/* */

2000 ரூபாயை திரும்பப் பெறும் விவகாரம்: பெரிய மீனைபிடிக்க போட்ட சின்ன மீன்

அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும், நமது சுய நலத்தையும் நாம் சார்ந்த அரசியல் கட்சி சார்பாகவே பார்க்கிறோம்

HIGHLIGHTS

2000  ரூபாயை திரும்பப் பெறும் விவகாரம்: பெரிய மீனைபிடிக்க போட்ட சின்ன மீன்
X

பைல் படம்

2000 ரூபாய் திரும்பப்பெறும் விவகாரம் என்பது பெரிய மீனைபிடிக்க போட்ட சின்ன மீன் என்றால் மிகையில்லை. அரசுக்கு என்று அதைத்தாண்டி பல தேவைகள், திட்டங்கள் உண்டு. அது நமக்கு தெரிவதில்லை. ஆனால் அரசு என்பது அதற்கு அப்பாற்பட்டது. அது சரியான சட்டங்களை சரியான நேரத்தில், சரியாக செய்யவில்லை என்றால் நேற்றைய ஸ்ரீலங்கா, இன்றைய பாகிஸ்தான், நாளைய அமெரிகாவாக இந்தியாவும் மாறிவிடும். அப்போது கோடிக்கணக்கில் கட்டிலுக்கு கீழே வைத்திருந்தாலும், அது குப்பையாகிவிடும்.

அரசாங்கம் ரூ.2000 நோட்டுக்கு தடை எதனால்? அரசாங்கத்தின் கோணத்தில் பார்க்க வேண்டும் என்பதற்கக இந்த பதிவு.

முதலில் RBI என்ன சொல்கிறது என்று புரிந்துகொள்வோம். உங்களிடம் இருக்கும் ரூ. 2000 நோட்டுக்களை 30-09-2023 க்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளுங்கள். டெபாஸிட் செய்ய எந்த கட்டுப்பாடும் இல்லை, எத்தனை கோடிகளாக இருந்தாலும் செய்து கொள்ளலாம். மாற்ற வேண்டும் என்றால் எந்த வங்கியிலும் உங்கள் KYC கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அதற்கு ரூ.20,000 என்பது ஒரு நாள் வரம்பு. அதில் நீங்கள் ஒரே வங்கியில் திரும்ப திரும்ப கொடுத்தாலும், அல்லது உங்கள் ஊரில் உள்ள வேறுவேறு வங்கிகளில் கொடுத்து வாங்கினாலும் அதை இப்போது தடுக்க முடியாது போகலாம். காரணம் ஆதார், PAN, DL மூன்றும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

நான் 10 லட்சம் ரூ. 2000 நோட்டுக்களை என் மகள் கல்யாணத்திற்காக வைத்திருக்கிறேன். அதை மாற்ற 250 நாட்கள் வேண்டும், அதெப்படி 130 நாட்களுக்குள் மாற்றுவது என்று கேட்டாலும் குற்றம். காரணம் இந்திய சட்டப்படி ரூ.50,000 க்கு மேலே காசு கையில் வைத்திருப்பது சட்டப்படி குற்றம், எப்படி வைத்திருந்தாய்? அதற்கு வருமான ஆதாரம் என்ன என்று IT அதிகாரிகள் கேட்பார்கள்.

அப்படியெனில் இந்த திட்டம் என்பது பெரிய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் இருக்கிறதே. மோடி திருந்திட்டாரா? ஆச்சரியமாக இருக்கிறதா? மோடி அரசு அப்படி நினைக்கிறது என்றால் அது பெரியளவில் திட்டமிட்டிருக்கிறது என்பது அர்த்தம்.

கொஞ்சம் பின்னோக்கி செல்வோம். இந்த ரூ.2000ம் நோட்டு அடிக்கும் போது மக்களுக்கு அவசரமாக பணம் கொண்டு சேர்க்க வேண்டிய சூழல். எனவே 10 ரூபாய் 200 ரூபாய் நோட்டுக்கும், நான்கு 500 ருபாய் நோட்டுக்கு பதிலாக ஒரு.2000 ரூபாய் நோட்டு கொடுத்தார்கள். அதாவது 4 லாரியில் கொண்டு செல்ல வேண்டிய பணத்தை ஒரு லாரியில் துரிதமாக கொண்டு செல்லவும் அது உதவியது. அதன் மூலம் வேகமாக மக்களிடம் பணம் கொண்டு செல்ல நேர்ந்தது. அப்போ ₹10000 நோட்டு அடிச்சிருக்கலாமே? அதற்கு அடுத்த டினாமினஷென் என்பது 1/5 க்கு குறைவாக இருக்கக்கூடாது என்பது உலக நாடுகளின் அனுபவ அறிவு, இல்லாவிடில் சில்லறை தட்டுப்பாடு வரும் என்பதால் அதை செய்யவில்லை.

