kerala moustache woman in tamil-'கேரளாவின் மீசைப்பெண்' : பாரதியின் புதுமைப்பெண் போல ஒரு மீசைப்பெண்..!

kerala moustache woman in tamil-தனித்த அடையாளமாக விளங்கும் கேரளத்து மீசைப்பெண் குறித்த கட்டுரையைக் காண்போம் வாங்க.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
kerala moustache woman in tamil-கேரளாவின் மீசைப்பெண் : பாரதியின் புதுமைப்பெண் போல ஒரு மீசைப்பெண்..!
X

kerala moustache woman in tamil-கேரளத்தின் மீசைப்பெண் (கோப்பு படம்)

kerala moustache woman in tamil-பெண்களுக்கென ஒரு தோற்ற அமைப்பு உள்ளது. இயற்கை வகுத்துள்ள அந்த வடிவமைப்பில் பெண்களுக்கென்று ஒரு தனி தோற்றப்பொலிவு உள்ளது. குறிப்பாக அதில் பெண்களுக்கு முகத்தில் மீசை,தாடி முளைக்காது.


ஆனாலும் சில ஹார்மோன் குறைபாடுகள் இருப்பின் சில பெண்களுக்கு முகத்தில் முடி வளர்வது உண்டு. அது அரிதான சம்பவங்களாக இருக்கும். அந்த வகையில் கேரளாவில் ஒரு பெண் பெருமையுடன் மீசையை வளர்த்து வருவதுடன் அதை முழுமையாக காதலிக்கிறார், அந்த கேரளத்து மங்கை. அந்த மீசைப்பெண் பெயர் ஷைஜா.

“நான் என்னையும் மீசையையும் நேசிக்கிறேன். நான் அதை ஒருபோதும் மறைக்க முயற்சிக்கவில்லை, ”என்கிறார் ஷைஜா முகமலர்ச்சியோடு. சமீபத்தில் முழுமையாக வளர்ந்த மீசையுடன் அவர் பகிர்ந்த படங்களால் அவர் சமூக ஊடகங்களில் வைரலானார்.


35 வயதாகும் ஷைஜா கூறுகையில், "சோகமான" விஷயம் என்னவென்றால், நான் மாஸ்க் அணிந்திருக்கும் போது எனது மீசை பிறருக்குத் தெரிவதில்லை என்பதுதான்.

ஷைஜா தனது மீசையை மரியாதையுடனும், கம்பீரத்துடனும் வருடிக்கொண்டாலும் அவரைச் சுற்றியுள்ளவர்கள், அவரது உறவினர்கள் என்று எல்லோரும் மீசையை அகற்றிவிடும்படி சொல்லிக்கொண்டுள்ளனர்.

'பொதுவாகவே எனக்கு எப்போதும் மீசை இருக்கும். ஆனால், கடந்த சில வருடங்களாக அது நிறைய வளர்ந்து மீசை நல்ல தடிமனாக உள்ளது. அதனால் எல்லோரும் அதை அகற்றும்படி கூறுகின்றனர். இது என் முகம் தானே? அதனால் அது அங்கேயே இருக்கட்டும்' என்று எல்லோருக்கும் பதில் அளித்தேன் என்கிறார் சிரிப்புடன்.

இதுவரை என் வாழ்நாள் முழுவதும் எதிர்மறையான கருத்துகளையும் கிண்டல்களையும் சந்தித்திருக்கிறேன். ஆனால், அது பெரிய அளவில் என்னைத் தொந்தரவு செய்யவில்லை. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன் என்கிறார் ஷைஜா.

kerala moustache woman in tamil

“மக்கள் மனதைப்பற்றி நமக்குத் தெரியாதா..? இன்று என் மீசையை பேசுவார்கள். நாளை வேறொன்றைப்பற்றி பேசுவார்கள். அவர்கள் பேசுகிறார்கள் என்பதற்காக நாம் ஏன் ஒன்றை இழக்கவேண்டும் ? பேசுவது அவர்களின் பிரச்னை. அது மனித இயல்பு'என்கிறார் முதிர்ச்சியடைந்த அனுபவத்துடன்.


'ஒரு நாளும் நான் மீசையை எடுக்க முயற்சித்ததில்லை' என்று கூறியுள்ளார். நான் விரும்புகின்ற ஒன்றை என்னால் அவ்வளவு எளிதாக அகற்றிவிட முடியாது. அது என்னுடன் இருக்கட்டும். அது என்னில் ஒரு பகுதி. என் கணவருக்கும் மகளுக்கும் என் மீசையால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்படியிருக்கும்போது நான் ஏன் பிறரைப்பற்றி கவலைகொள்ளவேண்டும்? ”என்று எதிர்வினா எழுப்புகிறார் ஷைஜா.

ஒரே ஒரு பெயரை மட்டுமே பயன்படுத்தும் ஷைஜா, கேரளாவின், கண்ணூர் மாவட்டத்தில் கணவர் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். மக்கள் என் மீசையை கேலி செய்வதால் நான் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்கிறார் ஷைஜா தெளிவாக. 'மீசை இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை' என்கிறார் ஷைஜா உணர்வுப்பூர்வமாக.

kerala moustache woman in tamil


அதேபோல நாடு முழுவதும் இருந்து இந்த மீசைப்பெண்ணுக்காக பல பாராட்டுதல்களும் கிடைத்துள்ளன. நம்மைப்பொறுத்தவரை ஷைஜாவுக்கு மீசைதான் அவரது அடையாளம். ஏளனங்கள் அவரை என்ன செய்துவிடப்போகிறது? பாராட்டுகளால் அவர் மயங்கவும் இல்லை. ஏளனத்தால் அவர் வீழ்ந்துவிடவும் இல்ல. அவர் அவராக உள்ளார், மீசையுடன்.

"நான் எனது மீசையை விரும்புகிறேன்," வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பிரிவில், ஷைஜா அவரது புகைப்படத்திற்கு கீழே குறிப்பிட்டுள்ள வலிமையான வார்த்தைகள் அவரை தனித்து அடையாளப்படுத்துகிறது.

Updated On: 2023-03-12T12:51:39+05:30

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  ஓட்டுநர் உரிமம் தொலைந்தாலும் மீண்டும் எளிதாக பெற வாய்ப்பு
 2. தமிழ்நாடு
  பாகுபலியானார் எடப்பாடி பழனிசாமி: கோவை அ.தி.மு.க.வினர் வைத்த கட்அவுட்
 3. சினிமா
  எம்.ஜி.ஆரும் தென்னிந்திய நடிகர் சங்கமும்
 4. தமிழ்நாடு
  சாதி, மதம் இல்லா முதல் சான்றிதழ்: சினேகாவை பாராட்டிய நடிகை குஷ்பு
 5. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் இருந்து பங்குனி உத்திர பூஜைக்கு 1000 காவடிகள்...
 6. கரூர்
  கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; மக்கள் அவதி
 7. கல்வி
  employment training workshop-JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் மற்றும்...
 8. கரூர்
  பள்ளிக் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்துக்கு ரூ. 1 கோடி...
 9. தூத்துக்குடி
  அண்ணன் பாணியில் தங்கை: சாலையோர கடையில் தேநீர் அருந்தினார் கனிமொழி...
 10. கரூர்
  கரூர் மாவட்ட க்ரைம் செய்திகள்