/* */

karnataka assembly election result 2023 மக்கள் தீர்ப்பே...மகேசன் தீர்ப்பு சந்தர்ப்பவாத கூட்டணிக்கு சவுக்கடி தந்த கர்நாடக சட்டசபை தேர்தல்

karnataka assembly election result 2023 கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10 ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இன்று காலைமுதல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. காங்கிரசுக்கு தனி மெ ஜாரிட்டி கிடைக்கும் வகையில் முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன.

HIGHLIGHTS

karnataka assembly election result 2023  மக்கள் தீர்ப்பே...மகேசன் தீர்ப்பு   சந்தர்ப்பவாத கூட்டணிக்கு சவுக்கடி   தந்த கர்நாடக சட்டசபை தேர்தல்
X

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிகளைத் தொடர்ந்து காங். ஆட்சி அமைக்கிறது (கோப்பு படம்)

karnataka assembly election result 2023



karnataka assembly election result 2023

கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை துவங்கி நடந்து வருகிறது. கூட்டணி அரசுதான் அமையும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் சந்தர்ப்பவாத கூட்டணிக்கு சவுக்கடி தந்துள்ளனர் கர்நாடக வாக்காளர்கள்.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என அனைத்து கட்சித்தலைவரும் இதனை ஏற்றுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் இந்தியாவை ஆளும் தேசிய கட்சியான பாஜ மாநில அரசாக இருந்தது. அம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை இருந்து வந்தார். இந்நிலையில் இந்த அரசின் பதவிக்காலமானது இம்மாதம் 24 ந்தேதியோடு முடிவுகிறது. இதனால் அம்மாநில சட்டசபை தேர்தலானது கடந்த 10 ந்தேதியன்று ஒரே கட்டமாக எந்தவித பிரச்னையுமின்றி சுமூகமாக நடந்து முடிந்தது. அதன் வாக்குகள் இன்று காலை முதலே நடந்து வருகிறது.

karnataka assembly election result 2023


karnataka assembly election result 2023

கருத்துக்கணிப்பு

அம்மாநிலத்தைப் பொறுத்தவரை பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ்இருந்து வந்தது. கடந்த 5ஆண்டுகால ஆட்சியில் மாநிலத்திற்கென இந்த அரசு எதையும் செய்யவில்லை எனவும். எந்த ஒரு வேலை என்றாலும் அதற்கு 40 சதவீத கமிஷன் பெற்றுதான் அரசில் வேலையாகிறது என்ற குற்றச்சாட்டினை பிரதானமாக வைத்து காங்கிரஸ் வாக்காளர்களிடம் தேர்தல் பிரசாரம் செய்தது. அது மட்டும் அல்லாமல் கர்நாடகமாநிலத்தில் தேர்தல் நடக்க உள்ளதால் அம்மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் முன்னாள் காங். தலைவர் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார். இதற்கு நல்லவரவேற்பு இருந்தது. ராகுல்காந்தி நாடுமுழுவதுமே பாதயாத்திரை மேற்கொண்டு முடித்துள்ளார். இதன் எதிரொலியே இந்த வெற்றி என காங்கிரஸ்தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு பிந்ததைய கருத்துக்கணிப்பு இரண்டிலுமே காங்கிரஸ்தான் வெற்றி பெறும் என பல அமைப்புகள் கருத்துக்கணிப்புகள் வெளியிட்டது தற்போது நிஜமாகியுள்ளது.

karnataka assembly election result 2023


karnataka assembly election result 2023

சந்தர்ப்பவாத கூட்டணிக்கு சவுக்கடி

கர்நாடக மாநிலத்தினைப் பொறுத்தவரை தமிழகம் போல் மாநில கட்சிகள் என்று பெரிதாக எதுவும் இல்லை. ஒரே ஒரு கட்சி முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் மட்டுமே அங்கு செல்வாக்கு பெற்றிருந்தது. இக்கட்சியை அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி தலைமையேற்று வழிநடத்துகிறார்.குமாரசாமி மகன் நிகிலும் இந்த கட்சியில் வேட்பாளராக களமிறங்கி தோல்வியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

karnataka assembly election result 2023


karnataka assembly election result 2023

கர்நாடக மாநில சட்டசபை தொகுதிகள் மொத்தம் 224. இதில் தனிப்பெரும்பான்மை பெற வேண்டும் எனில் எந்த கட்சியானாலும் 113 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் முன்பு நடந்த தேர்தல்களில் தேசிய கட்சிகளான பாஜ மற்றும் காங்கிரஸ் ஆகியவை போட்டியிட்டாலும் பாஜ பெரும்பான்மை பெறாமல் மஜதவோடு கூட்டணி வைத்து ஆட்சிநடத்தியது. இது வழக்கமான நடைமுறையாகும் . கடந்த 2018 ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜ 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 80 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் கூட்டணி ஆட்சியே நடந்து வந்தது. இந்நிலையில் தற்போதைய நடந்து முடிந்த தேர்தலில் கர்நாடக மாநில வாக்காளர்கள் நன்கு யோசித்து முடிவெடுத்து தொங்கு சட்டசபைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காங்கிரசுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் வகையில் வாக்களித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

karnataka assembly election result 2023


karnataka assembly election result 2023

கூட்டணி ஆட்சி அமைந்தால் அவர்களுடைய சுயலாபத்துக்காக பதவி, கமிஷன் உள்ளிட்டவைகளை டிமான்ட் செய்வதால் மாநில மக்களுக்கு பலவிதத்திலும் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவர்கள் கேட்பதை ஆளும் கட்சி செய்து தராவிட்டால் ஆட்சியைக்கவிழ்த்துவிடுவோம் என அவ்வப்போது பயத்தை ஏற்படுத்துவதாக கூட்டணி கட்சிகள் இருப்பதால் மக்கள் இதற்கு முடிவு கட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தற்போது காங்கிரசுக்கு தனி மெஜாரிட்டியை அளித்துள்ளனர் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மக்கள் சக்தி மாபெரும் சக்தி

கர்நாடக தேர்தலில் காங்கிரசுக்கான வெற்றி மக்களுக்கான வெற்றி என அகில இந்திய காங்கிரஸ்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். அவரும் இம்மாநிலத்தைச் சேர்ந்த பழுத்த அரசியல்வாதி ஆவார். கடந்த பாஜ ஆட்சியின் அவலட்சணத்தை மக்களுக்கு தெளிவாக எடுத்துரைத்ததில் இவரின் பங்கு மிக அதிகம். மக்களுக்கு என்னதான் நீங்கள் வாக்குறுதி அளித்தாலும் கர்நாடக மக்கள் மவுனப்புரட்சி நடத்தி மாபெரும் சபையில் காங்கிரசை அமர வைத்துள்ளனர். இவர்களாவது மக்கள் பிரச்னைகளில் அக்கறை காட்டுவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்துள்ளனர்.

karnataka assembly election result 2023


karnataka assembly election result 2023

2024 தேர்தலுக்கு அச்சாரமா?

கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது தனி மெஜாரிட்டியோடு ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில் ஆளும் கட்சியாக இருந்த பாஜ தனிமெஜாரிட்டியைப் பெற முடியவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இம்மாநிலத்தில் நடந்த தேர்தல் 2024 லோக்சபா தேர்தலுக்கு அச்சாரமாக விளங்கும் என பாஜ எதிர்பார்த்திருந்த நிலையில் வாக்காளர்கள் மாற்று முடிவை கையாண்டுள்ளனர். இந்த நிலையே இந்தியா முழுவதும் எதிரொலிக்குமா? அப்படி எதிரொலித்தால் பாஜ பெரும் பின்னடைவைச் சந்திக்குமா? 10 ஆண்டுகாலத்தில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல பெரும்பிரச்னைகளைச் சந்தித்துள்ள நாட்டு மக்கள் என்ன முடிவெடுக்கப்போகிறார்கள் என்பதைப்பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.மற்ற மாநிலங்களில் நடக்க உள்ள சட்டசபை தேர்தல் முடிவுகள் என்ன மாற்றத்தினைத் தரப்போகின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோஷத்தை வாக்காளர்கள் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது நிரூபணமாகியுள்ளதோ என எண்ணத்தோன்றுகிறது.

Updated On: 13 May 2023 7:58 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  5. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  7. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...