/* */

தேசியக்கொடி வர்ணங்களுக்கு, ஜோதிடத்தில் இப்படி ஒரு விளக்கமா? அட... அசத்தறாங்கப்பா!

நாளை மறுதினம், இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். அந்த வேளையில் நமது நாட்டின் தேசியக்கொடி பற்றிய ஜோதிட ரீதியான விளக்கங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. அதே நேரத்தில், பெருமையும் கொள்ள வைக்கிறது.

HIGHLIGHTS

தேசியக்கொடி வர்ணங்களுக்கு, ஜோதிடத்தில் இப்படி ஒரு விளக்கமா? அட... அசத்தறாங்கப்பா!
X

தேசிய கொடி வர்ணங்களுக்கு, ஜோதிட ரீதியான அர்த்தங்கள் நம்மை பெருமிதப்படுத்துகிறது.

இந்திய நாட்டின் தேசிய கொடியான மூவர்ணக் கொடியில் இருக்கும் மூன்று முக்கிய நிறங்களும், நடுவில் இருக்கும் அசோக சக்கரத்தின் நீல நிறத்திற்கும் ஜோதிட ரீதியில் சில விளக்கங்கள் உள்ளன.

தேசிய கொடி நிறங்களின் விளக்கம் :

தேசியக் கொடியில் உள்ள காவி நிறம் நாட்டின் வலிமையையும், தைரியத்தையும், சுதந்திரப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் தியாகத்தை குறிக்கிறது. நடுவில் இருக்கும் வெள்ளை நிறம் மற்றும் அசோக சக்கரம் அமைதியையும், உண்மையையும் குறிக்கிறது. கீழே உள்ள பச்சை நிறமானது, நம் நாட்டின் நிலத்தின் வளர்ச்சி மற்றும் புனிதத் தன்மையைக் குறிக்கிறது.

ஜோதிட ரீதியான விளக்கம் :

காவி நிறம் :

காவி நிறம் சக்தியின் அடையாளமாகும். ஜோதிடத்தில் காவி நிறம் நவகிரகங்களின் தலைவனான சூரியனைக் குறிக்கக்கூடியது. இந்த நிறம் தன்னம்பிக்கையாக கருதப்படுகிறது. பூமியின் ஒவ்வொரு துகளிலும் புதிய ஆற்றலை நிரப்புபவர் சூரியன்.

வெள்ளை நிறம்:

வெள்ளை நிறம் அமைதியின் சின்னமாக கருதப்படுகிறது. வேத ஜோதிடத்தில், வெள்ளை நிறம் சந்திரனின் பிரதிநிதியாகக் கருதப்படுகிறது. இதனுடன், இந்த நிறம் வீனஸ் கிரகத்துடன் தொடர்புடையது. சந்திரன் மனம், தாய், பாசம், மென்மை போன்றவற்றின் காரக கிரகம். மறுபுறம், சுக்கிரன் அழகு, பொருள், கலை போன்றவற்றின் காரக கிரகம். எனவே, வேத ஜோதிடத்தின்படி, இந்தியாவின் மூவர்ணத்தில் வெள்ளை நிறம் மட்டுமல்ல, அமைதியின் உணர்வை நமக்கு தருகிறது, ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர அன்பையும், நல்லிணக்கத்தையும் பேணுவதற்கான செய்தியையும் தருகிறது. மூவர்ணக் கொடியின் வெள்ளை நிறம், நமது படைப்பாற்றலை அதிகரித்து, கலைத் துறைகளில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான செய்தியையும் நமக்குத் தருகிறது.

பச்சை நிறம் :

மூவர்ணத்தில் இருக்கும் பசுமை எனும் பச்சை நிறம், வேத ஜோதிடத்தில் புதன் கிரகத்துக்கு உரியதாகும். தொழில் நுட்பம், பகுத்தறிவுத் திறன், வியாபாரம், தொழிலைக் குறிக்கக்கூடிய காரகன் புதன் பகவான். இந்த தேசம் வெற்றிகரமாக உருவாக்க இதுவும் முக்கியமானதாகும். அதுமட்டுமின்றி, பச்சை நிறம் இயற்கைக்கு நன்றியை வெளிப்படுத்தும் செய்தியை அளிக்கிறது. நமது திறமை மற்றும் புத்திசாலித்தனத்தால் தேசத்தை பலப்படுத்துகிறது.

நீல நிறம் :

தேசிய கொடியின் நடுவில் நீல நிறத்தில் அசோக சக்கரம் உள்ளது. இது ஜோதிட ரீதியாக சனியுடன் தொடர்புடைய நீல நிறமாகும். சனி பகவான் நீதியின் கடவுள். நீதியை எடுத்துரைப்பவர். மக்களைக் குறிப்பிடுவதும் கூட. தேசத்தின் அடிப்படையாக இருக்கும் மக்கள் ஒற்றுமையுடன் ஆதரவுடன் தேசத்தின் முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும் நிறம்.

இதை படிக்கும்போது, 'இந்தியன்' என்ற பெருமிதத்தில் நாமெல்லாம் சட்டை காலரை துாக்கி விட்டுக்கொள்ளலாம் போலிருக்கிறது.

Updated On: 13 Aug 2022 7:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி