும். இது ஆற்றல் திறன், அலைக்கற்றை திறன் மற்றும் நெட்வொர்க் செயல்திறனை அதிகரிக்கும்.

இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26ஆம் தேதி நடந்தது. 7 நாட்களாக 40 சுற்றுகளாக ஏலம் நடைபெற்று நிறைவடைந்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது.

ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.88 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்தது. பிரீமியம் 700 MHz அலைவரிசையை ஜியோ ஏலம் எடுத்துள்ளது. ஜியோவின் நேரடி போட்டியாளரான ஏர்டெல் ரூ.43,084 கோடி ஏலம் எடுத்தது. அனைத்து நிறுவனங்களுக்கும் அலைகற்றை ஒதுக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக 5ஜி சேவையை பிரதமர் மோடி அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இந்திய மொபைல் காங்கிரஸின் (ஐஎம்சி) ஆறாவது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஐஎம்சி 2022 "புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ்" என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1 முதல் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் விரைவான நடைமுறை மற்றும் பரவலில் இருந்து வெளிப்படும் தனித்துவமான வாய்ப்புகளை விவாதிக்கவும், காட்சிப்படுத்தவும் முன்னணி சிந்தனையாளர்கள், தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை ஒன்றிணைக்கும்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 30 Sep 2022 10:24 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  3. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  4. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  5. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  6. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  8. ஈரோடு
    ஈரோடு: அவல்பூந்துறை அருகே தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி...
  9. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  10. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு