/* */

எஸ்.எஸ்.சி தேர்வை தமிழில் எழுத அனுமதி

எஸ்.எஸ்.சி தேர்வை தமிழில் எழுத மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது.

HIGHLIGHTS

எஸ்.எஸ்.சி தேர்வை தமிழில் எழுத அனுமதி
X

பைல் படம்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் காலியாக உள்ள 11,409 காலி பணியிடங்களுக்கான தேர்வை தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுத மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உட்பட 13 மாநில மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. தகுதி உள்ளவர்கள் பிப்.17-ம் தேதிக்குள் https://ssc.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 Jan 2023 4:15 PM GMT

Related News