Begin typing your search above and press return to search.
கணக்கு டீச்சரா நீங்க.... அப்போது இந்த செய்தி உங்களுக்குத் தான்
வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்து இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த கணித ஆசிரியர் விளம்பரம் குறித்த செய்தியை காணலாம்.
HIGHLIGHTS

சமூக வலைதளத்தில் வெளியான விளம்பரம்.
குஜராத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுடைய பள்ளிக்கு கணித ஆசிரியர் தேவை என விளம்பரம் செய்து இருந்தது. அனால் அந்த விளம்பரத்தை பள்ளி நிர்வாகம் எப்படி செய்து இருந்தார்கள் என்பது தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பள்ளியின் தொலைபேசி என்னை ஒரு கணிதமாக மாற்றி இந்த கணக்கிற்கு விடை கண்டுபிடித்து எங்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்து இருந்தார். தற்போது இந்த புதிய விளம்பரம் தான் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் அடித்து உள்ளது. கணக்கிற்கு விடை தெரிஞ்சு போன் பண்ணுன ஆசிரியர் யார் என்ற கேளிவியும் தற்போது வைரலாகி வருகிறது. நீங்களும் இந்த கணக்கை டிரை பண்ணி பாருங்க....