/* */

ஒடிசா ரயில் விபத்து திட்டமிட்ட சதிச் செயலா?

ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து ஒரு திட்டமிட்ட சதிச்செயலா என்ற சந்தேகம் வலுத்துள்ளளது. சிக்னல் கருவி உடைக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

HIGHLIGHTS

ஒடிசா ரயில் விபத்து திட்டமிட்ட சதிச் செயலா?
X

ஒடிசா ரயில் விபத்து (கோப்பு படம்)

ஒடிசா மாநிலத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய கோர விபத்தில் 278 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரயில்கள் மோதலுக்கு மனித தவறு காரணமா? அல்லது சிக்னல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமா? என்ற கேள்விக்குறி எழுந்தது. இந்தநிலையில் மத்திய ரயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், “விபத்தின் பின்னணியில் சதி வேலை இருக்கக்கூடும்” என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இதில் உண்மையை கண்டுபிடிப்பதற்காக சி.பி.ஐ. விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்தது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகளின் 10 பேர் கொண்ட குழு நேற்று ஒடிசா மாநிலம் பலாசோர் மாவட்டத்துக்கு சென்றது.

அங்கு அந்த குழு பல்வேறு பிரிவுகளாக பிரிந்து விசாரணையில் ஈடுபட்டது. நேற்று இரவு வரை அந்த விசாரணை நீடித்தது. இந்த விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமை மாலை 6.52 மணிக்கு அந்த ரயில் பகாநகர் பஜார் ரயில் நிலையத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கந்தபாரா ரயில் நிலையத்தை 128 மைல் வேகத்தில் கடந்துள்ளது.

6.54 மணிக்கு கோர மண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பகா நகர் பஜார் ரயில் நிலையத்தை கடக்க பச்சை நிற சிக்னல் கிடைத்தது. ரயில் கட்டுப்பாட்டு அறை சிக்னல் பிரிவும் இதை உறுதி செய்தது. இதையடுத்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர் தொடர்ந்து அதே வேகத்தில் ரெயிலை செலுத்தினார்.

அடுத்த நிமிடம் தான் மாற்றம் நிகழ்ந்தது. அதாவது 6.55 மணிக்கு பிரதான தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பக்கவாட்டில் உள்ள லூப் லைனுக்கு மாறியது. ரயிலுக்கான சிக்னல் மற்றும் தடம் மாற்றும் மின்னணு அமைப்பு முறையில் (எலக்ட்ரானிக் இன்டர்லாக் கிங் சிஸ்டம்) செய்யப்பட்ட மாற்றம் காரணமாகத்தான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வேறு தடத்துக்கு மாறி உள்ளது. இதுதான் விபத்துக்கான முக்கிய காரணம் என்று சிபிஐ அதிகாரிகள் முடிவுக்கு வந்துள்ளனர்.

அவர்களது சந்தேகம் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலை தடம் மாற்றி விட்டது யார்? என்பதுதான். ரயில் தண்டவாளத்தில் ரயில்வே கேட், சிக்னல்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாயின்ட் எந்திரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். இவை கட்டுப்பாட்டு அறைகளின் பேனல்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஒட்டு மொத்த கட்டமைப்பும் இன்டர்லாக்கிங் என்று அழைக்கப்படுகிறது. ஒரு ரயில் குறிப்பிட்ட பாதையில் செல்லும் போது அந்த வழித் தடத்தில் வேறு எந்த ரயிலும் இல்லை என்பது இன்டர்லாக்கிங் மூலம் முதலில் உறுதி செய்யப்படும்.

உதாரணமாக ரயில்வே கேட் பூட்டப்பட்டு இன்டர் லாக்கிங் கட்டமைப்புடன் இணைத்த பிறகு, கேட் கீப்பர் நினைத்தால் கூட ரயில்வே கேட்டை திறக்க முடியாது. ரயில் கடந்து சென்ற பிறகு கட்டுப்பாட்டு அறையில் இருந்து பூட்டு திறக்கப்படும். அதன் பிறகே கேட் கீப்பர், ரயில்வே கேட்டை திறக்க முடியும்.

