/* */

ஆச்சர்யம்.... அதிசயம்.....சாதனை உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரே மரத்தில் 300 வகை மாம்பழம்

All Varieties of Mango - உத்தர பிரதேச மாநிலத்தில்ஒரே மரத்தில் 300 மாம்பழ வகைகளை விளைவித்துசாதனை படைத்துள்ளார். ஒரு மரத்தில் ஒரே வகையான மாங்காய்கள்தான் காய்க்கும்.ஆனால் இவர் ஒட்டு முறையில் (கிராப்டிங்) செடிகளை ஒன்றிணைத்து இவ்வாறு செய்துள்ளார்.

HIGHLIGHTS

ஆச்சர்யம்.... அதிசயம்.....சாதனை  உத்தர பிரதேச மாநிலத்தில்  ஒரே மரத்தில் 300 வகை மாம்பழம்
X

All Varieties of Mango - மாங்காய் என்றவுடன் நாக்கில் நமக்கு எச்சில் ஊறும். அந்த வகையில் இந்திய மாம்பழங்களில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு டேஸ்ட் உண்டு. தமிழகத்தில் மாம்பழத்திற்கு பெயர் போனது சேலம்.சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம் என்று கூட சொல்வார்கள்

அந்த வகையில் சீசன் நேரத்தில் சேலத்தில் மாங்காய் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்து குவியும். இதற்காக மொத்த வியாபாரிகள் குடோனில் பழுக்க வைத்து சிறுவியாபாரிகளுக்கு சப்ளை செய்வார்கள்.கொரோனா காலத்தில் கடைகள் திறக்கப்படாததால் ஆன்லைன் விற்பனை கொடிகட்டிபறந்தது . தற்போதும் ஒவ்வொரு சீசனில் ஆன்லைன் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

மாங்காய் மரத்தில் குறைந்த பட்சம் காய்கள் அதிகமாக இருக்கும். ஆனால் அனைத்தும் ஒரே வகையினதாகவே இருக்கும். ஆனால் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒருவர் தன் ஒரே மரத்தில் 3௦௦ வகையான மாம்பழங்களை விளைவித்து சாதனை படைத்துள்ளார்.

ஒரு மாங்காய் மரத்தைக் கண்டாலே, அம்மரத்தின் மாம்பழங்களை சாப்பிட வேண்டும் எனத் தோன்றும். ஆனால், ஒரே மாமரத்தில் 300 வகையான மாம்பழங்கள் இருந்தால் எப்படி இருக்கும்.300 வகையான மாம்பழம் ஒரே மரத்தில் எப்படி வளரும் என கேட்கிறீர்களா? இது எப்படி சாத்தியமாகும்? ஆனால் சாதித்து காட்டியுள்ளார் இந்தியாவின் மாம்பழத் தந்தை என அழைக்கப்படும் கலீம் உல்லாஹ் கான் என்பவர்.

இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, இளம் வயதிலேயே ஒட்டு கட்டும் முறையை (grafting) சோதனை செய்துள்ளார். புதிய மாம்பழ வகைகளைக் கண்டுபிடிப்பதில் பெரும் ஆர்வம் காட்டி ஏழு வகையான கனிகளை ஒரே மரத்தில் பராமரித்து வளர்த்துள்ளார். ஆனால், புயலின்போது அம்மரம் அடித்துச் சென்றது.பின்னர் தொடர்ந்து முயற்சி செய்து அதில் தற்போது வெற்றியும் கண்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாலிகாபாத்தில் பழத்தோட்டம் வைத்திருக்கும் 82 வயதான கலீம் உல்லாஹ் கான் கடந்த ஐந்து வருடங்களில் சுமார் 300 வகையான மாம்பழங்களைக் காய்க்க வைத்துள்ளார்.தோட்டக்கலையில் ஒட்டு கட்டும் முறை மிகவும் பிரபலம். அதாவது வளரும் தாவரத்தின் கிளையில் லேசாக அறுத்து வேறொரு தாவரத்தின் கிளையின் ஒரு பகுதியை இணைத்து கட்டிவிடுவார்கள். அந்தக் கிளை கெட்டியாகத் தாவரத்திலோ, மரத்திலோ பிடித்துக்கொண்ட பின் அதன் கட்டை அவிழ்த்து விடுவர். இப்படி செய்வதால் ஒரே மரத்தில் இரண்டு அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட வகை தாவரங்களைக்கூட வளர்த்து பயன் பெறலாம்.

1986-ம் ஆண்டிலிருந்து 300 வகையான மாம்பழ வகைகளை ஒரே மரத்தில் ஒட்டு கட்டும் முறையை பயன்படுத்தி வளர்த்துள்ளார். அதோடு இம்மரத்தில் விளைவிக்கப்படும் மாம்பழ வகைகளுக்கு ஐஸ்வர்யா, சச்சின் டெண்டுல்கர் என பிரபலங்களின் பெயரை வைத்துள்ளார். இந்த மரத்துக்கு தற்போது 120 வயது... ஒரு மாம்பழமே ஒரு கிலோவுக்கும் அதிகமான எடை இருக்கும்.

இதுகுறித்து கலீம் உல்லாஹ் கான் தெரிவிக்கையில், ``வெறும் கண்களால் நீங்கள் பார்த்தால் இது வெறும் மரம். ஆனால், உள்ளத்தால் இதைப் பார்த்தால் இது ஒரு பழத்தோட்டம். உலகின் மிகப் பெரிய மாம்பழக் கல்லூரி.இந்த இடத்திற்கு பொது மக்கள் அவ்வப்போது வந்து போவார்கள்; ஆனால் மாம்பழங்கள் என்றும் நிலையாக இருக்கும்.

பல வருடங்கள் கழித்து சச்சின் மாம்பழத்தைபொது மக்கள் உண்ணும்போது கிரிக்கெட் ஹீரோவை நினைவு கொள்வார்கள். இரண்டு கைரேகைகள் ஒன்று போல் இருப்பது இல்லை, அதுபோலதான் மாம்பழங்களும்... மனிதர்களைப் போன்ற குணங்களைக் கொண்ட மாம்பழங்களை இயற்கை நமக்கு பரிசாகக் கொடுத்துள்ளது" என தெரிவித்துள்ளார். இயற்கை கொடுத்த கொடை மரங்கள் என்றார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 26 July 2022 8:54 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்