இப்போது ஏன்? 2000 ரூபாய் நோட்டுக்கள் என்பது Clean Currency பாலிசியின் படி அந்த நோட்டின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். அதற்கு மேலே போனால் நோட்டு கிழியவோ, அல்லது அழுக்காகவோ அல்லது Counterfeit Currency என்று கள்ள நோட்டுக்கள் வரவும் வாய்ப்பு உண்டு என்பதால் அதை Recycle செய்வது அவசியம். பாகிஸ்தான் திவால் ஆவதற்கு காரணம் இந்த Demonitization மிக முக்கியமனது என்பதை அறிவோம். மீண்டும் சமீபகாலமாக பாகிஸ்தானில் இருந்து ரூ.2000 கள்ள நோட்டு கரன்ஸி வருவதாக ஆதாரங்கள் கிடைத்ததும் இதற்கு முக்கிய காரணம்.

எனவே 2018 மார்ச் மாதம் கடைசியாக அடிக்கப்பட்ட நோட்டு 5 ஆண்டுகள் முடிந்து விட்டது. எனவே சட்டப்படி சிக்கல்கள் எதுவும் இல்லை. அதனால் தான் அந்த நோட்டுக்களின் தரம் குறைவானதாகவே இருக்கிறது. ஆம் அது கிழிந்து போனால் நேரடியாக ரீசைக்கிள் செய்வோம் அல்லவா?

அடுத்து 6.89 கோடியாக இருந்த ரூ.2000ம் ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளுக்கு வந்தால் திரும்ப கொடுக்க வேண்டாம் என்ற புரிதலின் அடிப்படையில் கிட்டத்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறைப் படுத்தியதில் பாதி பணம் வங்கிக்கு வந்து விட்டது. அதனால் நம்மால் ரூ.2000 நோட்டுக்களை பார்க்க முடியவில்லை. ஆனால் அதில் 3.62 லட்சம் கோடி பணம் புழக்கத்திலேயே இல்லை. எங்கேயே பதுங்கி விட்டது. அது ஒழுங்காக புழக்கத்தில் இருந்திருந்தால் இந்த தனிப்பட்ட ஒரு நடவடிக்கை தேவையில்லை.

இப்போது அந்த பதுக்கப்பட்ட பணம் செப்டம்பருக்குள் வரும் போது அது இன்னும் அனுமதிக்கப்பட்ட நோட்டு என்பதால், வங்கிகளுக்கு இடையேயான வர்த்தகத்தில் மட்டும் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது. அதாவது ஹைதாராபாத்தில் உள்ள ICICI வங்கி கோயம்புத்தூரில் உள்ள ஒரு வங்கிக்கு செட்டில் செய்ய ₹500 கொண்ட நான்கு லாரிகளுக்கு பதிலாக ரூ.2000 கொண்ட ஒரு லாரி போதும். ஆனால் இது மக்களுக்கோ, தொழில்களுக்கோ இந்த பணம் வராது. ஆம் 31.2 லட்சம் கோடி பணம் இந்திய அரசால் அடிக்கப்பட்டு இருந்தாலும் சுமார் 21.8 லட்சம் கோடி பணம் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. எனவே தற்போது உள்ள ₹2000 பணம் RBI வசம் Cash Reserve Ratio போன்றதொரு வகையில் நின்றுவிடலாம். இது கருப்பு பணத்தை தடுக்குமா?

தடுக்காது, குறைக்கும், முக்கியமாக காட்டிக் கொடுக்கும். ஹவாலா போலவே இப்போது இந்தியாவில் மிகப்பெரிய நெட்வொர்க் உள்ளது. அவர்களிடம் ஒரு ஆயிரம் கோடியை கொடுத்தால் அது நூறு பேரிடம் கைமாறி, அங்கிருந்து மேலும் பத்து பேர் என்று ஆயிரம் பேரிடம் கைமாறினால் அந்த பணம் சிறு சிறு கடைகள் மூலம், எளிதாக மக்கள் கைமாறும்.

ஆம், தற்போது ஒரு.கோடி ரூபாயை கள்ளத்தனமாக மேற்கு வங்கத்திற்கு அனுப்ப 1% கமிஷன் கொடுக்க வேண்டும். இப்போது இதை மாற்ற 5-10% கொடுக்க வேண்டும். நாட்கள் நெருங்க, நெருங்க அதன் % உயரும். மேலும் இது Legal Tender எனபதால் கடைகளில், அரசு அலுவலகம், பேங்க் என்று எங்கேயும் மாற்றலாம். எனவே இது ஒன்றும் மாற்ற முடியாதது அல்ல, ஆனால் அதில் சிக்கல் உள்ளது. அது என்ன?

