/* */

pan card aadhar card link tamil-பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? பார்க்கலாம் வாங்க

pan card aadhar card link tamil-

HIGHLIGHTS

pan card aadhar card link tamil-பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? பார்க்கலாம் வாங்க
X

pan card aadhar card link tamil-ஆதார் எண்ணுடன் pan கார்டு இணைப்பு.

How-can-Link-aadhar-card-with-PAN-number-பான் கார்டுடன் ஆதார் எண்ணை எவ்வாறு இணைப்பது என்பதை நாம் பார்க்கலாம். நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம்.

pan card aadhar card link tamil-பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பு கடந்த 2019ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. கால அவகாசம் பலமுறை நீட்டிப்புச் செய்து மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்திருந்தது. புதிதாக பான்கார்டு பெறுவோர் எவ்வாறு ஆன்லைனில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது என்பதை அறிந்துகொள்ளலாம். அது எளிதான காரியமே. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் காணுவோம் :-

அதன் வழிமுறைகள் :

1. வருமான வரித் துறை இணைய தளத்திற்கு முதலில் செல்லுங்கள்.

(https://www.incometaxindiaefiling.gov.in/home)

2. உங்களின் இடதுபுறத்தில் உள்ள Link Aadhaar என்ற லிங்கை 'க்ளிக்' செய்யுங்கள்.

3. இப்போது உங்களுக்கு புதிதாக பக்கம் ஒன்று திறந்திருக்கும்.

4. அதில் கொடுக்கப்பட்டுள்ள முதல் கட்டத்தில் பான் எண்ணை நிரப்புங்கள். இரண்டாவது கட்டத்தில் ஆதார் எண்ணை நிரப்புங்கள்.

5. மூன்றாவது கட்டத்தில் ஆதாரில் உள்ளபடி உங்கள் பெயரை அப்படியே எழுதுங்கள்.

6. அதன்கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கேப்சா கோடை (captacha code) சரியாக நிரப்புங்கள்.

7. பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களின் வசதிக்காக கேப்சா கோடிற்கு பதிலாக ஒன் டைம் பாஸ்வேர்டு வசதி செய்யப்பட்டுள்ளது. கேப்சா கோடை பயன்படுத்த விரும்பாதவர்கள் ஒன் டைம் பாஸ்வேர்டு வசதியையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

8. இவைகளை நிரப்பிய பின் 'லிங்க் ஆதார்' என்ற பட்டனை அழுத்தினால் போதும். உங்கள் ஆதார்,பான் கார்டுடன் இணைக்கப்பட்டுவிடும்.

pan card aadhar card link tamil-அவ்ளோதான் சிம்பிள் வேலைங்க. நீங்களே உங்கள் ஆதார் எண்ணை பாண் கார்டுடன் இணைத்துவிடலாம்.

Updated On: 20 Jun 2022 7:03 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  2. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  3. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  4. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  5. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  7. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
  8. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...
  9. கல்வி
    வெளிநாட்டில் படிக்கணுமா..? கடன் விபரங்களை தெரிஞ்சுக்கங்க..!
  10. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்