/* */

போலீசுக்கு செக் வெச்சுட்டாங்க இனி கண்ட இடத்துல நிறுத்த முடியாது

இந்தியாவில் வாகனங்களில் வருவோரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்கின்றனர். இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு புகார் சென்றதால் இதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

போலீசுக்கு செக் வெச்சுட்டாங்க  இனி கண்ட இடத்துல நிறுத்த முடியாது
X

சுற்றுலாவுக்காக சென்ற காரை சோதனையிடும் கோவா போலீசார் (மாதிரி படம்)

காலை மற்றும் மாலை நேரத்தில் பரபரப்பாக செல்வோரை தடுத்து நிறுத்தி ஆர்சி புக் இருக்குதா? இன்சூரன்ஸ் பண்ணியாச்சா, டிரைவிங் லைசென்ஸ் எங்க, ஹெல்மெட் எங்கே என கேட்பது இனி காதில் விழாது.. எங்கங்க தமிழ்நாட்டிலா என கேட்காதீங்க., கர்நாடகா கோவா மாநிலத்திலதான் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள போலீஸ்துறை மீது பலகுற்றச்சாட்டுகள் அடிக்கடி வருகிறது. அதில் முக்கியமானது போலீசார் நடுரோட்டில் வாகனங்களை நிறுத்தி அது உள்ளதா? இது உள்ளதா? என தேவையில்லாத கேள்விகளை கேட்பதால் பொதுமக்கள் தொடர்ந்து அவர்களுடைய வேலைகளுக்கு செல்லமுடியாமல் பாதிப்படைவதாக வந்த குற்றச்சாட்டால் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சோதனையில் போலீசார் வசூல் வேட்டை நடத்துவதாகவும் தகவல் கசிந்துள்ளது. இதனால் வாகனஓட்டிகளுக்கு பணவிரயம், மன உளைச்சல், கால விரயம் ஏற்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களின் தொடர்ச்சியான புகாரின் பேரில்இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால், காவல் துறையினர் வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிக்கலாம். ஆனால் ஆவணங்களை பரிசோதிப்பதற்காக மட்டும் வாகனங்களை நிறுத்தி, வாகன ஓட்டிகளை துன்புறுத்த கூடாது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அதிரடியான உத்தரவை பிறப்பித்தது கர்நாடக மாநில டிஜிபி பிரவீன் சூட் ஆவார்.

கோவாவிலும் இந்த உத்தரவு அங்குள்ள ஐஜியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவாவைப்பொறுத்தவரை சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிக அளவில் நாள்தோறும் வரும். அதனை சோதனை என்ற பெயரில் போலீசார் தடுத்து நிறுத்தி துன்புறுத்துவதாக புகார்கள் ஆளும் கட்சியினருக்கு சென்றன.இதனையடுத்து ஐஜி ஜஸ்பால்சிங் பிறப்பித்த உத்தரவில், வாகனஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறினால் மட்டுமே அவர்களை நிறுத்தி போலீசார் அ பராதம் விதிக்கலாம் எனவும்,தேவையில்லாமல் சோதனை என்ற பெயரில் அவர்களை தடுத்து நிறுத்தகூடாது என அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார். உள்ளூர்மக்களும்இனி இதுபோன்ற சிரம நிலைக்கு தள்ளப்படமாட்டார்கள் என்பதால் நிம்மதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஐஜி செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது,

கோவாவிற்கு வெளிமாநிலங்ஙகளிலிருந்து வெளியூர்களில் இருந்து சுற்றுலாவுக்கு வருபவர்கள் சுகமான நினைவுகளுடன்தான் திரும்பி செல்லவேண்டும் என்றார். இந்த பிரச்னைகுறித்து கோவா சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதனால்தான்இந்த அ்திரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் ஐஜி.

. கோவா மாநிலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை காவல் துறையினர் துன்புறுத்த கூடாது. இது தொடர்பான உத்தரவுகளை காவல் துறையினருக்கு பிறப்பிக்க வேண்டும் என முதல் அமைச்சர் பிரமோத் சாவந்த்திற்கு எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்துதான் டிஜிபி ஜஸ்பால் சிங்கிடம் இருந்து தற்போது இந்த உத்தரவு வந்துள்ளது. ஆவண சோதனை என்ற பெயரில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் காவல் துறையினரால் துன்புறுத்தப்படுவதை காவல் துறை உயர் அதிகாரிகளும் ஒப்பு கொண்டுள்ளனர். இந்த உத்தரவானது அம்மாநில மக்களுக்கு பெருமகிழ்ச்சியை தந்துள்ளது. போலீசார் பிரச்னைகளை தீர்ப்பவர்களாக இருக்க வேண்டும். பிரச்னைகளை உருவாக்குபவர்களாக இருக்க கூடாது என போலீஸ்உயர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் அமலாகுமா?

தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத்திலும் இதுபோன்ற சோதனை என்பது ரோந்து போலீசாரால் தொடர்ந்து நடத்தப்படுவதால் பொதுமக்கள் தினந்தோறும் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டும்அல்லாமல் காலை, மாலை என இந்த வேட்டைகள் தமிழகத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. விதிகளை மீறினால் அபராதம் விதிக்கலாம். ஆனால் சரியாக வாகனம் ஓட்டி செல்பவர்களை குறுக்கிட்டு சோதனை செய்வதால் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து தமிழக காவல்துறை உயரதிகாரிகள் அனைவரும் பரிசீலித்து கோவா, கர்நாடகா போன்று இங்கும்இதனை அ மல்படுத்தினால் பொதுமக்கள் நிம்மதியடைவார்கள் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது-

Updated On: 7 Aug 2022 3:26 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?