/* */

இந்தியாவின் ராஜதந்திரம்: சீனாவின் பாச்சா இலங்கையில் பலிக்கவில்லை

மோடி அரசு இலங்கையில் பெரிய பெரிய திட்டங்களை செய்ய தொடங்கிவிட்டது, சீனா எவ்வளவு முயன்றாலும் வெற்றி பெற முடியவில்லை.

HIGHLIGHTS

இந்தியாவின் ராஜதந்திரம்: சீனாவின் பாச்சா இலங்கையில் பலிக்கவில்லை
X

இலங்கையின் வடபகுதியை கட்டுப்படுத்த வேண்டும் என சீனாவுக்கு விருப்பம் எக்காலமும் உண்டு, காரணம் அங்கிருந்து தொட்டுவிடும் தொலைவில் இந்திய எல்லை வரும், அங்கும் இந்தியாவுக்கு தொல்லை கொடுக்கலாம் என்பது சீனாவின் திட்டம்.

வட இலங்கை மக்கள் இந்திய அபிமானம் கொண்ட பெருவாரி இந்துக்கள் என்பது இந்தியாவின் பலம், கலாச்சார ரீதியாக அவர்கள் இந்தியாவுடன் நெருங்குபவர்கள், காங்கிரஸ் செய்த குழப்பங்களால் இடையில் ஒரு இருள்காலம் நிலவினாலும் மோடி அதனை பக்குவமாக சரி செய்து வருகின்றார்.

அனுபவம் வாய்ந்த பார்த்தசாரதி போன்றோரையும், இன்னும் பலரையும் இலங்கை விவகாரத்துக்காக மோடி அனுப்பி வைத்ததால் விஷயம் இந்தியாவுக்கு இது சாதகமாயிற்று. இலங்கை ஹட்டனில் மருத்துவமனை வட இலங்கை யாழ்பாணத்தில் இந்திய தூதரகம், பலாலியில் இந்திய விமான நிலையம் என இந்திய கரங்கள் அங்கு வலுவாக வேரூன்றி உள்ளன.

நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு வேட்டியுடன் செல்லும் சீன தூதர், அடிக்கடி வேட்டி சட்டையிலே "வணக்க்க்ம்ம்ம்ம்"" என சுற்றி திரியும் சீன அதிகாரிகள் என வட இலங்கையில் சீனா செய்யும் முயற்சி எதுவும் எடுபடவில்லை.

வட இலங்கையின் சோலார் சிஸ்டம் அமைப்பும் இந்தியாவின் கைக்கு வந்த நிலையில் இப்பொழுது Indian Railway Construction International (IRCON) எனும் இந்திய ரயில்வே நிறுவனம் மாபெரும் முதலீட்டை செய்கின்றது. அது கொழும்பு யாழ்ப்பாண ரயில் நிலையம்

யாழ்ப்பாணம் மிக குறுகிய நிலபகுதியால் இலங்கையோடு இணையும் தீபகற்பம், அங்கு முன்பு ரயில் இருந்தது பின் இல்லாமல் போனது. தண்டவாளம் கூட இல்லை. இப்பொழுது இந்திய ரயில்வே மாபெரும் திட்டத்தை அறிவித்துள்ளது அவ்வகையில் கொழும்பு நகரத்தை இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுடன் இணைக்கும் பிராமாண்ட பாதை 8 ஆயிரம் கோடி செலவில் அமைக்கவுள்ளது.

இதனால் நூறு ஆண்டுக்கு பின் பெரும் ரயில்தடம் இலங்கையில் அமையவுள்ளது. யாழ்ப்பாண மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விரைவாக இது அமையும்பட்சத்தில் அந்நாட்டின் போக்குவரத்தும் பொருளாதாரமும் அதிகரிக்கும். யாழ்ப்பாணத்தில் இருந்து இந்திய பகுதி வெகு அருகாமை என்பதால் பிற்காலத்தில் இந்திய இலங்கை ரயில் போக்குவரத்தும் சாத்தியமாகும். சென்னை கொழும்பு ரயிலும் சாத்தியமாகும். "சிங்கள தீவுனுக்கோர் பாலம் அமைப்போம்" என அந்த தேசகவி பாடியதெல்லாம் இனி நடக்கும்.

இலங்கை மக்களை தமிழர் சிங்களவர் என்ற பேதமில்லாமல் அவர்கள் இலங்கை குடிமக்கள் எனும் வகையில் மிக பக்குவமாக கையாண்டு இலங்கை தேசத்துக்கு எது நல்லது என செய்து கொடுத்து அந்நாட்டை தன் நண்பனாக்கி உள்ளது இந்தியா.

Updated On: 14 Jan 2023 6:29 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...