இதே போல் இணைப்பு தண்டவாளங்களில் ஏதாவது ஒரு ரயில் நிறுத்தப்பட்டிருந்தால் அங்குள்ள பாயின்ட் எந்திரம் வாயிலாக இணைப்பு தண்டவாளம் ‘லாக்’ செய்யப்படும். இதன்படி வேறு எந்த ரயிலும் அந்த இணைப்பு தண்டவாளத்துக்கு செல்ல சிக்னல் கிடைக்காது. ஒடிசாவின் பகா நகர் பஜார் பகுதியின் இணைப்பு தண்ட வாளத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. அங்குள்ள பாயின்ட் எந்திரம் ‘பாயின்ட்17’ என்று அழைக்கப்படுகிறது. தவறான மாற்றமே மிகப்பெரிய ரயில் விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.

பாயின்ட் 17-ன் தவறான ‘லாக்’ காரணமாக இன்டர் லாக்கிங் தானியங்கி நடை முறையில் இணைப்பு தண்ட வாளத்தில் செல்ல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு சிக்னல் கிடைத்து இருக்கிறது. அந்த பாயின்ட் எந்திரத்தில் எவ்வாறு மாற்றம் ஏற்பட்டது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தான் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

அவர்களது தீவிர விசாரணையின் போது இன்டர் லாக்கிங் கருவி உடைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதன்மூலம் இன்டர்லாக்கிங் கருவியை யாரோ திட்டமிட்டு மாற்றி இருப்பதை சி.பி.ஐ. அதிகாரிகள் உறுதி செய்தனர். கோரமண்டல் ரயில் சிக்னலுக்கான இன்டர் லாக்கிங் கருவியில் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை டெல்லியில் உள்ள பெயர் வெளியிட விரும்பாத ரயில்வே இலாகாவின் மூத்த அதிகாரி ஒருவரும் உறுதிபடுத்தினார். இந்த சதிச் செயலை செய்தது ரயில்வே ஊழியரா? அல்லது வெளியில் இருந்து வந்த நபரா? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இன்டர்லாக்கிங் கருவியில் நாசவேலை செய்தவர்கள் அதை மறைப்பதற்காக சில டிங்கரிங் வேலைகளை செய்திருப்பதையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். இதன் மூலம் சிக்னலை மாற்றும் செயலை சிலர் திட்டமிட்டு நடத்தி இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து செல்லக்கூடிய பகாநகர் பஜார் ரெயில் நிலையத்தில் உள்ள கேபின் அரங்கில் இந்த நாச வேலைகள் அரங்கேறி உள்ளன. இதை உறுதிபடுத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கு முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நேற்று செவ்வாய்க்கிழமை 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடர்ந்தனர். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வருவதற்கு முன்பு பகாநகர் பஜார் ரயில் நிலைய இன்டர்லாக்கிங் கேபின் பகுதிக்கு யார்? யார்? வந்து சென்றனர் என்ற விசாரணையை தொடங்கி உள்ளனர். இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ரயில்களுக்கான பாதையை தேர்வு செய்து லாக் செய்து விட்டால் அந்த ரெயில் அந்த பாதையை கடந்த பிறகு தான் அந்த கருவியை திறக்க முடியும். இதை அனைத்து ரயில் பாதுகாப்பு நிபுணர்களும் ஒத்துக் கொள்கின்றனர்.

எனவே இன்டர்லாக்கிங் கருவியில் நாச வேலை செய்ததன் மூலம் மிகப் பெரிய விபத்தை ஏற்படுத்தி இருப்பதை சி.பி.ஐ. முதல் கட்ட விசாரணையில் உறுதிபடுத்தி உள்ளது. இன்டர்லாக்கிங் பற்றி நன்கு தெரிந்தவர்கள் தான் இந்த சதி செயலை செய்திருக்க முடியும் என்றும் கருதப்படுகிறது. இதை உறுதிப்படுத்த விபத்து நடந்த பகுதியில் இன்று காலை முதல் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டனர்.

Updated On: 7 Jun 2023 1:51 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!