10% கமிஷனுக்காக நான் 1 லட்சம் மாற்றுகிறேன் என்றால் நாளை எனக்கு IT இடம் இருந்து கேள்வி வரும். அதுவும் எனது வங்கிகளில் Transaction சமீபத்தில் எதுவும் இல்லாமல் பயன்படுத்தாத அல்லது குறைவாக இருக்கும் அக்கவுண்டில் அதிகமாக பயன்படுத்தினால் அது சந்தேகத்திற்கு உரியது. என்னை நாளை கேள்வி கேட்டால் நான் அவர்கள் அழுத்தம் தாளமுடியாமல் யாரிடம் வாங்கினேன் என்று கை காட்டி விடுவேன். அந்த நெட்வ்வொர்க்கை பின் தொடர்ந்தால் அதன் சோர்ஸ் என்ன என்பது தெரிந்துவிடும். எனவே இது சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் யுக்தி! இது சோர்ஸை கண்டுபிடிக்க மட்டுமல்ல, இந்த இந்திய ஹவாலா நெட்வொர்க்கை இதன் மூலம் ஓரளவு பிடிக்க முடியும். அதன் மூலம் கள்ளச் சந்தையை இன்னும் கொஞ்சம் குறைக்கலாம்.

மேலும் பாகிஸ்தானில் ரெடியாக இருக்கும் ரூ.2000 கரன்ஸி இப்போது உள்ளே வர வாய்ப்புகள் உண்டு. அதை தடுக்க அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும். அரசியல் கட்சிகள், அரசியவாதிகளிடம் இருக்கும் ரூ.2000 இப்போது வெளிவரும். ராஜஸ்தான் அரசில் அலுவலகத்திலேயே கணக்கில் வராத 1 கோடி ரூ.2000 நோட்டுக்கள் பிடிபட்டுள்ளது.

இதுபோல வெளிவரும் நோட்டுக்களால் அவை திடீரென மக்களிடம் புழக்கத்தில் அதிகரிக்கும். மாறாக ரூ.500, ரூ.200, ரூ.100 நோட்டுகளுக்கு தட்டுப்பாடு அதிகரிக்கும். இதை தடுக்க அரசு மட்டும்மல்ல, மக்களாகிய நாம் அரசுக்கு உதவ வேண்டும். உதாரணமாக உங்கள் அருகில் ஒரு சில கடைகள் Wholesale விலையில் என்று விலை குறைவாக பொருட்கள் கிடைக்கும். அது போன்ற கடைகள் (உங்களுக்கு அது எந்த கடை என்பது புரியும்). அங்கே மட்டுமல்ல, எங்கே பொருட்களை வாங்கினாலும் GPay/PhonePay /PayTM, Credit/Debit Card மூலம் பரிவர்த்தனை செய்தால் அதற்கான வாய்ப்பை நாம் குறைத்து அரசுக்கு உதவ முடியும்.

மேலும் 5% கமிஷன் கிடைக்கிறது என்று செய்யாதீர்கள். ஏனெனில் நீங்கள் கமிஷனாக வாங்கிய சில ஆயிரங்களை வைத்து அரசு ஒன்றும் உங்களை தண்டிக்காது. ஆனால் அரசு உங்களை பிடித்து யாரிடம் இருந்து வாங்கினாய் என்றால் சொல்லாமல் இருக்க முடியாது. அதன் பின்னால் அந்த திருட்டு கும்பலை காட்டி கொடுத்தற்காக உங்களுக்கு நாளை பிரச்சினை வரலாம்.

தற்போது வாங்கப்படும் 2000 ரூபாய் நோட்டுக்கள் டிஜிட்டல் கரன்ஸியாக மாறும். அநேகமாக இவை இந்த வருட இறுதிக்குள் 2000 ரூபாய் எல்லாம் வங்கிக்கு வந்த பின் ஆகலாம். எனவே இதில் உள்ள முக்கிய நோக்கங்கள்.

1) Clean Currency Policy மூலம் கள்ள நோட்டுக்களை குறைப்பது

2) கருப்பு பணம் பதுக்கல்காரர்களுக்கு பிரச்னை கொடுப்பது.

3) இந்த மாற்றங்கள் மூலம் நதிமூலம், ரிஷிமூலம் அறிவது.

4) Digital Transactions களை அதிகரிப்பதன் மூலம் GST ஐ அதிகரிப்பது.

இது தவிர ஆளும் அரசியல் கட்சிக்கு சில சாதகமும், எதிர்கட்சிகளுக்கு பாதகங்களும் உண்டு. இதன் மூலம் ஆதாயம் அடைவது அரசும் மக்களும்தான்.

Updated On: 23 May 2023 4:45 AM GMT

Related News