/* */

வயதானவர்கள் .மாற்றுதிறனாளிகள் திருமலைக்கு வரவேண்டாம் தேவஸ்தானம் வேண்டுகோள்

திருமலையில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கூட்டம், மற்றும் தொடர்விடுமுறை நாட்கள் வருவதால் வயதானவர்கள், மாற்றுதிறனாளிகள், கைக்குழந்தை பெற்றோர்கள் திருமலை யாத்திரையை தள்ளி வைக்க தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

HIGHLIGHTS

வயதானவர்கள் .மாற்றுதிறனாளிகள்  திருமலைக்கு வரவேண்டாம்  தேவஸ்தானம் வேண்டுகோள்
X

திருமலை வெங்கடாஜலபதி  கோயிலின் தோற்றம்.

திருமலை:

திருமலையில்தற்போது பக்தர்கள்கூட்டம் அதிகரித்திருப்பதால் வயதானவர்கள், மாற்றுதிறனாளிகள்,கைக்குழந்தைகள் வைத்துள்ளபெற்றோர்கள்திருமலைக்குவரும்பயணத்தைஒத்திவைக்கும்படிதேவஸ்தானம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

திருப்பதி என்றாலே கூட்டந்தான். அந்த அளவிற்கு இந்தியாவிலுள்ள மொத்தமாநிலங்களில் தமிழகத்தில் இருந்துதான் ஆண்டுதோறும் அதிக அளவிலான பக்தர்கள் சென்றுவருகின்றனர். திருமலையின் வருமானத்தில் தமிழர்களின் பங்கு அதிகம் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு ஆண்டின் 12 மாதங்களிலும் தமிழகத்திலிருந்துதான் பக்தர்கள் அதிகம் பேர் சென்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் திருமலையில் பக்தர்கள் கூட்டம் இல்லாததால் இலவச தரிசனத்தில் சென்றாலே இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் வெங்கடேச பெருமாளை தரிசித்துவிடலாம் என செய்தி வெளியானது. ஆனால் அதற்குள் தற்போது திருமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துகொண்டே செல்வதால் தேவஸ்தானம் வயதானவர்கள் வந்து சிரமப்படவேண்டாம் என்ற நோக்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாளை முதல் இம்மாதம் 15ந்தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் திருமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் யார் வந்தாலும் தரிசனம், மற்றும் தங்குமிடத்தினை முன் கூட்டியே பதிவு செய்து திருமலைக்கு வருமாறு பக்தர்களை கேட்டுக்கொண்டுள்ளது. வார இறுதி விடுமுறை நாட்களில் வரும் கூட்டம், மற்றும் திருவிழா கூட்டமும் 19 ந்தேதி வரை நீடிக்கும் என்பதால் வயதானவர்கள் கைக்குழந்தையோடு வருபவர்கள் ஆகியோர் யாத்திரையை தள்ளி வைக்கவேண்டும் என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடக்கும்என்பதால் செப்டம்பர் 18 துவங்கி அக்டோபர் 17 ந்தேதி வரை புரட்டாசி மாதம் உள்ளதால் திருமலைக்கு புனிதமாதமான புரட்டாசியில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே சீனியர் சிட்டிசன்கள், கைக்குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆகியோர் தற்போது திருமலை யாத்திரை மேற்கொள்ள வேண்டாம் என தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்கள் தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு அறைகளிலும் தரிசனை வரிசைகளிலும் பொறுமையுடன் காத்திருக்குமாறு தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 12 Aug 2022 8:17 AM GMT

Related News