தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. சோதனையில் சிக்கிய ஆவணங்கள்- அதிர்ச்சி தகவல்கள்

தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிக்கிய ஆவணங்கள் அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. சோதனையில் சிக்கிய ஆவணங்கள்- அதிர்ச்சி தகவல்கள்
X

தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அமைப்பு நமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான ஏஜென்சியாக செயல்பட்டு வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்களது கழுகு கண் பார்வையால் ஊடுருவி இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர்களையும், அண்டை நாடுகளுடன் குறிப்பாக பாகிஸ்தான் போன்ற ஜென்ம விரோத நாடுகளுடன் தொடர்பில் இருப்பவர்களையும் கண்காணித்து அவர்களது கொட்டத்தை அடக்குவதும் இந்த அமைப்பின் முக்கியமான பணியாகும்.

சட்ட விரோத பணப்பரிமாற்றம், அலைக்கற்றைகளை திருடி அனுப்புதல், தொழில்நுட்பங்களை நாட்டிற்கு எதிராக பயன்படுத்துதல், தீவிரவாதத்திற்கு ஆதரவாக செயல்படுதல், மாற்று மத தலைவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துல் போன்றவற்றை கண்காணித்து தடுத்து நிறுத்தி சதி திட்டம் தீட்டிய சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுப்பது தேசிய புலனாய்வு முகமையின் முக்கிய செயல்பாடுகள் ஆகும்.

அந்த வகையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா எனப்படும் பி.எப்.ஐ .அமைப்பின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ..ஏ அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தலைவர் ஓ.எம்.ஏ. சலாம் வீடு உட்பட பி.எப்.ஐ-இன் மாநில, மாவட்ட அளவிலான தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை( என்ஐஏ ) மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

கேரளாவின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் பி.எப்.ஐ. அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பி.எப்.ஐ. மாநில தலைமை அலுவலகத்திலும் என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்படுகிறது. மதுரையில் மட்டும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு சொந்தமான நெல் பேட்டை, கோரிப்பாளையம், கோமதிபுரம்,குலமங்கலம் வில்லாபுரம் உள்ளிட்ட ஏழு இடங்களில் அதிகாலை முதல் சோதனை நடைபெற்றது.மதுரை மாவட்ட செயலாளர் யாசர் அராபாத் என்பவரிடம் விசாரணை நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது.கடலூரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவர் பியாஸ் அகமதுவிடம் விசாரணை நடைபெற்றது.

தேனியில் என்.ஐ.ஏ., அலுவலகம் இல்லாவிட்டாலும், அதன் கண்காணிப்பு முழுவதும் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. தமிழகத்தில் இந்த மத அமைப்பின் தலைவர்கள், நிர்வாகிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சிலர் தேனி மாவட்டத்திற்குள் அடைக்கலம் புகுந்தனர். இவர்களை தேனி மாவட்டத்திற்கு வந்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.

தேனியில் தனியாக ஒரு டெலிகாம் எக்சேஞ்ச் நடத்தி, பி.எஸ்.என்.எல்., அலைக்கற்றைகளை திருடி வெளிநாடுகளுக்கு அனுப்பிய வழக்கில் தேனியில் ஏற்கனவே நான்கு பேர் கைதாகினர். இவர்களின் விசாரணையில் கொச்சி, திருவனந்தபுரம், எர்ணாகுளம் என கேரளாவை சேர்ந்த பலர் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.தவிர தேனி மாவட்டத்தை சேர்ந்த சிலர் தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகளாக தொடர்ந்து செயல்பட்டு வந்தனர். இவர்களில் பலரையும் என்.ஐ.ஏ. கையில் எடுத்து விசாரித்து வருகிறது. தவிர ஆந்திரா, தெலுங்கானா, கேரளா போன்ற இடங்களில் என்.ஐ.ஏ., நடத்தி வரும் விசாரணையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ.,விற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இது போன்ற பல காரணங்களால் தேனி மாவட்டத்தை என்.ஐ.ஏ., தனது கண்காணிப்பு பட்டியலில் வைத்துள்ளது. மற்றபடி தேனி மாவட்டத்தில் மத மோதல்கள் இல்லாவிட்டாலும், அதற்கான அச்சுறுத்தல் இருந்து வருகிறது. முஸ்லிம் அமைப்புகளும், இந்து அமைப்புகளும் கம்பத்தில் ஒருவர் மீது ஒருவர் பகிரங்கமாக புகார் எழுப்பி வருகின்றனர். சில நேரங்களில் ஒரு தரப்பினர் மற்ற தரப்பினர் மீது தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன. தொடர்ந்து நாங்கள் கண்காணிக்க இதுவும் ஒரு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை ஊக்குவித்தல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள நபர்களின் குடியிருப்பு மற்றும் அலுவலக வளாகங்களில் தேசிய புலனாய்வு முகமையின் இந்த சோதனை நடத்தப்படுகிறது. பி.எப்.ஐ அலுவலகங்களில் நள்ளிரவு முதல் நாடு முழுவதும் விடிய விடிய சோதனை நடைபெறுகிறது.

இந்நிலையில், இதனை கண்டித்து பி.எப்.ஐ. கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருவதால் சோதனை நடைபெறும் இடங்களில் சி.ஆர்.பி.எப். மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா,கர்நாடகா என 10 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கையில், என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை மற்றும் மாநில காவல்துறை இணைந்துஇதுவரை 100க்கும் மேற்பட்ட பி.எப்.ஐ. உறுப்பினர்களை கைது செய்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

என்.ஐ. ஏ. அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்தும், மத்திய அரசு இஸ்லாமியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் எனக் கூறியும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரியும் திருச்சி- தஞ்சை சாலையில் காமராஜ் நகர் அருகே எஸ். டி. பி. ஐ. கட்சியினர் இன்று திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனால் தஞ்சை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் சாலை மறியலை கைவிட மறுத்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

இதற்கிடையில் டெல்லியில் இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் என்.ஐ.ஏ. இயக்குனர் ஆகியோருடன் திடீர் ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் நடைபெற்று வரும் என.ஐ‌.ஏ. அதிகாரிகள் சோதனையின் போது கைப்பற்றுள்ள ஆவணங்கள், முக்கிய தகவல்கள் அப்போது பகிர்ந்து கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் பற்றி அதிர்ச்சிகரமான தகவல்களை அப்போது தேசிய பாதுகாப்பு முகமை இயக்குனர் அமைச்சரிடம் தெரிவித்துள்ளார். எனவே கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளுக்கு இந்த கூட்டத்தில் அமித்ஷா உத்தரவிட்டு உள்ளார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Updated On: 2022-09-23T09:58:54+05:30

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  திருச்செந்துார் செந்தில் நாதன் முருக பெருமான் பற்றி அறிவோம்!
 2. கல்வி
  JKKN மருந்தியல் கல்லூரி மாணவன் மாநில அளவிலான மல்யுத்தப்போட்டியில்...
 3. தமிழ்நாடு
  புதிய சிக்கலில் மாட்டினார் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி.
 4. சினிமா
  'பொன்னியின் செல்வன்' படத்தை தாய்லாந்தில் பார்த்த வனிதா விஜயகுமார்..!
 5. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 6. சினிமா
  மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
 7. தென்காசி
  தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
 8. லைஃப்ஸ்டைல்
  மற்றவர் காலில் விழுவது அவமானமா? வெகுமானமா?
 9. சினிமா
  'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர்...
 10. நாமக்கல்
  2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள்...