/* */

வியட்நாம் புறப்பட்டு சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியட்நாம் புறப்பட்டு சென்றார். ஜி20 மாநாட்டில் இரண்டாம் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை

HIGHLIGHTS

வியட்நாம் புறப்பட்டு சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
X

வியட்நாமுக்கு புறப்பட்டு சென்ற பைடன் 

டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. இந்தியா தலைமையிலான இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஜப்பான், வங்காளதேசம் என பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். நேற்றைய முதல் நாள் உச்சிமாநாட்டில் பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன.

மேலும், மாநாட்டின் முதல் நாளான நேற்றைய நிகழ்வுகளின் முக்கிய அம்சமாக கூட்டுப்பிரகடனம் வெளியிடப்பட்டது. அதை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டன.

கூட்டுப்பிரகடனத்தில் உக்ரைன் - ரஷியா போர் குறித்தும் இடம்பெற்றிருந்தது. போர் தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டுப்பிரகடனத்தில் ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளை நேரடியாக குறிப்பிடாமல் மிகவும் மென்மையான கருத்துக்களே இடம்பெற்றிருந்தன.

ஜி20 நாடுகளின் கூட்டுப்பிரகடனத்தில் அனைத்து நாடுகளும் எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக ஆக்கிரமித்தலை ஏற்படுத்தவோ அல்லது படைகளை பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும்.

அணு ஆயுதங்களின் பயன்பாடு அல்லது அச்சுறுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த சகாப்தம் போருக்கானது அல்ல என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டுப்பிரகடனத்தில் ரஷியாவின் பெயர் இடம்பெறவில்லை. இதன் மூலம் உக்ரைன் போர் விவகாரத்தில் ஜி20 நாடுகள் ஒன்றாக கூட்டுப்பிரகனம் வெளியிட்டு, அதில் ரஷியாவிற்கு கண்டனம் தெரிவிக்காதது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் ஜி20 நாடுகளை ஒரே கருத்தின் கீழ் கொண்டுவர இந்தியா எடுத்த முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஜி20 உச்சிமாநாட்டின் 2ம் நாள் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜி20 உச்சிமாநாட்டை நிறைவு செய்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியட்நாம் புறப்பட்டு சென்றார். உச்சிமாநாட்டின் 2ம் நாள் கூட்டத்தில் ஜோ பைடன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பருவநிலை மாற்றம் உள்ளிட்ட உலகம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு ஜி20 அமைப்பால் தீர்வு காண முடியும் என்பதை டில்லியில் நடந்த மாநாடு நிரூபித்துள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

டில்லியில் நடந்த ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்றார். பிறகு நேற்று இரவு ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த விருந்திலும் அவர் பங்கேற்றார்.

மாநாட்டு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு விமானம் மூலம் வியட்நாம் கிளம்பி சென்றார். அவரை அமெரிக்க பிரதிநிதிகள் வழியனுப்பி வைத்தனர். அதற்கு முன்னதாக ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பருவநிலை மாற்றம் மற்றும் குழப்பங்கள் காரணமாக உலக பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், டில்லியில் நடந்த மாநாடானது, உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளுக்கு ஜி20 அமைப்பால் தீர்வு காண முடியும் என்பதை நிரூபித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Updated On: 11 Sep 2023 4:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...