/* */

மோடியின் கோரிக்கை ஏற்பு: ஜி20 அமைப்பில் இணைந்த ஆப்பிரிக்க ஒன்றியம்

ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி20 அமைப்பின் நிரந்தர நாடாக பிரதமர் மோடி முன்மொழிய, உறுப்பு நாடுகள் பிரதமரின்கோரிக்கையை ஏற்றன

HIGHLIGHTS

மோடியின் கோரிக்கை ஏற்பு: ஜி20 அமைப்பில் இணைந்த ஆப்பிரிக்க ஒன்றியம்
X

ஆப்பிரிக்க ஒன்றிய தலைவர் அசாலி அசோமணி மற்றும் பிரதமர் மோடி 

டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு தொடங்கியது. பிரதமர் மோடி துவக்க உரையாற்றினார். அப்போது ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி20 அமைப்பின் நிரந்தர நாடாக முன்மொழிந்தார். உலகத் தலைவர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் பேசிய பிரதமர் மோடி, "உங்கள் அனைவரின் ஆதரவுடன், ஆப்பிரிக்க யூனியனை ஜி20 அமைப்பில் சேர அழைக்கிறேன்" என்றார்.

இதையடுத்து ஆப்பிரிக்க ஒன்றிய தலைவர் அசாலி அசோமணியை, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அழைத்து வந்தார். ஜி20 தலைவர்களுக்கான இருக்கை வரிசையில் ஆப்பிரிக்க ஒன்றிய தலைவருக்காக தனி இருக்கை போடப்பட்டிருந்தது. ஆப்பிரிக்க ஒன்றிய தலைவர் அசாலி அசோமணியை பிரதமர் மோடி முறைப்படி வரவேற்று இருக்கையில் அமர வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் முன்மொழிவை அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொண்டதை அடுத்து, ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பில் இன்று இணைந்துள்ளது. இதன் காரணமாக ஜி20 அமைப்பு இனி ஜி21 அமைப்பாக மாறுகிறது.

ஆப்பிரிக்க யூனியனின் ஜி20 உறுப்பினராக இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம், பிரதமர் மோடி, ஆப்பிரிக்க யூனியனை குழுவில் நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் என்று ஜி20 தலைவர்களுக்கு கடிதம் எழுதினார்.

ஆப்பிரிக்க யூனியன் என்பது ஆப்பிரிக்க கண்டத்தின் நாடுகளை உருவாக்கும் 55 உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய ஒரு செல்வாக்குமிக்க அமைப்பாகும்

Updated On: 9 Sep 2023 7:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு