புதுடில்லியில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்திய ராகுல் ,பிரியங்கா கைது

புதுடில்லியில் மத்திய அரசின் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக மத்திய அரசினை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தியதால் ராகுல் , பிரியங்கா உட்பட பலர் கைதுசெய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
புதுடில்லியில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்திய ராகுல் ,பிரியங்கா கைது
X

மத்திய அரசைக் கண்டித்து புதுடில்லியில் நடந்த போராட்டத்தில் கருப்பு சட்டடையுடன் ராகுல் காந்தி தலைமையில்   கோஷமிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள். 

புதுடில்லி,

மத்திய அரசின் விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர்.

புதுடில்லியில் ராகுல்காந்தி, சசிதரூர் எம்பி உட்பட காங்கிரசார் ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர். இவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர். அதேபோல் காங்கிரஸ் தலைமை ஆபீஸ் முன்பு நடந்த போராட்டத்திற்கு தலைமை வகித்த பிரியங்கா உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள்,தொண்டர்களையும் போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாவே லோக்சபாவின் மழைக்காலக் கூட்டத்தொடரில் நாடு முழுவதும் எதிரொலித்து வரும் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு இல்லாதது, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து அனைத்து எதிர்கக்ட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனால் பல எம்பிக்கள் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின் 4 எம்பிக்களுக்கு மீண்டும் சபாநாயகர் லோக்சபாவிற்கு வர அனுமதி அளித்தார். இருந்த போதிலும் கூட்டம் நடக்கும்போது நடந்த வாக்குவாதத்தால் கடந்த 3 வாரங்களாக இருசபைகளும் மாறி மாறி ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

144 தடை உத்தரவு

இம்மூன்று பிரச்னைகளைக் கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சியின் மேலிடம் அறிவித்ததையடுத்து சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி டில்லியில் திடீரென 144 தடை உத்தரவானது பிறப்பிக்கப்ட்டது. இருந்த போதிலும் இதனை மீறி பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

லோக் சபா வளாகத்தில் மத்திய அரசைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் காங்.தலைவர் சோனியாகாந்தி, ராகுல் உள்ளிட்ட எம்பிக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்து கலந்துகொண்டனர். மேலும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.

ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி

பின்னர் ராகுல்காந்தி தலைமையில் போராட்டத்தில் பங்கேற்ற எம்பிக்கள் அனைவரும் ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். இதில் எம்பி சசிதரூர் உட்பட பல எம்பிக்கள் பங்கேற்றனர். தடையை மீறி போராட்டம் நடத்தியதோடு பேரணியாக புறப்பட்டதால் ராகுல், சசிதரூர் உட்பட எம்பிக்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அதேபோல் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து பேரணியாக புறப்பட முயன்ற பிரியங்கா உட்பட காங்கிரசார் பலர் கைதுசெய்யப்பட்டனர்.

இதுகுறித்து ராகுல்காந்தி தெரிவிக்கும்போது,

மத்திய அரசின் விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளால் நாட்டிலுள்ள பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர். இதுகுறித்த பிரச்னையை எழுப்புவதற்காக ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற எம்பிக்கள் பலரை போலீசார் தடுத்து நிறுத்தியதோடு இதனை மீறியவர்கள் மீது தாக்குதலையும்நடத்தியுள்ளனர். பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு குரல் எழுப்புவதே எதிர்க்கட்சியான காங்கிரசின் முதல் வேலை ஆனால் எம்பிக்கள் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது என்றார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவிக்கும்போது , நாட்டில்விலைவாசி உயர்வு , அக்னிபத் உள்ளிட்ட பிரச்னைகளுக்கான போராட்டம்தான் இது. அவ்வப்போது ஏற்றப்படும் விலைவாசி உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்படைய செய்கிறது. பிரதான அரசியல் கட்சி மற்றும் மக்கள் பிரச்னைகளுக்காக எதிர்க்கட்சி யான நாங்கள் குரல் கொடுக்க கடமைப்பட்டுள்ளோம் அதற்கான போராட்டம்தான்இது என்றார்.

Updated On: 2022-08-06T08:41:10+05:30

Related News

Latest News

 1. சினிமா
  தேசிய விருதை கிண்டலடித்தாரா பார்த்திபன்...?
 2. குமாரபாளையம்
  பயிற்சி முடிந்து திரும்பிய குமாரபாளையம் என்.சி.சி. அலுவலருக்கு...
 3. குமாரபாளையம்
  மகன்களால் கைவிடப்பட்ட 81 வயது மூதாட்டி குமாரபாளையம் போலீசில் புகார்
 4. குமாரபாளையம்
  மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய், இரண்டாவது கணவர் போக்சோவில்...
 5. டாக்டர் சார்
  livogen Z tablet uses in tamil ரத்த சோகை நோய்க்கான லிவோஜன் Z...
 6. புதுக்கோட்டை
  விஸ்வரூபம் எடுத்துள்ள புதுக்கோட்டை நகரின் அரசு உயர் துவக்கப்பள்ளி...
 7. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் கொங்கு பவர் லூம்ஸ் உரிமையாளர்கள் சங்க பொன்விழா
 8. கோவை மாநகர்
  கோவையில், மாணவர் துாக்கிட்டு தற்கொலை
 9. ஆரணி
  திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
 10. கலசப்பாக்கம்
  திருவண்ணாமலை: மிருகண்டா அணையில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு