/* */

Latha Mangeshkar in Tamil: நடிகர் திலகத்தின் அன்புத் தங்கை இசைக்குயில் லதா மங்கேஷ்கர்

லதா மங்கேஷ்கர்-சிவாஜிக்கு இடையேயான இந்த உறவு மாநிலம், மொழியை கடந்து நட்புக்கு இலக்கணம் வகுத்துள்ளது

HIGHLIGHTS

Latha Mangeshkar in Tamil: நடிகர் திலகத்தின் அன்புத் தங்கை இசைக்குயில் லதா மங்கேஷ்கர்
X

இசைக்குயில் லதா மங்கேஷ்கர்

லதா மங்கேஷ்கர், இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பின்னணி பாடகியாவார். மேலும் இந்தியாவில் பாலிவுட் பின்னணிப் பாடகியாகப் புகழ் பெற்று விளங்கும் ஆஷா போன்ஸ்லே லதாவின் சகோதரி ஆவார். சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ள அவர், இந்திய ரசிகர்களால் “இசைக் குயில்” எனவும் போற்றப்படுகிறார்.

இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா விருது”, “பத்ம பூஷன் விருது”, “பத்ம விபூஷன்” விருதுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், தேசிய விருது, தாதாசாகேப் பால்கே விருது, நான்கு முறைக்கு மேல் ஃபிலிம்பேர் விருதுகள் என மேலும் பல விருதுகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

தன்னுடைய நான்கு வயதிலேயே படத்தொடங்கி, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இந்திய திரையுலகில், மிகச்சிறந்த பின்னணிப் பாடகியாக புகழ் பெற்று விளங்கிய லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை காண்போம்.

இந்தியாவின் ‘இசைக் குயில்’ என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர், 1929 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் நாள் இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள “இந்தூர்” என்ற இடத்தில் பண்டிட் தீனநாத் மங்கேஷ்கருக்கும், செவந்திக்கும் மகளாக ஒரு “கோமன்டக் மராட்டிய” குடும்பத்தில் பிறந்தார்.

லதா மங்கேஷ்கரின் தந்தை ஒரு கிளாசிக்கல் பாடகர் மற்றம் நாடக கலைஞராகவும் இருந்தார். இதனால் தன்னுடைய ஐந்து வயதிலேயே தந்தையிடம் இசைப் பயிலத் தொடங்கினார். பிறகு, புகழ் பெற்ற அமான் அலி கான் சாகிப் மற்றும் அமநாத் கான் ஆகியோரின் கீழ் இசைப்பயிற்சி மேற்கொண்டார்.

1942 ஆம் ஆண்டு சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், முதன் முதலாக “கிதி ஹசால்” என்ற மராத்தி பாடலைப் பாடினார். அதே ஆண்டில் அவருடைய தந்தையும் இறந்து விடவே, குடும்பம் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளானது. அந்த நேரத்தில் இசையமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர் “மஜ்பூர்” என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு அளித்தார். இது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம். இதனை தொடர்ந்து வந்த ‘மகால்’, ‘அந்தாஸ்’, ‘பர்சாத்’, ‘துலாரி’ போன்ற படங்கள் இவருக்கு பெரும் புகழை ஈட்டிக்கொடுத்தது.


1942 முதல் சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷன், நவ்ஷத், எஸ்.டி. பர்மன், சி. ராம்சந்த்ரா, ஹேமந்த் குமார், சலீம் சவ்திரி, கய்யாம், ரவி, சஜ்ஜத் ஹூசைன், ரோஷன், கல்யாண்ஜி, ஆனந்த்ஜி, வசந்த் தேசாய், சுதிர் பாட்கே, ஹன்ஸ்ராஜ் பெல், மதன் மோகன், மற்றும் உஷா கன்னா, ராகுல் தேவ் பர்மன், ராஜேஷ் ரோஷன், அனு மாலிக், ஆனந்த் மிலிந்த், ஷிவ் ஹரி, ராம் லட்சுமண், ஏ.ஆர் ரகுமான், இளையராஜா என கிட்டத்தட்ட எல்லா இசையமைப்பளர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.

1955ம் ஆண்டு திலீப் குமாரின் ஊரன் கத்தோலா தமிழில் வானரதம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஹிந்தி பதிப்பில், ஒன்பது பாடல்களையும் லதா மங்கேஷ்கர் மற்றும் முகமது ரஃபி ஆகியோர் பாடியுள்ளனர். தமிழ் ரீமேக்கில், கம்பதாசன் எழுதிய எந்தன் கண்ணாளன் பாடலை லதா மங்கேஷ்கர் பாடினார். வானரதம் படத்திற்கு நௌஷாத் இசையமைத்துள்ளார். 1955க்குப் பிறகு, லதா மங்கேஷ்கர் இந்தி, மராத்தி மற்றும் பிற மொழிகளில் கவனம் செலுத்தினார்.

புகழ்பெற்ற சூப்பர் ஸ்டார் சிவாஜி கணேசனை லதா மங்கேஷ்கர் தனது சகோதரராகக் கருதினார் என்பது உங்களுக்குத் தெரியுமா? லதா மங்கேஷ்கர் மற்றும் சிவாஜி கணேசனின் நட்பு நீண்ட தூரம் செல்கிறது. 1960-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பை பார்த்து வியந்த லதா மங்கேஷ்கர், தனது சகோதரிகளுடன் சென்னை வந்து அன்னை இல்லத்திற்கு சென்றுள்ளார். அப்போதுதான் முதல்முறையாக சிவாஜியை நேரில் பார்த்து பேசி நட்பு பாராட்டி இருக்கிறார். முதல் சந்திப்பிலேயே இருவரும் அன்பை பொழிந்து பேசி இருக்கிறார்கள்.


அப்போது லதா மங்கேஷ்கர், சிவாஜியிடம் ‘‘என்னை உங்கள் தங்கையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று கூறி இருக்கிறார். அதனை சிவாஜியும் ஏற்றுக்கொண்டு அன்புத்தங்கையாகவே அவரை உபசரித்து இருக்கிறார். லதா சென்னைக்கு வரும்போதெல்லாம் பங்களாவில்தான் தங்குவார்

லதா மங்கேஷ்கரை விட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு வயது மூத்தவர். இருவரும் சம காலத்து கலைஞர்கள் என்பதால், சிவாஜி கணேசன், லதா மங்கேஷ்கர் இடையே நல்ல நட்புறவு இருந்துள்ளது.

இந்த அண்ணன்-தங்கை பாசம் சிவாஜி மரணம் அடையும் வரையில் தொடர்ந்துள்ளது. சிவாஜியின் மரணத்திற்கு பிறகும் அவரது அன்னை இல்ல குடும்பத்தினரோடு லதா மங்கேஷ்கர் தொடர்பிலேயே இருந்துள்ளார்.


லதா மங்கேஷ்கரை மீண்டும் தமிழ் திரையுலகிற்கு அழைத்து வந்தவர் இளையராஜா. 1987 இல், பிரபு மற்றும் ராதா நடித்த ஆனந்த் படத்திற்காக இளையராஜா லதாவை நடிக்க வைத்தார். அதில் ஆராரோ ஆராரோ பாடலைப் பாடினார். இது இவரது முதல் நேரடி தமிழ்ப் பாடல்.

1988ல், இளையராஜா கமல்ஹாசன் மற்றும் அமலா நடிப்பில் வெளியான சத்யாவில் இருந்து எப்போதும் பசுமையான வளையோசை என்ற பாடலை லதா மங்கேஷ்கரை பாட வைத்தார். மூன்று தசாப்தங்களுக்குப் பிறகும், இந்த பாடல் அனைவரின் பிளேலிஸ்ட்டில் பிடித்த பாடல்களில் ஒன்றாக உள்ளது.

அதே வருடம், கார்த்திக் நடித்த என் ஜீவன் பாடுது படத்தில் எங்கிருந்தோ அழைக்கும் என் என் ஜீவன் என்ற பாடலை பாடினார் . இதுவே தமிழில் இவரது கடைசிப் பாடல்.

