/* */

நாளை ஜே.இ.இ. மெயின் தேர்வு: 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்க வாய்ப்பு

ஜே.இ.இ. தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் சிபிஎஸ்இ செய்முறை தேர்வை என்ன செய்வது என்று தவிக்கும் நிலை உள்ளது.

HIGHLIGHTS

நாளை ஜே.இ.இ. மெயின் தேர்வு: 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்க வாய்ப்பு
X

பைல் படம்.

நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் அடுத்து ஐ.ஐ.டி. என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து என்ஜினீயரிங் படிக்க ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி அடுத்த கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வு 2 முறை நடத்தப்படுகிறது. அதில் முதல் கட்ட ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வு நாளை (24-ம் தேதி) தொடங்குகிறது.

31-ம் தேதி வரை இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 8 லட்சம் முதல் 9 லட்சம் வரை தேர்வு எழுத வாய்ப்பு உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கு மாணவர்கள் தயாராகி வருகிறார்கள்.

2-ம் கட்ட ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு ஏப்ரல் மாதம் நடக்கிறது. முதல்கட்ட தேர்வில் பங்கேற்றவர்களும், பங்கேற்காதவர்களும் 2-ம் கட்ட தேர்வை எழுத முடியும். ஜே.இ.இ. நுழைவு தேர்வு நடக்கும் நாட்களில் சில சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் செய்முறை தேர்வுகளுக்கு திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே ஜே.இ.இ. தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் செய்முறை தேர்வை என்ன செய்வது என்று தவிக்கும் நிலை உள்ளது. சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்ச்சிக்கு மொத்த மதிப்பெண்ணில் செய்முறை தேர்வு மதிப்பெண்ணும் கட்டாயம் என்பதால் இந்த தேர்வில் மாணவர்கள் பங்கேற்பது மிகவும் அவசியமாகும். எனவே ஜே.இ.இ. மெயின் தேர்வு நடைபெறும் நாட்களில் செய்முறை தேர்வுகளை நடத்தாமல் வேறு நாட்களுக்கு மாற்றும்படி மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 23 Jan 2023 5:15 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  3. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  4. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  5. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  6. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  7. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  9. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  10. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை