/* */

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 13 இடமே கிடைக்கும் என கணிப்பு

2024 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 13 இடங்களே கிடைக்கும் என ஒரு கணிப்பு முடிவில் தெரிய வந்துள்ளது.

HIGHLIGHTS

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 13 இடமே கிடைக்கும் என கணிப்பு
X

தேசிய அளவில் கடந்த வாரம் தனியார் நிறுவனம் ஒன்று தற்போதைய தமிழக அரசியல் நிலை மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல் பற்றி கருத்து கணிப்பு நடத்தி உள்ளது. இந்த கருத்துக் கணிப்பில் தமிழக மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் இருப்பதாகவும் தி.மு.க 23 சதவீதம் வாக்கும், அ.தி.மு.க. 26 சதவீதவாக்கும், பா.ஜ.க. 11 சதவீத வாக்கும், காங்கிரஸ் 4 சதவீத வாக்கும், நாம் தமிழர் கட்சி 5சதவீத வாக்கும், பா.ம.க. 5 சதவீதவாக்கும், அ.ம.மு.க. ,வி.சி.க. கம்யூனிஸ்ட்கள் மற்றும், தே.மு.தி.க ஆகிய கட்சிகள் தலா 2 சதவீத வாக்குகளையும் ம.தி.மு.க. 0.2சதவீத வாக்கும், புதிய தமிழகம் 2 சதவீத வாக்கும், த.மா.கா. 1 சதவீ வாக்கும் மற்றவை9 சதவீத வாக்கும் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் எதிர்ப்பு

இந்நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் பா.ஜ.க 2024 நாடாளுமன்றதேர்தலில் 16 சதவீத வாக்குநிலையை அடைந்து விடும் எனவும் ஆளும் தி.மு.க. அரசுக்கு எதிரான மக்களின் மனநிலையும், தி.மு.க. இரண்டாம் கட்ட தலைவர்களின் பேச்சும், செயலும், பெண்கள் மத்தியில் அரசுக்கு எதிரான நிலை எடுக்க வாய்ப்புள்ளது, தி.மு.க. தொண்டர்களின் மன சலிப்பும் தி.மு.க.விற்கு மேலும் சங்கடமான சூழலை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. தி.மு.க.வின் வாக்கு வங்கியான அரசு ஊழியர்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க தோற்கும்

மேலும் கடந்த காலங்களில் ஆளுங்கட்சியாக தேர்தலை சந்தித்த தி.மு.க. மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதில்லை. ஆகையால் இந்த ஆட்சி காலத்திற்குப் பிறகு எதிர்கட்சி அந்தஸ்தை நிரந்தரமாக இழக்கும் நிலை ஏற்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி.மு.க. தொண்டர்கள் முன்பு போல் இல்லை எனவும் ஆளுங்கட்சி மத்திய அரசின் மீது வைக்கும் விமர்சனத்தாலும், இந்தி திணிப்பு, நீட் எதிர்ப்பு, ஹிந்துத்துவ எதிர்ப்பு போன்ற சில விஷயங்கள் இந்த அரசுக்கே எதிராக மக்கள் திரும்பும் நிலை வரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மத்தியில் காங்கிரஸ் நாடாளுமன்ற எதிர்க்கட்சி அந்தஸ்தை கடந்த இரண்டு தேர்தல்களின் இழந்து நிற்கும் நிலையில் 2024 தேர்தலிலும் அந்நிலையே தொடரலாம். மூன்றாவது அணியில் எந்த ஒரு கட்சியும் சுயமாக 20 இடங்களை பெற இயலாது இதை உணர்ந்த மம்தா பானர்ஜி பிரதமர் போட்டியில் ஒதுங்க துவங்கியுள்ளார்.

பா.ஜ.க.விற்கு 400 இடம்

நித்திஷ், சந்திரசேகர ராவ், சரத்பவார், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வியாதவ், பரூக் அப்துல்லா வரிசையில் ஸ்டாலின் நிலைபாடும் 10 தொகுதிக்குள் அடங்கி விடும்.நவீன் பட்நாயக், ஜெகன் மோகன் ரெட்டி, கெஜ்ரிவால் தனித் தனியாக நிற்பது பா.ஜ.க தேசிய அளவில் 350 இடங்களை வெல்ல வழி வகுக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை நெருங்கும் தொடர் தோல்வியால் காங்கிரஸ் சிதறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மோடிக்கே மக்கள் ஆதரவு

மேலும் இந்திய பிரதமராக மோடியே தொடர வேண்டும் என 73 சதவீத மக்கள் விரும்புவதாகவும் ராகுலுக்கு ஆதரவாக 11 சதவீதமக்கள் மட்டுமே உள்ளனர் என்றும் வட இந்தியாவில் 86 சதவீத மக்களும் தென்னிந்தியாவில் 56 சதவீத மக்களும் மோடியை ஊழலற்ற சிறந்த நிர்வாகி என கூறுகின்றனர் எனவும் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது

தி.மு.க. கூட்டணிக்கு 13 இடம்

தமிழக சட்டமன்றத்திற்கு இன்று தேர்தல் நடைபெற்றால் ஆளுங்கட்சி கூட்டணி 63 இடங்களை பெறுவதே கஷ்டம். அ.தி.மு.க. 98 இடமும் மற்ற இடங்களில் இழுபறியும் நிகழும் அ.தி.மு.க + பா.ஜ.க + பா.ம.க + தேமுதிக + புதிய நீதி கட்சி + புதிய தமிழகம் + அ.ம.மு.க. என கூட்டணி அமையுமானால் 171 இடங்களை இந்த கூட்டணி பெறும் எனவும் கூறுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 13 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி 26 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 11 Nov 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  2. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  3. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  4. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  5. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  6. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...
  7. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  8. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  9. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  10. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்