/* */

அயோத்தியில் 18 லட்சம் தீப உற்சவம் பிரதமர் மோடி பங்கேற்க பயணம்

pm modi visit to ayodhi today for 18 lakhs deepa ursavam இந்தியா முழுவதும் நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இன்று அயோத்தியில் நடக்கும் 18 லட்ச தீப உற்சவத்தினை பிரதமர் மோடி அயோத்தியில் துவக்கி வைக்கிறார்.

HIGHLIGHTS

அயோத்தியில் 18 லட்சம் தீப உற்சவம்  பிரதமர் மோடி பங்கேற்க பயணம்
X

பிரதமர் நரேந்திரமோடி.


pm modi visit to ayodhi today for 18 lakhs deepa ursavam


அயோத்தியில் சரயு நதிக்கரையோரம் பிரதமர் மோடி துவக்கி வைக்கஉள்ள 18 லட்சதீப உற்சவம் நடக்கும் இடம் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. (பைல்படம்)

pm modi visit to ayodhi today for 18 lakhs deepa ursavam

நாளை இந்தியா முழுவதிலும் தீபாவளிப்பண்டிகையானது கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அனைத்து மாநிலங்களிலும் இன்று கூட்டம் அலைமோதுகிறது. ரயில் மற்றும் பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும்இன்று வழக்கத்தினை விட அதிகரித்து காணப்படுகிறது. வாழ்வில் உள்ள இருளை அகற்ற தீப ஒளி ஏற்றி தீபாவளியைக் கொண்டாடுவது வழக்கம் . அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நடக்கும் ௧௮ லட்ச தீப உற்சவத்தினை பிரதமர் மோடி இன்று துவக்கிவைக்க உள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி அயோத்தியில் 18 லட்சம் தீபங்களின் தீப உற்சவ நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இன்று செல்கிறார். இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தலானது நடக்க உள்ளது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு திட்டங்களை சில நாட்களுக்கு முன்பாக துவக்கிவைத்தார். அதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று பல்வேறு திட்டங்களை துவக்கிவைத்தார்.அதன் பின்னர் பத்ரிநாத், கேதாரிநாத், உள்ளிட்ட புனிதஸ்தலங்களுக்கு சென்று அங்கு பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார். ஆதிசங்கராச்சாரியாரின் நினைவிடத்தினை கேதார்நாத்தில் மோடி நேரடியாக பார்வையிட்டார்.

இன்று உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள அயோத்திக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு இன்றுமாலை 5 மணிக்கு நடக்க உள்ள ஸ்ரீராம்லாலா விராஜ்மானுக்கு நடக்கும் பூஜையில் பிரதமர் பங்கேற்கிறார். மேலும் ஸ்ரீராமஜென்மபூமியில் உள்ள தீர்த்த ஷேத்திரத்தையும் பிரதமர் நரேந்திரமோடி ஆய்வு செய்கிறார்.

மேலும் இன்று மாலை 5.45மணிக்குஅயோத்தியில் நடக்க உள்ள ஸ்ரீராமருக்கு ராஜ்யாபிஷேகத்தினை பிரதமர் மோடி மேற்கொள்கிறார். பின்னர் மாலை 6.30மணிக்கு சரயுநதியின் புதிய படித்துறையில் நடக்கும் பிரமாண்ட ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்று அதனை பார்வையிடும் பிரதமர் நரேந்திரமோடி அத்துடன் சரயு நதிக்கரையில் நடக்க உள்ள தீபஉற்சவ கொண்டாட்டத்தையும் துவக்கி வைக்கிறார்.

pm modi visit to ayodhi today for 18 lakhs deepa ursavam

6ஆண்டுகள்தீபஉற்சவம்

கடந்த 6ஆண்டுகளாகவே அயோத்தியில் தொடர்ந்து தீப உற்சவமானது நடந்து வருகிறது. இந்த ஆண்டு உற்சவத்தினை பிரதமர் நரேந்திரமோடியே நேரடியாக கலந்துகொண்டு துவக்கி உள்ளது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் 18 லட்சம் தீபங்கள் ஏற்றப்படுகிறது.

மேலும் இன்று மாலை நடக்கும் தீப உற்சவத்தின்போது பல்வேறு மாநிலத்தினைச் சேர்ந்த நடன வடிவிலான 11 ராம்லீலா மற்றும் 5 அனிமேஷன் வடிவிலான அலங்கார வாகனங்கள் இடம் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று மாலை சரயு நதிக்கரைகளில் பிரமாண்ட இசை லேசர் காட்சிகளுடன் முப்பரிமாண ஹோலோ கிராபிக்ஸ் காட்சிகளையும் பிரதமர் நரேந்திரமோடி பார்வையிடஉள்ளார். பிரதமர் மோடி மேற்கண்ட நிகழ்ச்சிகளில் நேரடியாக கலந்துகொள்ள வருகை புரிவதால் உத்தரபிரதேச மாநிலம் மற்றும் அயோத்தி பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Updated On: 23 Oct 2022 7:46 AM GMT

Related News