தேசிய விருது

1958 ஆம் ஆண்டு சலீம் சவுத்ரி இசையமைத்து வெளிவந்த “மதுமதி” என்ற திரைப்படத்தில், இவர் பாடிய “ஆஜா ரெ பரதேசி” என்ற பாடல், இவருக்கு முதல் ஃபிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது. பிறகு, 1961 ல் ஹேமந்த் குமார் இசையமைத்த “பீஸ் சால் பாத்” திரைப்படத்தில் “கஹின் தீப் ஜலே கஹின் தில்” என்ற பாடல் இவருக்கு இரண்டாவது ஃபிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது. 1973 ஆம் ஆண்டு, ஆர்.டி பர்மன் இசையமைத்து வெளிவந்த “பரிஜாய்” என்ற திரைப்படதில் இவர் பாடிய “பீதி நா பிட்டை” என்ற பாடல் சிறந்த பின்னனி பாடகருக்கான முதல் “தேசிய விருதை” பெற்றுத்தந்தது.

பிற சிறப்புகள்

1999 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட லதா மங்கேஷ்கர், 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்தனா விருது” மத்திய அரசால் வழங்கி கெளரவிக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டு மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையினை புனேவில் நிறுவினார்.

பாரத ரத்னா விருது வழங்கும் விழாவில்

விருதுகளும் அங்கீகாரங்களும்

  • 1969 ஆம் ஆண்டு “பத்ம பூஷன் விருது” வழங்கப்பட்டது.
  • 1972 ஆம் ஆண்டு பீட்டி நா பிடாய் ரெய்னா (பரிஜாய்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
  • 1974 ஆம் ஆண்டு உலகளவில் அதிக பாடல்களை பாடியதற்காக “கின்னஸ் புத்தகத்தில்” இடம் பிடித்தார்.
  • 1975 ஆம் ஆண்டு ரூதே ரூதே பியா (கோரா காகஸ்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
  • 1989 ஆம் ஆண்டு “தாதா சாஹேப் பால்கே விருது” வழங்கப்பட்டது.
  • 1990 ஆம் ஆண்டு யாரா சீலி சீலி (லேகின்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
  • 1993 ஆம் ஆண்டு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது.
  • 1996 ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது.
  • 1997 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி விருது.
  • 1999 ஆம் ஆண்டு “பத்ம விபூஷன் விருது” வழங்கப்பட்டது.
  • 1999 ஆம் ஆண்டு என்.டி.ஆர் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளருக்கான ஜீ சினிமா விருது.
  • 2000 ஆம் ஆண்டு லண்டனிலுள்ள ஐ.ஐ.எப்.ஏ மூலம் வாழ்நாள் சாதனையாளர் விருது.
  • 2001 ஆம் ஆண்டு ஹீரோ ஹோண்ட மற்றும் ஸ்டார்டஸ்ட் இதழ் மூலமாக சிறந்த பின்னனி பாடகருக்கான மில்லேனியம் விருது வழங்கப்பட்டது.
  • 2001 ஆம் ஆண்டு “நூர்ஜஹான் விருது” வழங்கப்பட்டது.
  • 2001 ஆம் ஆண்டு “மகாராஷ்டிரா ரத்னா விருது” வழங்கப்பட்டது.
  • 2001 ஆம் ஆண்டு “பாரத் ரத்னா விருது” வழங்கப்பட்டது.

ஆஜா ரெ பர்தேசி (மதுமதி 1958), கஹி தீப் ஜலே கஹி தில் (பீஸ் சால் பாத் 1962), தும்ஹீ மேரே மந்திர் தும்ஹீ மெரி (க்ஹண்ட 1965), ஆப் முஜிகே அசே லக்னே லகே (ஜீனே கி ராஹ் 1969), தீதி தேரா தீவார் தீவானா (ஹம் ஆப்கே ஹே ஹைன் கோன் 1994) போன்ற பாடலுக்காக ஃபிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

2022 பிப்ரவரி 6-ம் தேதி லதா மங்கேஷ்கரின் மறைவு ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. கோவிட்-19 மற்றும் வயது தொடர்பான பிற நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் இறந்தார்.

Updated On: 28 Sep 2023 6:46 AM GMT

Related News