/* */

புதிய நாடாளுமன்ற கட்டட செலவு அதிகரிப்பு

2020 டிசம்பரில் நடந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக பட்ஜெட் செலவான 977 கோடியை விட 29 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது

HIGHLIGHTS

புதிய நாடாளுமன்ற கட்டட செலவு அதிகரிப்பு
X

புதிய நாடாளுமன்ற கட்டடம், சென்ட்ரல் விஸ்டா 

புதிய நாடாளுமன்ற கட்டிடம், அரசாங்கத்தின் முதன்மையான சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு மேலும் ரூ.282 கோடி செலவாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2020 டிசம்பரில் நடந்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு ஒரு வருடத்திற்கும் மேலாக பட்ஜெட் செலவான ரூ.977 கோடியை விட 29 சதவீதம் உயர்ந்துள்ளது.. இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் டாடா ப்ராஜெக்ட்ஸ் மூலம் நாற்பது சதவீத வேலைகள் முடிக்கப்பட்டுள்ளன.

குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து ஒரு கி.மீ தூரத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ள நான்கு மாடிக் கட்டிடம், இந்த ஆண்டு நாட்டின் 75வது சுதந்திர தினத்திற்கு முன்னதாக கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர், அக்டோபரில் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக மற்ற திட்டங்களுக்கு நடைமுறையில் உள்ள தடை இந்த கட்டுமானத்திற்கு இல்லை. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானம் என்று உச்ச நீதிமன்றத்தில் அரசு தெரிவித்ததை அடுத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.

வரும்போது, தற்போதுள்ள பிரிட்டிஷ் காலகட்ட அமைப்பு நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் எம்.பி.க்களுக்கான அலுவலகங்கள் போன்றவற்றிக்கு இடம் போதாமையால், புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அவசியமானது.

1927 இல் திறக்கப்பட்ட கட்டிடம் -- இப்போது இடப்பற்றாக்குறை இருப்பதை பல எம்.பி.க்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இடப்பற்றாக்குறை உள்ளது. இந்த கட்டடடத்தில் பூகம்பத்தை தாங்கவோ அல்லது தீ விபத்து பாதுகாப்பு விதிமுறைகளோ இடம்பெறவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புதிய கட்டடத்தில் லோக்சபாவில் 888 உறுப்பினர்கள் அமரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, கூட்டு அமர்வின் போது 1,224 உறுப்பினர்கள் அமர முடியும். ராஜ்யசபாவில் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு 384 உறுப்பினர்கள் அமரும் வசதி இருக்கும்.

ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் 40 சமீ. அலுவலக இடம் ஒதுக்கப்படவுள்ளது. இது 2024 க்குள் கட்டி முடிக்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்கள் மற்றும் சிற்பிகளின் பங்களிப்புகளுடன் புதிய கட்டிடம் நாட்டின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை வெளிப்படுத்தும்.

Updated On: 21 Jan 2022 4:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது