/* */

ஆம்புலன்சிலேயே பொதுத்தேர்வை எழுதிய மாணவியின் பரிதாபம்

Mumbai girl writes her Class 10 board exam in ambulance - விபத்தில் காயமடைந்த மாணவி ஒருவர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆம்புலன்சில் எழுதியது வைரலாகியுள்ளது.

HIGHLIGHTS

ஆம்புலன்சிலேயே பொதுத்தேர்வை எழுதிய மாணவியின் பரிதாபம்
X

ஆம்புலன்சில் தேர்வெழுதிய மாணவி.

Mumbai girl writes her Class 10 board exam in ambulance - விபத்தில் காயமடைந்த மாணவி ஒருவர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆம்புலன்சில் எழுதியது வைரலாகியுள்ளது.


மும்பை பாந்த்ராவில் உள்ள அஞ்சுமன்-ஐ-இஸ்லாமின் டாக்டர் எம்ஐஜே பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருபவர் மாணவி முபாஷ்ஷிரா. இவருக்கு தற்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது தேர்வு மையமான பாந்த்ராவில் உள்ள செயின்ட் ஸ்டானிஸ்லாஸ் உயர்நிலைப் பள்ளியில் தனது அறிவியல் தாள் 2 (உயிரியல்) எழுதி முடித்துவிட்டு, மதியம் 1.20 மணி அளவில் அவரது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையைக் கடக்க முன்ற முபாஷ்ஷிரா, அதிவேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது பாய்ந்தது. இதில் காரின் சக்கரங்கள் அவரது இடது காலின் மீது ஏறியது.

girl writes 10 board exam in ambulance in india

இதனால் பலத்த காயமடைந்த முபாஷ்ஷிராவை டிரைவர் மற்றும் மாணவிகள் சேர்ந்து, அருகிலுள்ள ஹோலி பேமிலி மருத்துவமனைக்கு கொண்டு சென்னர். பின்னர் அங்கு அவருக்கு அதே நாளில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர்கள் அவருக்கு இரண்டு வாரங்கள் முழு படுக்கை ஓய்வு அளித்து ஞாயிற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்தனர். ஓட்டுநர் மீது குடும்பத்தினர் எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை.

தற்போது வீட்டில் ஓய்வில் உள்ள அந்த மாணவி, தற்போது ஆம்புலன்சில் தன்னுடைய 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளார். அவருடன் தேர்வு எழுத ஒரு உதவியாளர் அனுமதிக்கப்பட்டார். நேற்று சுமார் 10.15 மணிக்கு தேர்வு மையத்திற்கு ஆம்புலன் மூலம் வந்த மாணவி முபாஷ்ஷிரா, 11 மணியளவில் தேர்வு எழுத ஆரம்பித்தார். செயின்ட் ஸ்டானிஸ்லாஸ் முதல்வர், சகோதரி ஆரோக்கியம்மாள் அந்தோணி, ஆம்புலன்சுக்குள் இருவரையும் கண்காணிக்க ஒப்புக்கொண்டார். ஒரு காவலரும் ஒரு பியூனும் வெளியே காவலுக்குக் காத்திருந்தனர்.

Girl takes her SSC exam lying in ambulance in Mumbai

மேலும் அவரது கடைசி இரண்டு தாள்களுக்கு மார்ச் 23ம் தேதி சமூக அறிவியல் முதல் தாளும் மற்றும் மார்ச் 25ம் தேதி சமூக அறிவியல் இரண்டாம் தாளும் இதேபோல் ஆம்புலன்சிலேயே எழுதுவார் என கூறப்படுகிறது.

Updated On: 21 March 2023 7:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி