/* */

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையே கிடையாது- அமித்ஷா திட்டவட்டம்

Kashmir issue,No talks with Pakistan, Amit Shah sureபாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையே கிடையாது என அமித்ஷா திட்டவட்டமாக கூறி உள்ளார்.

HIGHLIGHTS

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையே கிடையாது- அமித்ஷா திட்டவட்டம்
X

மத்திய மந்திரி அமித்ஷா.

Kashmir issue,No talks with Pakistan, Amit Shah sureகாஷ்மீர் இந்தியாவின் சொர்க்க பூமி. உலக சுற்றுலா பிரியர்களின் பிரமிப்புக்குரிய ஒரு நகரம். இத்தகைய சிறப்புக்குரிய காஷ்மீர் இந்தியாவின் தீவிரவாத பகுதியாக மாறியது எப்படி என்பதை விளக்க நீண்ட நேரம் ஆகும். வீரமிக்க ராஜ்புத் ராஜாக்களின் ஆளுகையின் கீழ் இருந்த காஷ்மீர் முகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களுடைய பூமியாக மாறியது. இதன் விளைவு இதிகாச காலத்தில் இருந்து ஆண்டு வந்த ராஜ்புத் மன்னர்கள் அவர்களுக்கு அடிமையானார்கள்.


Kashmir issue,No talks with Pakistan, Amit Shah sureஇந்து ராஜ்ஜியங்கள் முகலாயர் வசம் மாறியது. காஷ்மீரின் பூர்வீக குடிகளான பண்டிட்கள் அங்கு வாழ முடியாமல் டெல்லி உள்ளிட்ட இதர மாநிலங்களுக்கு குடி பெயர்ந்தார்கள். ஒரு சிலர் முகலாயர்களுடன் சமாதானம் செய்து கொண்டு மதம் மாறி இஸ்லாமிய மார்க்கத்திற்கு சென்றார்கள். இதுதான் காஷ்மீரின் கடந்த கால வரலாறு. நாடு சுதந்திரம் அடைந்த போது காஷ்மீரத்து சிங்கம் என அழைக்கப்பட்ட ஷேக் அப்துல்லா இந்தியாவுடன் தான் இருப்போம், பாகிஸ்தானுடன் செல்ல மாட்டோம் என உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்ததால் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இந்த ஒரே காரணத்திற்காக காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்துகள் வழங்கப்பட்டன. இந்த சிறப்பு அந்தஸ்தை பயன்படுத்தி கொண்டு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதத்தை வளர்த்தது. இந்தியா காஷ்மீர் மக்களை அடிமையாக வைத்திருப்பது போல் ஒரு மாயத் தோற்றத்தை நமது அண்டை நாடான பாகிஸ்தான் உருவாக்கியது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள் நேரடியாகவே காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு, பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு கொடுத்து வளர்த்து விட்டார்கள். இதன் காரணமாக காஷ்மீரில் அவ்வப்போது குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின. நமது நாட்டின் மதிப்புமிக்க ராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.கார்கில் யுத்தத்திற்கு பின்னர் பாகிஸ்தானின் கொட்டம் கொஞ்சம் அடங்கினாலும் இன்னும் முழுமையாக அடக்கப்படவில்லை.

Kashmir issue,No talks with Pakistan, Amit Shah sureமத்தியில் ஆண்டு 2014 ஆம் ஆண்டு மோடி தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்த பிறகு காஷ்மீரில் உள்ள தீவிரவாத குழுக்களை இரும்பு கரம் கொண்டு அடக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன அதன் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. ஒட்டுமொத்த காஷ்மீர் மாநிலமும் மூன்றாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. விரைவில் காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. ஆனாலும் காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இன்று வரை பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு அரசியல் படுகொலைகளை அரங்கேற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.மத்திய அரசின் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.


Kashmir issue,No talks with Pakistan, Amit Shah sureஇத்தனை நெருக்கடிகளுக்கு இடையிலேயும் மூன்று நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் சென்றார். காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா இங்குள்ள அரசியல் தலைவர்கள் சிலர் பாகிஸ்தானுடன் பேச வேண்டும் என வேண்டுகோள் விடுகிறார்கள். நாங்கள் ஏன் பாகிஸ்தானுடன் பேச வேண்டும்? காஷ்மீர் மக்களுடனும், பாரமுல்லா மக்களிடமும் நாங்கள் பேசத் தயாராக இருக்கிறோம். ஆனால் பாகிஸ்தான் அரங்கேற்றும் பயங்கரவாதத்தை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நரேந்திர மோடி அரசு காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழித்து அதனை மீண்டும் இந்தியாவின் சொர்க்க பூமியாக மாற்றி பார்க்க விரும்புகிறது. அது நிச்சயம் நிறைவேறும்.

Kashmir issue,No talks with Pakistan, Amit Shah sureஅத்துடன் ஜம்மு காஷ்மீரை நாட்டிலேயே மிகவும் அமைதியான இடமாக மாற்றுவதற்கும் நாங்கள் விரும்புகிறோம் என்றார்.இந்த கூட்டத்தில் பருக் அப்துல்லா, உமர் அப்துல்லா ,மெகபூபா, முக்தி முகமது மற்றும் காங்கிரஸ் கட்சிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக விமர்சித்தார் அவர்களின் ஆட்சி காலத்தில் தான் ஊழல் பெருக்கெடுத்து தீவிரவாதத்திற்கு வழி வகுத்தது என்றும் சாடினார். மேலும் பா.ஜ.க. அரசு காஷ்மீர் மக்களின் அமைதியையும் வளர்ச்சியையும் மட்டுமே பிரதானமாக கொண்டு செயல்படுகிறது என்றும் கூறினார்.

Updated On: 6 Oct 2022 4:31 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?